Webseries:மொரட்டு சிங்கிள் தேவா.. ஏம்ப்பா.. நம்ம பசங்க இதெல்லாமா விரும்பி பார்க்கறாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொரட்டு சிங்கிள் தேவா... இதன் சுருக்கம் msd என்று ஒரு வெப்சீரீஸ். இதை micset என்கிற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. பசங்க பொண்ணுங்க தங்களுக்கு செட்டாகலைன்னா மொரட்டு சிங்கிள்னு சொல்லி மனசை தேத்திக்கறாங்க.

மொரட்டு சிங்கிள்னு பசங்க சொல்லிக்கிட்டு பண்ணும் அலப்பறை இருக்கே... அடுத்த நிமிஷம் பொண்ணுங்க செட்டாயிருச்சுன்னா அதே மொரட்டு சிங்கிள் வார்த்தை இப்போ அவங்களுக்கு கெட்ட வார்த்தையாகிறது.

பொண்ணுங்க பின்னால சுத்தி, அவங்க மனசை எப்படியாவது கொள்ளை கொண்டு ஜெயிச்சு, நான் சிங்கிள் இல்லைன்னு சொல்ற கெத்து இருக்குதே... மொரட்டு சிங்கிள்னு சொல்றதை நம்பறதா.. இந்த கெத்தை நம்பறதா?

மொரட்டு சிங்கிள் தேவா

மொரட்டு சிங்கிள் தேவா

தேவாவுடன் பழகும் ஒரு பெண்ணின் மனதில் காதல் இருக்கா, இல்லையா.. இது தெரியாமல் தோழி என்று பழக அவள் பின்னால் மனம் தளராமல் சுத்திகிட்டு இருக்கான் தேவா. திடீர்னு அப்பா அம்மா வியக்கற மாதிரி பரீட்சைக்கு படிக்கிறான். அப்படி இருந்தும் 18 அரியர்ஸ்.. காதலியின் அத்தனை போட்டோக்களையும் சேகரித்து கவிதை எழுதி அதை ஆல்பமா அவ கிட்டே கொடுக்கறான்.

காரில் ஒருவன்

காரில் ஒருவன்

அப்போது திடீர்னு காரில் வந்த ஒருவன்..வா போலாம்னு அழைச்சுக்கிட்டு போறான். நிச்சயம் ஆயிருச்சு..என்று சொல்லி, அந்த ஆல்பத்தை அவனிடமே கொடுத்துட்டு போயிட்டா காதலி. பீச்.. பார்க்ன்னு தனியா வெறுமையில் அலையறான்.டேய்.. மொரட்டு சிங்கிள் மொரட்டு சிங்கிள்னு சுத்திட்டு.. இப்போ உன்னை இப்படி பார்க்க முடியலைடான்னு நண்பர்கள் சொல்லியும் மொரட்டு சிங்கிள் கெத்து வரலை.

காதலி வந்துட்டா

காதலி வந்துட்டா

காதலி திரும்பவும் இவன் கிட்டே வந்து, அப்பாகிட்டே நம்ம லவ்வை பத்தி சொன்னேன்.. அப்பா என்னை அடிக்க வெந்துட்டார். இருந்தாலும் நான் பிடிவாதமா இருந்ததுனால கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டார். நீ அரியர்ஸை கிளியர் பண்ணுன்னு சொல்றா. 18 அரியர்மா.. என்னால முடியாதுன்னு சொல்றான்.

இதுதான் தீர்வா

இதுதான் தீர்வா

அரியர் எழுத மாட்டேன்னு சொல்றான்.. இதை காதலி ஒன்னும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அவள் இவன் கையைப் பிடித்து ஐ லவ் யூ msd ன்னு சொல்றா. இவனுக்கு அல்லு...என்னடா மறுபடியும் மொரட்டு சிங்கிளான்னு ஷாக்கில் இருக்க. மை ஷோல் தேவான்னு சொல்றா. பையனுக்கு அப்போதுதான் உயிரே வந்துச்சுன்னா பாருங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+