பாருங்களேன்...மூக்குத்தி முருகன் ஜோடியையும் கூட்டியாந்துட்டாங்க!
சென்னை: விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை கடந்த இரண்டு வருடங்களாக ஆரம்பித்து இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடத்தி முடித்தார்கள், இப்போது இதன் அடுத்த சீசன் துவங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் நட்சத்திரங்கள் அவர்கள் ஜோடியுடன் கலந்துக் கொள்வார்கள். இதன் மூலம் சின்னத்திரை நட்சத்திரங்களின் ஜோடியும் விஜய் டிவியின் எதாவது ஒரு நிகழ்ச்சியில் அடிக்கடி கலந்துக்கொண்டு வருவது தானாக நடக்கும்.
பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பது போல, சின்னத்திரை பிரபலங்களின் பின்னால் இருந்த இவர்களின் பார்ட்னர்ஸ் ஒரு செலிபிரிட்டியாகவும் வலம் வர வாய்ப்பு உள்ளது. அப்படியான மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் சூப்பர் சிங்கரில் புகழ் அடைந்த மூக்குத்தி முருகன் தனது மனைவியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.

மணிமேகலை உசேன்
சென்றமுறை மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் அப்போதுதான் திருமணம் ஆகி இருந்த விஜே மணிமேகலை மற்றும் அவரது கணவர் உசேன் இருவரும் கலந்துக்கொண்டனர். அப்போது விஜய் டிவி இவர்கள் இருவருக்கும் ஊரறிய கல்யாணம் செய்து வச்சு அழகு பார்த்தது. அன்று விஜய் டிவி பக்கம் ஒதுங்கிய மணிமேகலை இன்னும் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் விஜேவாக பணி செய்து வருகிறார்.

மூக்குத்தி முருகன்
கடந்த சூப்பர் சிங்கர் சீசனில் மூக்குத்தி முருகன் கேள்வி ஞானத்தால் பாடல்கள் பாடி, அனைவரையும் அசத்தி வந்தார். உலகத் தமிழர்கள் மனதில் இவர் நல்ல பாடகராக அறிமுகம் ஆகி இருக்கார். மலேசியா வாசுதேவன் குரலில் இவர் பாடினால் அனைவரும் ரசிக்கும்படி மிக அற்புதமாக இருக்கும். இவரை விஜய் டிவி அந்த நிகழ்ச்சி முடிந்தும் பல நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது அழைத்து கவுரவிக்கும்.

டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்
அண்மையில் விஜய் டிவியில் நடைப்பெற்ற டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேக்கு வந்து, சூப்பர் ஜட்ஜாக கலந்துக்கொண்ட நடிகை ராதாவின் உருவப்படத்தை லைன் டிராயிங் வரைந்துக்கொண்டே, முதல் மரியாதை படத்தின் பாடலை பாடி அசத்தினார். இப்போது மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இவர் தனது மனைவியோடு கலந்து கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கதிர் அதாவது குமரன் தனது ரியல் ஜோடியுடன் கலந்து கொள்கிறார். சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நாயகன் வேலு தனது ஜோடியுடன் கலந்துக்கொள்கிறார். ஆதித்யா சானலில் நகைச்சுவை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த சைனா பெண் தாப்பா தனது கணவருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். இன்னும் இப்படியான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி மிக விரைவில் துவங்க உள்ளது.












Click it and Unblock the Notifications