Pandian Stores Serial: என் மேல ரொம்ப அக்கறையா இருக்காக... புடிச்சு இருக்கு...!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கும், கதிருக்கும் திடீர் கல்யாணம்தான் நடந்தது. இப்போ பாருங்க.. முல்லைக்கு கதிரை ரொம்ப புடிச்சு இருக்காம்...
முல்லைக்கு ஜீவாதான்னு சின்ன வயசிலேயே பேசி வச்சு இருந்தாங்க. ஜீவா பார்த்தா மீனாவை காதலிக்கிறேன்னு வந்து நிக்கறான். அப்புறம் என்ன மீனாவுக்கும், ஜீவாவுக்கும் அண்ணன் மூர்த்தி கல்யாணம் செய்து வச்சுட்டார்.
இந்த புள்ள முல்லை தனியா நின்னுருமே...மாமா பொண்ணு வேற...அதனால ஜீவா தம்பி கதிரை முல்லைக்கு கட்றா தாலியைன்னு சொல்லி கல்யாணம் செய்து வச்சுட்டாங்க.

எப்படி புடிச்சுது
கல்யாணம் ஆகி இப்போ சந்தோஷத்தின் உச்சிக்கு வந்து இருக்கும் முல்லை, தனது ஓரகத்திகளுடன் தங்களது தாம்பத்யம் பத்தி சிலாகித்து பேசுகிறாள். அப்போதுதான் அவுகளை எனக்கு ரொம்ப புடிச்சு இருக்குன்னு சொல்றா.எப்படி புடிக்க ஆரம்பிச்சுதுன்னும் சொல்றா முல்லை.

முதலில் நடிப்பு
உடனடியா கல்யாணம் செய்து வச்ச உடனே.. உங்களுக்காக நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா நடிச்சோம். போக போக அவுகளை நான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். புரிஞ்சுக்க ஆரம்பிச்ச பிறகு அவுகளை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

பெரிசா பேசத் தெரியாது
அவுகளுக்கு பெரிசா பேச எல்லாம் தெரியாது...ஆனா, ரொம்ப அக்கறை படுவாக.. எனக்கு ஒண்ணுன்னா அப்படியே துடிச்சு போறாக... இதுல அப்படியே நான் அவுகளை ரொம்ப ரசிக ஆரம்பிச்சுட்டேன்...என்று இவ்வளவும் பேச பேச, தனம், மீனா, கடைக்குட்டி கண்ணன் எல்லாரும் முல்லையை வாய் பிளந்து பார்க்கறாங்க.

சூப்பர் தம்பதி
முல்லையும் அப்படியே ஃபீல் பண்ணி சூப்பர் தம்பதியா இருப்போமான்னு தெரியலை.. ஆனா, இவுகளை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்து இருந்தா கூட நான் இம்புட்டு சந்தோஷமா இருப்பேனான்னு சொல்ல முடியாதுன்னு கடைசியில் ஒரே போடா போட்டுட்டா முல்லை. ஆடிப் போயி உட்கார்ந்து இருக்காங்க குடும்பம்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications