Munjya OTT: செம ஹாரர் காமெடி படம்.. 100 கோடி வசூல் வேற.. சத்யராஜ் நடித்த முஞ்யா ஓடிடி-யில் ரிலீஸ்
சென்னை: பிரபல பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சர்போதார் இயக்கத்தில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த ஹாரர் காமெடி படம் "முஞ்யா" டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் சத்யராஜ், ஷர்வரி வாக், அபய் வர்மா, மோனா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தி சினிமாவில் இது சத்யராஜின் மூன்றாவது படமாகும். தமிழ் சினிமாவின் ஒரு முகமான சத்யராஜ், இந்தி சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறார்.

"முஞ்யா" படத்திற்கு முன்பு, "சென்னை எக்ஸ்பிரஸ்" மற்றும் "ராதேஷ்யாம்" போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சத்யராஜ், "முஞ்யா" படத்தின் மூலம் தனது இந்தி பயணத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
அதித்யா சர்போத் தர் இயக்கிய இப்படம், உலகளவில் ரூ. 132 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 2024 ஜூன் 7 அன்று திரையரங்குகளில் வெளியானதிலிருந்து முஞ்சியா ஒரு பெரிய வெற்றிப்படைப்பாக மாறியது. மடாக் பிலிம்ஸ் பேனரின் கீழ் அமர் கௌஷிக் மற்றும் தினேஷ் விஜன் தயாரித்த இப்படம், வெறும் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதால், இந்த ஆண்டின் மிக அதிக வசூல் செய்த இந்தி படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சச்சின்-ஜிகர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள், படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

ஒரு அமைதியான கிராமத்தில் நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்ட கதை இது. சத்யராஜ் பாரம்பரியமான கிராமத்து மனிதராக, அந்த கிராமத்தில் நடக்கும் மர்மங்களைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது நடிப்பு மற்றும் கதையின் திருப்பங்கள், பார்வையாளர்களை கட்டிப்போடுகின்றன. கொங்கன் பகுதி கதை என்பதால் பார்ப்பவர்களுக்கு புது அனுபவம் தருகிறது.
படத்தில் காமெடி மற்றும் திகில் காட்சிகள் சரியான விகிதத்தில் இணைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. ஆமாங்க.. நம்ம சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் பார்முலாவேதான். ஹிந்தி திரையுலகும் இப்போது அந்த சக்சஸ் பார்முலாவை கையில் எடுத்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
பழைய கதைகளை புதிய கோணத்தில் பார்ப்பது போன்ற உணர்வை இந்தப் படம் தருகிறது. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு படமாக "முஞ்யா" அமைந்துள்ளது. திரையரங்குகளில் வெளியான போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற "முஞ்யா" தற்போது ஓடிடியிலும் அதே வெற்றியை திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து, "முஞ்யா" எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், அவர்களின் காத்திருப்புக்கு இப்போது முடிவு கட்டப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications