பால் நிலவு.. மொட்டை மாடி.. தனிமை. நெருங்கி வரும் உணர்வுகள்.. ம்ம்ஹூம்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியலை ஒரு முறை பார்த்துவிட்டால் மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடுவது என்னவோ உண்மைதான்.
சந்தோஷ் ஜனனி கட்டாய கல்யாணம், ஜனனி மனசு மாறுவது, சந்தோஷ் இன்னும் டைவர்ஸ் வேலைகளை பார்ப்பது, அவ்வப்போது இருவரின் மனமும் தடுமாறுவது என்று ரொம்ப டீசண்டா கதை போகுது.
திடீர்னு மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் மயங்கி விழுந்துட்டார், சந்தோஷின் அண்ணி சொல்கிறார், நான் அப்பவே சொன்னேன் மாமா ரெண்டாவது தாலி சடங்கு வேணாம்னு. இப்போ பாருங்க நல்லா இருந்த உங்க உடம்பு திடீர்னு சரியில்லாம போச்சுன்னு.

ஏற்பாடு
மாமா இதுக்கு நான் ஒரு பூஜை ஏற்பாடு பண்றேன் மாமா.. நீங்க என்ன சொல்றீங்கன்னு மாமனாரைப் பார்த்து சந்தோஷ் அண்ணி கேட்கறாங்க. நீ எது செய்தாலும் குடும்பத்துக்கு நல்லாதாத்தான் இருக்கும். உன் விருப்பப்படி செய்னு மாமனார் சொல்றார்.

பால்
ஜனனி சந்தோஷுக்கு தம்ளரில் பால் தருகிறாள். நீங்க குடிக்கலையான்னு கேட்கறான் சந்தோஷ், வேணாம், நீங்க குடிங்கன்னு சொல்றா ஜனனி. இன்னொரு தம்ளரை எடுத்து, அதில் பாதி பாலை ஊத்தி ஜனனிக்கு தருகிறான். வேண்டாம் சந்தோஷ்னு ஜனனி சொல்ல., இவ்வளவு பிடிவாதமா வேணாம்னு சொல்றீங்களே பாலில் தூக்க மருந்து, விஷம் ஏதாவது கலந்துட்டீங்களான்னு கேட்கறான் சந்தோஷ் விளையாட்டாக.

எதிரி
ஆமாம், நீங்க எனக்கு எதிரி நாடு பாருங்க.. உங்களை கொன்னுட்டு, நான் அரியாசனத்தில் அமர..என்று சிரிக்கிறாள் ஜனனி. இல்லை.. ஒரு அழகான பையனை மயக்கறதுக்கு கூட மருந்து கலந்திருக்கலாம்னு சொல்றான் சந்தோஷ். அழகான பையனா எங்கே..எங்கேன்னு தேடறது போல சந்தோஷை வெறுப்பேத்தறாங்க ஜனனி.

தாலி தப்பா
சந்தோஷ் ஒருவேளை அக்கா சொல்ற மாதிரி நம்ம ரெண்டாவது தாலி கட்டிக்கிட்டது தப்பா போச்சான்னு கேட்கறா ஜனனி. நீங்க வேற அண்ணி வேணும்னே ஏதாவது சொல்லுவாங்க.. எனக்கு என்னன்னா, இப்போ ஒரு பூஜை அது இதுன்னு உங்ளுக்கு கஷ்டம் குடுத்துருவாங்கன்னுதான்.. எனக்காக எத்தனை கஷ்டம் உங்களுக்குன்னு சொல்றான்.

இதையும்
எல்லாமே நடிப்புன்னு ஆயிருச்சு.. இதையும் அப்படி நினைச்சு பொறுத்துக்க வேண்டியதுதான்னு ஜனனி சொல்றா. ஜனனி காலேஜ் படிக்கும்போது உங்களை எனக்கு அவ்ளோ புடிக்கும் ஜனனி. இப்போ என் அம்மாவுக்கு பிறகு நீங்கதான் எனக்காக ரொம்ப கேர் எடுத்துக்கறீங்க. உங்களை முன்னால் பார்த்திருந்தா உங்களைத்தான் லவ் பண்ணி இருப்பேன்னு சொல்றான் சந்தோஷ்.ஜனனி முகத்தில் சலனமில்லை.

இரவு
சந்தோஷ் மொட்டை மாடியில் நிலாவை ரசிச்சுகிட்டு இருக்கான். நிலாவை உங்களுக்கு பிடிக்குமா சந்தோஷ்ன்னு கேட்கறா ஜனனி. நிலான்னா யாருக்கு புடிக்காது. நிலாவைப் பார்த்தா எங்கம்மாவைப் பார்க்கற மாதிரி இருக்கும்னு சொல்றான். நிச்சயம் நிலா ஒரு பொண்ணாத்தான் இருக்கும் சந்தோஷ்னு சொல்றா ஜனனி.

எதோ சொல்லுது
எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்கன்னு கேட்கறான் சந்தோஷ். கவிஞர்கள்,எழுத்தாளர்கள் நிலவை பெண்ணோட ஒப்பிட்டுத்தானே வர்ணிக்கறாங்கன்னு சொல்றா ஜனனி. சந்தோஷ் சொல்றான் இந்த தனிமை, இரவு, நிலவு இதெல்லாம் நமக்கு ஏதோ சொல்ல முயற்சிக்குதுங்க... ஆனா, என்ன சொல்ல வருதுன்னுதான் தெரியலைன்னு
ரெண்டு பெரும் கொஞ்சம் கொஞ்சமா நெருங்கற மாதிரி தெரியுது இல்லே...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications