அப்படியே வெளியே வந்துட்டீங்களா மோனிஷா.. நக்கலடிக்கும் ரசிகர்கள்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மோகம் பல கதாநாயகிகளை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருப்பது போல தான் அரண்மனைக்கிளி சீரியல் ஜானு வையும் ஆட்டிப் படைத்திருக்கிறது.
இந்த சீரியலில் இவரைப் பார்த்ததற்கும் தற்போது இவரது போட்டோ ஷூட்டில் இவரை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஐயோ என்று வாயில் கையை வைத்திருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு ரசிகர்களை வெட்கப்படும் அளவிற்கு குளியலறையிலிருந்து அப்படியே வெளியே வந்து ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார் .அதை பார்த்த ரசிகர்கள் நன்றாகவே ரசிக்கிறார்கள்.

கேரளத்து பைங்கிளி
இவர் கேரளத்து பைங்கிளி ஆக இருந்தாலும் தமிழில் அழகாக உச்சரித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருந்தார். அரண்மனைக்கிளி சீரியல் ஜானு கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாராலும் இந்த அளவிற்கு நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர் .

ஜானுவை மிஸ் பண்றோம்
அந்த சீரியலை திடீரென்று முடித்ததும் சீரியலின் ரசிகர்கள் ரொம்பவே இவரை மிஸ் பண்ணி இருக்கிறார்கள். இவரது சொந்த ஊர் கேரளா என்பதால் இவர் சூட்டிங்காக தனது கணவரையும் குடும்பத்தையும் விட்டு விட்டு சென்னை வந்து நடித்துக் கொடுத்துக்கொண்டிருந்தார் .ஆனால் லாக்டோன் நேரத்தில் இவர் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார் .

கேரளாவிலிருந்து கிளுகிளு
தற்போது அவர் அங்கேயே இருந்து கேரளாவின் பசுமையையும் இவரது வளமையையும் போட்டோசூட் களால் ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். விதவிதமாக போட்டோக்களாக எடுத்து குவித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து தான் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த அளவிற்கு இறங்கி பண்ணுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

குத்து விளக்கு மாதிரி
இவரை சீரியலில் குடும்ப குத்துவிளக்காக சேலையில் ஜொலிக்கும் தேவதையாக தங்கள் வீட்டுப் பெண்ணாக பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் திடீரென்று இவர் இந்த அளவிற்கு இறங்கி விட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் தான் தவித்து வருகிறார்கள். இவர் முதலில் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .

தமிழ் சீரியல்கள்
அதன் மூலமாகத்தான் இவருக்கு இந்த சீரியலின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் முதலில் இதில் நடிப்பதற்கு கொஞ்சம் தயங்கவே செய்திருக்கிறார் .ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இந்த அளவிற்கு இடம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை யாம். இந்த சீரியலில் கூட நடிக்கும் நடிகர் நடிகைகளும் இவருக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் மிஸ்ஸிங்
அதனால் தான் அவர் இந்த நேரத்தில் அவர்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம். அதுமட்டுமல்லாமல் மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதே அரண்மனைக்கிளி அர்ஜுனுடன் ஹீரோயினியாக நான்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் .அர்ஜுன் ஜானு ஜோடி பொருத்தம் நன்றாகவே இருந்ததால் இவர்களின் போட்டோக்களை வைத்து பல வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சாங்குகளில் இவர்களின் போட்டோஸ்கள் தான் இடம்பெற்றிருந்தது. ஆனால் இப்போது இவர்களை காணாமல் ரசிகர்கள் தவித்து தான் வருகிறார்கள்.

தவிக்கும் ரசிகர்கள்
ரசிகர்களின் தவிப்புகளை புரிந்துகொண்ட மோனிஷா விதவிதமாக போட்டோக்களை எடுத்து பின்னி வருகிறார் .அதுவும் இப்போது குளியலறையிலிருந்து குளியலறையை உடையை போட்டுக்கொண்டு அப்படியே அதை போட்டோக்களாக எடுத்து குவித்திருக்கிறார். திடீரென்று இவரது இந்த மாதிரி போட்டோஸ்கள் வெளியானதும் நெட்டிசன்கள் விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications