ஹய்யா... முல்லை கதிருக்கு சாப்பாடு போடறாளே... சேர்ந்துருவாங்களா?
சென்னை: விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஏதோன்னு போயிகிட்டு இருக்கு. அப்பப்போ சில சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கறதோட சரி.
மளிகை கடை, சரக்கு இல்லை, கடைக்கு எதிரி இப்படி கதை போயிட்டு இருக்கு. நாலு அண்ணன் தம்பி... பணக்கார பொண்ணை ஒரு தம்பி காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துடறான்.
அந்த பொண்ணோட அப்பாதான் கடைக்கு சரக்கு தர்றவர்.. இப்போ சரக்குத் தர மாட்டேன்னு சொல்றார். பாண்டியன் ஸ்டோர்ஸை ஒரு நாள் கூட மூட மாட்டோம்னு தம்பிங்க மம்முட்டி தம்பிங்க முரளி, அப்பாஸ் கணக்கா வேலை செய்யறாங்க.

மாறிடுச்சு
முல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் தம்பிங்களுக்கு அத்தை பொண்ணு. முல்லையை ரெண்டாவது தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஏற்பாடு செய்ய, அவனை காதலிச்ச மீனா, இவனுக்காக வீட்டை விட்டு ஒடி வந்துடறா. அதனால முல்லை கல்யாணம் நின்னுட கூடாதுன்னு மூணாவது தம்பி கதிருக்கு முல்லையை கட்டாய கல்யாணம் கட்டி வச்சுடறாங்க.

பூனையும்
எலியும், பூனையுமா இருக்கும் இவங்க ரெண்டு பேரும் ஒன்று சேருவங்களான்னு குடும்பமே கவலைப் படுது. ஒரு நாள் இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு குல தெய்வம் கோயிலுக்கு போயிட்டு வர்றாங்க.. வந்து பார்த்தா வீடே எலியை துரத்தி ஓடின பூனை மாதிரி களேபரமா கடக்கு. ரெண்டு பேரும் போட்டுக்கிட்ட சண்டை அப்படி.

முல்லை சாப்பாடு
மூத்த மருமக தனலட்சுமிக்கு தலைவலி வந்துருது. முல்லை கதிர் வந்தா கதவைத்திறந்து விட்டு. சாப்பாடு போட்டுடு.. என்னால முடியலை நான் போயி படுக்கறேன்னு தனம் போறா. அக்கா... நானா... எப்படிக்கா நான் சாப்பாடு போடறதுன்னு முல்லை நெளிய..இன்னிக்கு ஒரு நாள்தான் முல்லை.. என்னால முடியலைன்னு சொல்லிட்டு போறா.

தட்டை வச்சுருங்க..
அக்காவுக்கு தலைவலிக்குதாம்.. என்னை கதவு திறந்துவிட சொன்னாக.. அப்படியே சாப்பாடும் போட சொன்னாகன்னு கதிர்கிட்ட சொல்றா முல்லை. தட்டை எடுத்து வைக்க, கை கால் கழுவி சாப்பிட உட்கார்றான் கதிர். நீ சாப்பிட்டியான்னு கேட்கறான்.. ம்ம்..சாப்ட்டேன்னு முல்லை முக மலர்ச்சியுடன் சொல்றா. சாப்பிட்டு தட்டை எடுக்கப் போக, வச்சுருங்கன்னு நான் எடுத்துக்கறேன்னு சொல்றா. அவன் கேட்காமல் தட்டை எடுத்து போடுகிறான். சாப்பாட்டை திரும்பவும் எடுத்து வைக்க முல்லைக்கு உதவி செய்யறான் கதிர். இந்த காட்சி பார்க்க நல்லாருக்குன்னு தொடர்ந்து சீரியல் பார்க்கறவங்க பேசிக்கறாங்க.

ஒற்றுமை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமாக கூட்டு குடும்பம், மூத்த அண்ணன், அண்ணி எப்படி நடந்துக்கணும், தம்பிகள் எப்படி இருக்கணும்னு நல்லா காமிக்கறாங்க. ஏற்கனவே ஒரு படத்துல நாம பார்த்ததுதான்.. இருந்தாலும் தினம் தினம் பார்க்கறப்போ.. மறக்காம இருக்கே...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications