கர்ப்பமாக இருக்கும் மோதலும் காதலும் சீரியல் நடிகை.. நெகிழ்ச்சியான பதிவு.. இப்படி ஒரு புகைப்படமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ரீதேவி அசோக் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
ஏற்கனவே ஸ்ரீதேவிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான் இரண்டாவது முறையாக மூன்று மாதமாக கர்ப்பமாக இருப்பதை குறித்து ஸ்ரீதேவி புகைப்படத்தோடு கூறியிருக்கிறார்.

இதில் ஸ்ரீதேவி அசோக்குக்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஸ்ரீதேவி அசோக் தன்னுடைய குழந்தை மற்றும் கணவரோடு கர்ப்பகால போட்டோ சூட் எடுத்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியல் மற்றும் மோதலும் காதலும் போன்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை தெரிவித்திருக்கும் நிலையில் இனி இவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஸ்ரீதேவி அசோக்கிற்கு சித்தாரா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார். ஸ்ரீதேவி புதுக்கோட்டையில் சரவணன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அதை தொடர்ந்து தான் இவருக்கு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான கிழக்கு கடற்கரை சாலை என்ற திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஒரு சில திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் பெரிய அளவில் அதைத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராத நிலையில் இவருக்கு 2007 ஆம் ஆண்டு சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்று சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் இவருடைய நடிப்பை தொடர்ந்து இருந்தார்.
அதை தொடர்ந்து கஸ்தூரி, தங்கம், இளவரசி, வாணி ராணி, செம்பருத்தி, ராஜா ராணி, அரண்மனைக்கிளி என வெளியான பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு பெரிய அளவில் நடிப்பில் மைல்கல்லாக அமைந்தது என்றால் ராஜா ராணி சீரியல் தான். அதிலும் இந்த சீரியலில் இவர் வில்லியாக செம்பாவை பாடாய் படுத்தி எடுக்கும்போது அதிகமான ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வந்திருந்தாலும் இவருடைய க்யூட்டான நடிப்பை பாராட்ட தவறியது இல்லை.

இந்த நிலையில் இப்போது தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு போட்டோ ஷூட் எடுத்து அதை தெரிவித்து இருக்கிறார். அதில் தன்னுடைய குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட் வைத்து ஒரு புகைப்படமும் அதைத் தொடர்ந்து தான் இரண்டாவது முறையாக அம்மாவாக இருக்கிறேன் என்று குறிக்கும் வகையில் டி-ஷர்டோடு இருக்கும் ஒரு புகைப்படமும்...
அது போல தன்னுடைய மகள் அக்காவாகி ஆகிவிட்டார் என்று சொல்வதை குறித்து அவருக்கு ஒரு டி-ஷர்ட் போட்டு அதையும் க்யூட்டாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். போட்டோ ஷூட் மோகம் தற்போது பலருக்கும் பிடித்திருக்கும் நிலையில் இவர் இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகும் மகிழ்ச்சியை புகைப்படமாக எடுத்து தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு தன்னுடைய பதிவிற்கு நாங்கள் கடந்த மூன்று மாதங்களாக இந்த மகிழ்ச்சியை ரகசியமாக வைத்திருந்தோம். அதுபோல ஒரு சில சமயங்களில் ரசிகர்களுக்கு சில க்ளூ கொடுத்திருந்தேன். உங்களில் ஒரு சிலர் அதை சரியாக யூகித்தீர்கள். ஆமாம் நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். சித்தாரா விரைவில் பெரிய சகோதரியாகப் போகிறார் என்று கூறியிருக்கிறார். இதற்கு சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர்











Click it and Unblock the Notifications