Pandian Stores Serial: முல்லைக்கு டான்ஸ் ஆடத் தெரியுமாமே...!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லைக்கு டான்ஸ் ஆடத் தெரியும்னு சொல்லி குடும்பத்தாரிடம் எப்படிடா இதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்கேன்னு சிக்கிக்கிட்டான்.
கதிர், முல்லை கதைப்படி கட்டாயத்தில் கல்யாணம் செய்துக்கிட்டவங்க... ஒண்ணு சேர மாட்டாங்களான்னு குடும்பமே ஆவலா காத்துக்கிட்டு இருக்கும்போதுதான் அப்படி இப்படி ரெண்டு பேரும் ஆசையா இருக்காங்க.
அப்போதுதான் கதிர் முல்லைக்கு டான்ஸ் ஆடத் தெரியும்னு சொல்லி சிக்கிக்கறான்.சின்னப் பிள்ளையா இருக்கும்போது பள்ளிக்கூடத்தில் டான்ஸ் ஆடிட்டு பரிசு வாங்கிட்டு வரும்போது கீழே விழுந்து முட்டியில் அடிப்பட்டுக்கிட்டா. அப்படி முல்லை வரும்போது நான்தான் அவளை வீட்டில் கொண்டு போயி விட்டுட்டு வந்தேன்னு சொல்லி சிக்கிக்கிட்டான்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபத் திருவிழா நாள் பாண்டியன் ஸ்டோர்ஸில் இப்போதுதான் கொண்டாடிகிட்டு இருக்காங்க. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சிறப்பே அந்த குடும்பத்தின் ஒற்றுமைதான். அந்த வீட்டு மருமகள்கள், அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பதும்... மருமகள்கள் சண்டை போட்டுக்காமல் இருப்பதும் ஆனால், கதை நேர்த்தியாகப் போவதும் என்று பார்க்க பார்க்க பாசிட்டிவ் காட்சிகள்.

மீனா கர்ப்பம்
குடும்பத்தில் ரொம்ப நாட்களாக குழந்தை இல்லாமல் இருக்க, இரண்டாவது மருமகள் மீனா அப்போதுதான் கர்ப்பம் என்று குடும்பமே குதூகலமாக இருக்கிறது. அந்த சமயம் பார்த்து மீனா ப்ளீட் ஆகிறது என்று சொல்கிறாள். மூன்று மருமகள்களும் கூடவே மாமியாரும் கலங்கி போகிறார்கள். மூத்த மருமகள்தான் கொஞ்சம் தைரியமாக இப்படி இருப்பது சகஜம் என்று ஆறுதல் சொல்கிறாள்.

மாமியார் கலக்கம்
மூத்த மருமகளை தடுத்து யார் சொன்னது இப்படி இருக்கும்னு.. நன் நாலு பிள்ளைங்களை பெத்து இருக்கேன்.. இப்படி இருந்ததில்லை என்று அடிச்சு சொல்றாங்க. மூத்த மருமகள் தனம் புருஷனிடம் அழ என்று இப்படி கதை போகிறது. இதற்கு நடுவேதான் முல்லை கதிரின் ஊடலும்..

330 வது எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் இப்படி வன்முறை இல்லாமல் வில்லன் வில்லி இல்லாமல், அடிதடி இல்லாமல் 300 எபிசோட்கள் கடந்து அந்த சீரியல் கதை சாதனை செய்துள்ளது. இது கொண்டாட வேண்டிய ஒன்று என்பதால், இதை கொண்டாடி மகிழ்ந்துள்ளது விஜய் டிவி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications