Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ப்பிரைஸ் கொடுத்த சித்து.. "வீலென்று" கத்தி ஓடி வந்து கட்டிப்பிடித்த ரசிகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத் திரை வட்டாரத்தில் தனக்குன்னு ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் சித்து.. சினிமா நடிகர் நடிகைகளுக்கு இணையாக டிவி நடிகர் நடிகைகளுக்குத்தான் இப்பெல்லாம் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க.

சினிமாக்களில் நடிப்பவர்கள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் சீரியலில் நடிப்பவர்கள் தினம் தினம் நம்ம வீட்டு உறுப்பினர்கள் போலவே இவர்களுடன் வாழ்ந்து விடுகிறார்களாம். அதனால் ரசிகர்கள் சின்னத்திரையில் உள்ள நடிகர்களையே ரொம்பவும் விரும்புகிறார்கள் அந்த வகையில் .

அப்படித்தான் சித்துவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள். அவரும் ரசிகர்கள் மீது பதிலுக்கு ரொம்பவே பாசம் காட்டி அந்த பிணைப்பை இறுக்கமாக வைத்துக் கொண்டுள்ளார்.

 முல்லை சித்து

முல்லை சித்து

சித்து, தன்னுடைய தனி திறமையினால், நடுத்தர வர்க்கத்தில் பிறந்து இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு தன்னுடைய உழைப்பால் மட்டுமே உயர்ந்துள்ளார். இவர் டிவி தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் முன்னணி கதாநாயகி. இவருடைய லைஃப்ல எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தாலும் வெளியில் சிரித்த முகமாக பேசுவது அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

ஊர் முழுக்க ரசிகர்கள்

ஊர் முழுக்க ரசிகர்கள்

இவர் வேலை பார்க்காத தொலைக்காட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா தொலைக்காட்சிகளிலும் நடித்துவிட்டார். முன்னணி தொலைக்காட்சிகள் ஆனா விஜய் டிவி சன் டிவி ஜீ தமிழில் என எல்லா சேனல்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவரின் ரசிகை ஒருவர் இவரின் பிறந்த நாளுக்கு அவர் ஊரிலுள்ள அனைவருக்கும் அன்னதானம் வைத்திருக்கிறார்.

இரக்க மனசுக்காரி

இரக்க மனசுக்காரி

அதுமட்டுமல்ல ஏழைகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார் இது சித்துவுக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது. சித்துவை ரசிப்பதற்கு காரணமே அவருடைய குழந்தைத்தனமான பேச்சும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் நல்ல எண்ணமும் தான் அப்படின்னு அந்த ரசிகை கூறியிருக்கிறார். அவர் பெயர் சவிதா. இப்போ என்னனா தன்னுடைய பிறந்தநாளுக்கு இவ்வளவு சிறப்புகளை செஞ்ச சவிதாவின் பாசத்திற்கு திருப்பி தன்னுடைய என்ன கைமாறு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த சித்துவுக்கு இப்பதான் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரசிகை வீட்டுக்கு சர்ப்பிரைஸ்

ரசிகை வீட்டுக்கு சர்ப்பிரைஸ்

சவிதாவின் பிறந்தநாளன்று சித்து நேரில் சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அவர் நேரில் செல்வதை கூட கவிதாவிடம் சொல்லவில்லையாம் .தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சவிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வீடியோவாக பதிவிட்டார். அதில் நீங்க இவ்வளவு என் மேல பாசம் வச்சு இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

அம்மா மாமியாருக்கும் நன்றி

அம்மா மாமியாருக்கும் நன்றி

நீங்கள் மட்டுமல்ல உங்களுடைய அம்மாவும் உங்கள் மாமியாரும் உங்கள் குடும்பமே என்ன ரசித்து என் மேல இவ்வளவு பாசம் வைத்து இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. என்னுடைய பிறந்த நாளில் நீங்க செஞ்சத என்னால மறக்க முடியாது. நீங்க ஹாப்பியா லைப் லாம் சந்தோசமாக இருக்க வேண்டும் அப்படின்னு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நேரில் வாழத்து

நேரில் வாழத்து

சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை விடவும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இவருடைய ரசிகர்கள் பலர் பல பேஜை உருவாக்கி இவருடைய வீடியோக்களை அப்லோட் பண்ணி விட்டு வருகிறார்கள். அதில் சபிதாவும் ஒன்று. கதிர் முல்லை பேன்ஸ் என்று ஐடி ஓபன் பண்ணி சித்துவின் வீடியோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார்.

கட்டிப்பிடித்து அழுகை

கட்டிப்பிடித்து அழுகை

இன்ஸ்டா வில் வாழ்த்து தெரிவித்தது போதாது என்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது சவிதா ஆனந்த அதிர்ச்சி அடைந்து சந்தோஷத்தில் அழுதே விட்டாராம்.. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. என்ன சொல்லுங்க.. ரசிகர்களை நேரில் பார்த்து வாழ்த்தி இன்ப அதிர்ச்சியில் மூழ்க வைத்த சித்துவை பாராட்டியே ஆக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+