விஜய் டிவியில் முகேன் தர்ஷன் லாஸ்லியா... கவின் எங்கே?
சென்னை: மழை விட்டாலும் தூவானம் விடாது என்று சொல்வார்கள். அது போல பிக்பாஸ் சீசன் 3 முடிந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. இன்னும் அதில் கலந்துகொண்டவர்கள் பற்றிய பேச்சுக்கள் ஓய்ந்தபாடு இல்லை.
இதற்கு ஒரு படி மேல ரசிகர்கள் கவின் லாஸ்லியா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியில் வந்து இன்னும் சேர்ந்து நின்று புகைப்படம் போட வில்லையாம்.அந்த கவலையில் இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் தி வால் என்று ஒரு ரியாலிட்டி கேம் ஷோ. இதில் பிக்பாஸ் சீசன் 3 வின்னர் முகேன், ஃபைனல் போட்டியாளர்கள் தர்ஷன், லாஸ்லியா கலந்துகொள்ளும் கேம் ஷோ வரும் ஞாயிறு தீபாவளி அன்று ஒளிபரப்பாக உள்ளது.

லாஸ்லியா போயாச்சு
தர்ஷன், முகேன், லாஸ்லியா மூவருமே தற்போது அவரவர் நாட்டுக்கு போயாச்சு. விஜய் டிவி முன்பே ரெக்கார்டிங் செய்த இந்த ஷோவை தீபாவளி அன்று ஒளிபரப்பு செய்ய உள்ளது. இவர்கள் மூவருக்காகவே இந்த ஷோவை ரசிகர்கள் நிச்சயம் பார்ப்பார்கள்.

ரெட் லாஸு
கிரீன் பால் எதில் விழுந்தாலும் அந்த வாலில் எழுதப்பட்டு இருக்கும் காசு கிடைக்கும். ரெட் பால் எதில் விழுந்தாலும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் காசு லாஸாகும். இந்த விளையாட்டை தர்ஷனும்,முகேனும் விளையாட. லாஸ்லியா சப்போர்டுக்கு வந்து போகிறார் போலும்.

தளபதி தீபாவளி
தீபாவளின்னா உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்னு நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா கேட்க, தர்ஷன் தளபதி படம் என்று கத்துகிறார். முகேன் நிறையவே அமைதியாக இருக்கார். பிக்பாஸ் ஹவுஸ் தந்த மாற்றம் போலும்.ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கப் போறீங்களாமேன்னு பிரியங்கா கேட்டார்.

இல்லை நாலு வருஷத்துக்கு
நாலு வருஷத்துக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லை. இது எல்லா பிரடியூசர் காதிலும் விழட்டும் என்கிறார் தர்ஷன். தர்ஷன் ஓவர் குஷியில் கண்ணுமண்ணு தெரியாமல் ஆடுகிறார், பேசுகிறார்.. குதிக்கிறார். இவரை விட வயதில் சின்னவரான முகேனுக்கு வந்த பக்குவம் இவருக்கு இன்னும் வரவில்லையோ என்று தோன்றுகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications