அப்பாவை அம்மா மாமான்னுதான் கூப்பிடுவாங்க... இளைய திலகம்!
சென்னை: ஜெயா தொலைக்காட்சியில் ஆல்பம் என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது.
கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில் ஜெயா டிவி, ஆல்பம் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. நடிகர் சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சியை கடந்த இரண்டு நாட்களாக ஒளிபரப்பினார்கள்.
நேற்று முதல் இளைய திலகம் பிரபு கலந்துக்கொண்ட ஆல்பம் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.அப்போது பேசிய பிரபு...அம்மா அப்பாவை மாமா என்றுதான் கூப்பிடுவார்கள் என்று சொன்னார்.

அப்பா பயம்
அப்பான்னா எனக்கு பயம்தான்.. தள்ளி தள்ளி நிற்பேன்.அப்பாவுடன் அண்ணன் நல்லா பேசுவார். சிஸ்டர்ஸ் ஜாலியா பேசுவாங்க. நாங்க எல்லாரும் பெங்களூருவில் ஹாஸ்டலில் தங்கி படிச்சுக்கிட்டு இருந்தோம். அப்பாவுக்கு அங்கே ஷூட்டிங் இருந்தாலும், அல்லது எங்களை பார்க்க வேண்டும் என்றாலும் நேராக ஸ்கூலுக்கு வந்துருவாங்க.

எல்லாரையும் போல
அப்போ, எல்லா ஸ்டுடண்ட்ஸ் போல, நாங்களும் அப்பாவை வாய் பிளந்து தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருப்போம். அப்பா சொல்வாங்க...உங்களைத்தான் பார்க்க வந்து இருக்கோம்.. நீங்க என்னை பார்த்துக்கிட்டு நிக்கறீங்கன்னு. உடனே அப்பாவிடம் போய் பேசுவோம் என்று சொன்னார்.

அம்மா போட்டோ விரும்பி
அப்பா கெட்டப் மாற்றி இருந்தாலும், இல்லை வித்தியாசமான சூழலில் அப்பா இருந்தாலும், உடனே போட்டோ எடுத்துக்கலாம் மாமான்னு அம்மா கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அப்பா, வேணாம் வேணாம் என்று தப்பிக்க பார்ப்பார்.வாங்க மாமா என்று கட்டாயமாக போட்டோ எடுக்க வைப்பார் அம்மா என்று கூறினார் பிரபு.

அம்மா சமையல்தான்
அப்பா எங்கே ஷூட்டிங் போனாலும் அம்மாவை அழைச்சுட்டு போயிருவாங்க. அம்மா சமையல்தான் அப்பா சாப்பிடுவாங்க. இதை நம்பியார் அவர்களிடம் அப்பா கற்றுக்கொண்டார்கள். நம்பியார் எங்கு போனாலும் மனைவியை உடன் அழைத்துச் செல்வார். படப்பிடிப்பில் மனைவி சமைப்பதைத்தான் சாப்பிடுவார். இதை அப்பாவும் பின்பற்றினார் என்று பிரபு கூறினார்.
இன்னும் பிரபு கூறும் சுவாரஸ்யமான விஷயங்களை இன்று இரவு ஜெயா டிவியில் பாருங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications