Aranmanai kili serial: மவுனராகம் அரண்மனை கிளிக்குள்ள எப்ப வந்துச்சு?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் நடிகர் மோகன் மவுன ராகம் படத்தில் பேசும் வசனத்தை, இங்கே அர்ஜுன் அச்சு பிசகாமல் பேசறான்.
பணக்கார வீட்டு பையன் அர்ஜுனுக்கு கார் விபத்தில் கால்கள் நடக்க முடியாமல் போயிருது. அர்ஜுன் காதலிச்ச பெண், நடக்க முடியாதவனை நான் கட்டிக்கறதான்னு சொல்லிட்டு போயிடறா.
தோட்டத்தில் வேலை பார்பவரின் மூத்த மகள் ரேனுகாவை அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கறாங்க மீனாட்சி அம்மா. ஆனா, துர்காவின் சதித் திட்டத்தால் ரேணுகா ஓடிப்போயிட, அவள் தங்கை ஜானுவை கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க.

பத்தாவது படிச்ச
பத்தாவது வரை மட்டுமே படிச்ச ஜானு நடக்க முடியாத அர்ஜுனுக்கு சரியான ஜோடி இல்லையாம். சும்மா அவசரத்துக்கு ஜானுவை கல்யாணம் செய்து வச்சுட்டு, இப்போது உடனே டைவர்ஸுக்கும் ஏற்பாடு செய்யறாங்க மீனாட்சி அம்மா. இது தெரியாமல் இருந்த ஜானுவுக்கு ஒரு கட்டத்தில் தெரிஞ்சுருது.

நடக்க வேண்டும்
என்னதான் விவாகரத்து செய்ய அவங்க நினைச்சு இருந்தாலும், அர்ஜுனை நடக்க வைத்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருக்கிறாள் ஜானு. அதே மாதிரி, அங்கு இங்கு என்று அழைத்துச் சென்று,க டைசியில் ஓரு ஆஸ்ரமத்தில் வைத்தியர் சொன்ன பூஜை எல்லாம் செய்த பின்னர் அஞ்சு தலை பாம்பு வாசுகியின் உதவியால் நடக்க ஆரம்பிக்கிறான் அர்ஜுன்.

யாரிடமும் சொல்ல
உங்களால் நடக்க முடியும்னு இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேணாம் சார். நீங்க நடக்கறது யாருக்கோ பிடிக்கலை. அதனால, மெதுவா சொல்லிக்கலாம்னு சொல்லி அர்ஜுன் வாயை அடைச்சுடறா. வீட்டில் வந்தால், என் பிள்ளையை என் அனுமதி இல்லாமல் எங்கியோ அழைச்சுட்டு போயி, வைத்தியம்னு சொல்லி யாரை ஏமாத்தறே.. இனிமே இந்த வீட்டில் நீ இருக்க கூடாது.விவாகரத்து கேஸை சீக்கிரம் முடிக்கணும்னு சொல்றாங்க.

உங்களைப் பார்க்க
ஜானு வந்து உங்களைப் பார்க்க அப்பா வந்திருக்கார். கொஞ்சம் கீழே வர முடியுமா சார்னு அர்ஜுனிடம் கேட்க, அவன் முறைத்து திட்டிவிட்டு கீழே அனுப்பிடறான்.அப்பாகிட்ட வந்து, அவர் வேலையா இருக்காருப்பான்னு சொல்லி சமாதானம் செய்து அனுப்பி வச்சுட்டு அர்ஜுனிடம் வர்றா. என்னாச்சு உங்களுக்கு... அப்பா ஆசையாத்தானே பார்க்கணும்னு சொன்னார்னு கேட்க.
என்னை மன்னிச்சுரு ஜானு..எனக்கு மட்டும் அவரை பார்க்க ஆசை இருக்காதா? நாளைக்கு விவாகரத்து ஆகி நீ வீட்டுக்கு போனா,அங்கே நீதான் வீணா வாழ்க்கையை கெடுத்துகிட்டேன்னு உங்க அப்பா நினைப்பார். நான் பார்க்காமல், அவரை மதிக்காமல் இருந்தால், மாப்பிள்ளை வீட்டில்தான் நம்ம பொண்ணை விவாகரத்து வாங்கி அனுப்பி வச்சுட்டாங்கன்னு உன் மேல பரிதாபப் படுவார் அதான்னு மவுன ராகம் பட டயலாக்கை பேசறான்.
ஏம்ப்பா வேற காரணம் கூடவா யோசிக்க முடியாது?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications