நல்லா வந்துச்சு இந்த பொறந்த நாள்.. எத்தனை சிக்கல்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதித்யா சானலில் மிஸ்டர் பாரத் 2020 என்று ஒரு காமெடி நிகழ்ச்சி. இதன் அண்மைய ஷோவில் பிறந்தநாள் பெர்சனா இருக்கறது எவ்ளோ கஷ்டம்னு விளையாட்டா சொல்லி இருக்காங்க.

பியிங் பர்த்டே பெர்சன் இதுதான் நிகழ்ச்சியின் டைட்டில். பாரத்துக்கு பிறந்த நாள். அவனை வச்சுக்கிட்டே அவனுக்கு சர்பிரைஸ் கிஃப்ட் கொடுக்கணும்னு நண்பர்கள் பேசிக்கறாங்க.

வீட்டில் பொறந்தநாள்னு பார்க்கறேன்.. என்னை திட்ட வைக்காதேன்னு அம்மா ஒரு பக்கம்.. இன்னிக்கு கூட இப்படி தூங்குவியான்னு அப்பா ஒரு பக்கம்... போதும்டா சாமி.. பிறந்தநாள் பேபியா இருக்கறது எவ்ளோ கஷ்டம்...

 துண்டை வீசி

துண்டை வீசி

காலையில் கொஞ்சம் சோம்பேறித் தனமா தூங்க முடியலை...டேய்.. பிறந்த நாளன்னிக்கு கூட சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டியா? சீக்கிரம் எழுந்து குளிடா என்று முகத்தில் துண்டை வீசி எறிகிறார் அப்பா. எழுந்த உடனே எப்படி குளிக்க முடியும்? இந்த அப்பாக்களுக்கு தங்கள் அப்பாவாகிவிட்டால் ரூல்ஸ் எல்லாம் மாறிப் போயிருமா?

 கோயில் சினிமா

கோயில் சினிமா

பார்த் டே அதுவும் சினிமாவுக்கு போறேன்மான்னு சொன்னா.. பொறந்த நாள் அதுவுமா . .கோயிலுக்குப் போலாம்.. அதுவும் சினிமா மாதிரிதான் இருக்கும். நானும் கிளம்பறேன்.. நீயும் கிளம்புன்னு சொல்ற அம்மா.. அது மட்டுமா அவங்க சொல்ற வேலையை செய்யலேன்னா... பொறந்த நாள் அதுவுமா என்னை திட்ட வைக்காதே... சொல்லிப்புட்டேன்னு எச்சரிக்கை மணி வேற அடிப்பாங்க.

 கேசரி பாடு

கேசரி பாடு

டேய் உன் பொறந்தநாள்னு கேசரி செய்து இருக்கேண்டான்னு அம்மா ஆசையா சொல்ல.. ஐயையே.. கேசரியா.. போர்மான்னு சொன்னா...டேய் உன் பொறந்த நாளைக்கு எனக்கு பிடிச்ச கேசரியை செய்து சாப்பிடலாம்னு பார்த்தா உனக்கு பொறுக்காதேன்னு சொல்லிக்குவாங்க. அந்த காலத்துல பிறந்தநாள்னா ரெண்டு இட்லி கிடைக்கறதே கஷ்டம்.. இப்போ பாரு உனக்கு கேக்குன்னு அப்பா கேக்கை ஒரு வெட்டு வெட்டிகிட்டே சொல்வார்.

 ரெட் ஃபாரஸ்டா

ரெட் ஃபாரஸ்டா

சரி இதெல்லாம் ..இருக்கட்டும்... ஃபிரண்ட்ஸ் ஏதோ சர்ப்ரைஸ் குடுக்க போறேன்னு சொல்லி இருக்கானுங்க.. அதை என்ஜாய் பண்ணலாம்னு காத்திருந்தா.. பாரத் பாரத்னு நண்பன் கதவைத் தட்டறான். டேய் பிளாக் ஃபாரஸ்டா, ரெட் ஃபாரஸ்டா? சீக்கிரம் எடுங்கன்னு சொன்னா. நண்பனுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சுடான்னு சொல்றானுவ..நம்பாம அவன் ரத்தத்தை தக்காளி சாஸான்னு முகர்ந்து பார்த்தா அசல் ரத்த வாடை... பிறந்தநாளாவது ஒண்ணாவது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+