Pandian Stores Serial: அவன் அழகின்னு சொல்ல.. இவள் அப்படியே உருக.. அடடா அடடா !

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் காதலை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்வதை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதை சீரியல் ஆர்வலர்கள் ரசித்து ரசித்து பார்க்கிறார்கள்.

சீரியலில் இருவரும் ஒருவரை ஒருவர் மனதுக்குள் பேசிக்கொண்டு காதலிக்கிறார்கள்.

அவன் முல்லையை அழகின்னு சொல்றதும், இவள் அவன் தன்னுடன் பேசியதை அம்புட்டு சந்தோஷமாக இருக்கிறது என்று சிலாகிப்பதும் அடடே என்று சொல்ல வைக்கிறது.

மென்மையான கதை

மென்மையான கதை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையை ரொம்ப மென்மையாக எடுத்து இருக்கிறார்கள். ஒருத்தரும் கதையில் அதிர்ந்து பேசுவதில்லை. கொஞ்சம் அதிர்ந்து பேசுவது அம்மா கதாபாத்திரம். அதிரடியாக பேசுவது மீனா கதா பாத்திரம். இப்படியும் போரடிக்காமல் கதையை கொண்டு போக முடியுமா என்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

காதல் ரொமான்ஸ்

காதல் ரொமான்ஸ்

காதல் ரொமான்ஸ் என்று கன்னாபின்னாவென்று எதையும் பேசிக்கொள்ளாமல் கச்சிதமாக பேசிக்கொள்வது என்று அதிலும் எல்லையை மீறாமல் பாராட்டை பெறுகிறார். முல்லை கதிர் இருவரும் பிடிக்காமல் கல்யாணம் செய்து கொண்டாலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை காட்சிகளாக்கி இருப்பது சீரியல் ரசிகர்களை விரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

கண்ணாடியில் முல்லை

கண்ணாடியில் முல்லை

கண்ணாடி பார்க்கும் கதிர் அதில் தெரியும் முல்லையை ரசித்து பார்த்து மனசுக்குள் அழகி என்று சொல்லிக் கொள்கிறான். அவன் மனசுக்குள் முணுமுணுத்தது அவள் காதில் விழுந்தது போல என்னங்க என்று கேட்கிறாள். ஒண்ணுமில்லை.. இந்த போட்டோவை எல்லாம் கண்ணனுக்கு அனுப்பிடு என்று சொல்கிறான் கதிர்.

அம்புட்டு சந்தோசம்

அம்புட்டு சந்தோசம்


நம்ம ரெண்டு பேரும் போட்டோ எடுத்ததை யாரு கிட்டேயும் சொல்லவே இல்லையே.. அவுக கிண்டல் பண்ணுவாக என்று சொல்கிறாள் முல்லை. அவன் யாருகிட்டேயும் சொல்ல மாட்டான் நீ அனுப்பிடு என்று சொல்லிவிட்டு போகிறான் கதிர். என்ன மனுஷன் இவுக.. பக்கத்துல இருந்து பேசினாலே அம்புட்டு சந்தோஷமா இருக்குன்னு முல்லை சொல்லிக்கறா.

இப்படி மனசுக்குள் இருவரும் காதலுடன் பேசிக்கற காட்சிகளே பார்க்கறதுக்கு இதமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+