மொட்டை சுரேஷுக்கு இந்த வயசுல இது தேவையா.. ஓவரா தெரியலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களில் கடந்து வந்திருந்தாலும் இந்த நாலாவது சீசனில் முழுக்க முழுக்க சுரேஷ் சக்கரவர்த்தியின் பிடியில்தான் நகர்ந்து கொண்டு இருக்கிறது .அந்த அளவிற்கு அவர்தான் ஹெவியாக பெர்பாமன்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்த வீட்டிற்குள் ஆட்டம் பாட்டமாக இருந்தாலும் சரி சண்டையாக இருந்தாலும் சரி இவர் இல்லாமல் எதுவும் இல்லை என்று கூறும் அளவிற்கு நாளுக்கு நாள் இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நேற்று வரைக்கும் சண்டை போட்டுகிட்டு சண்டக்கோழியா சுத்திகிட்டு இருந்தவர்கள் இன்று ஆட்டம் பாட்டமாக கொண்டாடி இருக்கிறார்கள். அதுவும் சுரேஷ் சக்கரவர்த்தியின் ஆட்டத்தை பார்த்து பல நெட்டிசன்கள் வயிறு எரிந்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

அவர் பார்க்கிறார்ப்பா

அவர் பார்க்கிறார்ப்பா

அதுவும் ஒருவர் இருவரல்ல புரோமாவை பார்த்ததும் பலரும் இந்த மாதிரி தான் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .இந்த வயசில் இந்த ஆட்டம் எல்லாம் தேவையா அதுவும் கட்டின புருஷன் வெளியில பார்த்துக்கிட்டு இருக்கார். அவர் முன்னாடி இந்த மாதிரி அடுத்தவர் பொண்டாட்டியை தூக்கி ஆடுறீங்களே கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா என்று கலாய்த்து தள்ளி வருகிறார்கள் .

சண்டை போய் ஜாலி

சண்டை போய் ஜாலி

இந்த சீசன் ஆரம்பித்ததிலிருந்து அனிதா சம்பத்தும் சுரேஷ் சக்கரவர்த்தியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் .இதில் அனிதாவின் ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியையும் சுரேஷ் சக்கரவர்த்தியின் ரசிகர்கள் அனிதாவையும் மாற்றி மாற்றி குறை கூறிக் கொண்டிருந்தார்கள். அப்படி சண்டைக் கோழியாக திரிந்தவர்களைத்தான் தற்போது பிக் பாஸ் ஜாலி கோழிகளாக மாற்றி ஆட வைத்துள்ளது.

மச்சான் பாட்டுக்கு

மச்சான் பாட்டுக்கு

அதுவும் விஜய் டிவியில் பிரபலமான ராஜலட்சுமி செந்தில் பாடிய ஏ சின்ன மச்சான் பாட்டுக்கு கலக்கலான ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இருவரும். இவர்கள் இருவரும் ஆடியதை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதுவும் மொட்டை சுரேஷ் அவர் தொப்பையை வைத்து குலுக்கி குலுக்கி ஆட்டுவது, பலருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லையாம் . அதை பார்த்து பலர் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

குலுக்கி குலுக்கி

குலுக்கி குலுக்கி

உங்களுக்கு அந்த அளவிற்கு ஆடத் தெரியவில்லை என்றாலும் ஒரு தடவை உங்கள் தொப்பையை குலுக்கி ஆட்டுநீங்க பாருங்கள் அதில் நாங்கள் விழுந்து விட்டோம் என்று சூப்பர் சிம்பல் அள்ளி வீசி வருகிறார்கள். டெய்லி சண்டையை போட்டு அனைவரையும் இரிடேட் பண்ணிக்கொண்டிருந்த பிக் பாஸ் இன்று செமையான ஒரு ஆட்டத்தை போட்டிருப்பது ரசிகர்களையும் கூலாக்கி விட்டது. அடடே என்று உச்சுக் கொட்டி ரசித்துள்ளனர் மக்கள்.

விசிலடிச்சு சரிக்கும் ரசிகர்கள்

விசிலடிச்சு சரிக்கும் ரசிகர்கள்

இவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து சக நிகழ்ச்சியாளர்களும் விசில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் பிரெமோவில் சுரேஷ் சக்கரவர்த்தியை காட்டி கொண்டிருப்பதால் ரசிகர்களும் என்னடா இது சுரேஷ் தான் இந்த வீட்டில் உருப்படியான கன்டஸ்டன்ட் என்று முடிவு பண்ணிட்டீங்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். அந்தப் பாடலில் கடைசியில் சுரேஷ் சக்கரவர்த்தி செய்த செயல் தான் வைரலாக பரவி வருகிறது. இவர் இதுவரைக்கும் சண்டை போட்டுக் கொண்டு முகத்தை திருப்பி கொண்டு இருந்த இருவரும் இன்று கட்டிப்பிடித்து மேடையில் செம என்டர்டைமெண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசில கட்டிப் பிடிச்சாங்க பாருங்க

கடைசில கட்டிப் பிடிச்சாங்க பாருங்க

அதிலும் கட்டக் கடைசியாக இருவரும் கட்டிப்பிடித்ததைப் பார்த்து பலரும் காய்ந்து போய் விட்டனர். இதுதான் நடிப்பா.. எவ்வளவுதான் மனசுக்குள்ள சண்டை வச்சுக்கிட்டு இருந்தாலும் இப்படி மொட்டைத் தடவி கட்டிப் பிடிக்கிறார்.. அனிதாவும் கம்முன்னு இருக்காரே.. என்னங்கடா நடக்குது என்று கடுப்பாக கேட்டுள்ளனர். யார் என்ன சொன்னாலும் போங்க சுரேஷ் சக்கரவர்த்திக்கு தான் பெரிய லக் . படு கொண்டாட்டமாக இருக்கிறார்.

சுரேஷின் வலை வீச்சு

சுரேஷின் வலை வீச்சு

எல்லா இளசுகளையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். ஜோடி போட்டு என்ஜாய் பண்ணி கொண்டு இருக்கிறார். போனவாரம் ஷிவானியுடன் கண்மணி அன்போடு காதலன் பாட்டுக்கு கொஞ்சிக் கொண்டிருந்தார். இந்த வாரம் என் சின்ன புள்ள என்று அனிதாவுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.. அடுத்து சுரேஷின் டார்கெட் சனமா இல்லை ரம்யா பாண்டியனா என்று கேட் டுபலரும் பெட் கட்ட ஆரம்பித்து விட்டனர். இப்படியாக போய்க் கொண்டிருக்கிறது பிக் பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+