அழகு குட்டி செல்லத்துடன் பாரதி கண்ணம்மா வெண்பா... செம க்யூட் என கொஞ்சும் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா தனது குட்டிப்பாப்பா உடன் க்யூட் ஆக எடுத்த போட்டோக்களுடன் அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா தற்போது குழந்தையுடன் கொடுத்துள்ள போட்டோ ஷூட் இணையங்களில் அதிகம் பகிரப்படுகிறது. தனது குட்டிப்பாப்பா உடன் க்யூட் ஆக எடுத்த போட்டோக்களுடன் அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
சன்டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்தாலும் அழகு சீரியல் மூலம் டிவி சீரியலில் நடித்தவர் பரீனா. அங்கிருந்து விஜய் டிவி சீரியலில் வில்லியாக நடிக்கத் தொடங்கினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா டிவி சீரியலில் வில்லியாக அறிமுகமான பரீனா ஆசாத் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்து வருகிறது.

அழகு வில்லி வெண்பா
வில்லியாக நடித்தாலும் மக்கள் இவரை கதாநாயகியாக தான் பார்க்கின்றனர். அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்களை தனது வசம் இழுத்துள்ளார். பரீனா தனது குண்டு முகத்தில் கோலிக்குண்டு கண்களில் காட்டும் வில்லத்தனத்திற்கு தனி ரசிகர்கள் உள்ளனர். பரீனாவின் சமூக வலைத்தள பக்கத்தை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர்.

பரீனா போட்டோக்கள்
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா தற்போது குழந்தையுடன் கொடுத்துள்ள போட்டோ ஷூட் இணையங்களில் அதிகம் பகிரப்படுகிறது. பரீனாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ளது. ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா கடந்தாண்டு தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை இன்ஸ்ட்டா மூலம் தெரிவித்திருந்தார்.

கர்ப்பகால போட்டோ சூட்
இதையடுத்து, பரீனா கர்ப்பமான நிலையிலும், தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார் . பின்னர் நிறை மாதம் நெருங்கியதை அடுத்தது சீரியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கினார். அப்போது அவர் நடத்திய கர்ப்பகால போட்டோ சூட் மிகவும் பிரபலம். தண்ணீருக்கு அடியில், பேபி பெல்லியில் டேட்டு என புகைப்படங்கள் கலக்கின.

அன்னையர் தின ஸ்பெஷல்
இவருக்கு அந்த பிள்ளை பிறந்ததை அடுத்து மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார். அதோடு டிவி ஷோக்களிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பரீனா. தனது மகனுடன் பரீனா தற்போது எடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை பெற்று வருகிறது. அன்னையான பின்னர் தனது குழந்தையுடன் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார் பரீனா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications