குஷி படத்துல தவறியது கணிப்பு..கொஞ்ச நாள் பொறு தலைவா.. தூதுவளை தந்த ஹிட்.. இசையமைப்பாளர் தேவா பளிச்
சென்னை: "எந்தவொரு பாட்டும் வந்துட்டு உடனே போயிடும். ஆனால், மெலடி மட்டும் வந்துட்டு போயிடுச்சு என்று சொல்லவே முடியாது.. காலத்துக்கும் பெயர் சொல்லும். ஆனால், அதில் எனக்கு பெயர் கிடைக்காதது வருத்தம்தான்" என்று இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
SS music என்ற யூடியூப் சேனலுக்கு தேவா பேட்டி ஒன்று தந்துள்ளார்.. அதில், 'லப்பர் பந்து படத்தில், ஓபனிங்கிலேயே இளையராஜா சார் பாட்டு கேட்கும்.. அப்போது ஒருவர், ராஜா ராஜாதான் என்பார்.. உடனே இன்னொருவர், "ராஜா,ராஜாதான், ஆனால் இது தேவா" என்பார்.. இதுபோல ஆரம்பத்தில் உங்களது சில பாடல்களை, வேறொருவரின் கம்போஸிங் என்று சொன்னபோது, உங்களது மனநிலை எப்படி இருக்கும்? என்று தேவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மெலடி பாட்டு: அதற்கு தேவா, "உண்மைதான்.. என் மெலோடி என்று பலருக்கும் தெரிவதில்லை.. ஆரம்பத்தில் இப்படி நிறைய சொல்லியிருக்காங்க.. ரொம்ப வருத்தமா இருக்கும்.. நிஜமாகவே அந்த மெலடி பாடல்களுக்கான அங்கீகாரம் என்பது கிடைக்காமல் போய்விடும்.. ஆனால், இப்பதான் தெரியுது, அந்த பாடல்களை எல்லாம் நான்தான் இசையமைத்தேன் என்று.
இதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன், ஒரு புரோகிராம் செய்வதற்காக, என்னிடம் பாட்டு லிஸ்ட் கேட்டார்கள்.. என்னென்ன பாடல்களை பாடப்போறீங்க? என்று கேட்டார்கள். நானும் என்னுடைய கம்போஸிங்கில் வந்த பாடல்களை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு தந்தேன். உடனே அவர் அதை பார்த்துவிட்டு, "உங்க பாட்டை மட்டும் பாடுங்க, உங்க மியூசிக்கில் வந்ததை மட்டும் லிஸ்ட் கொடுங்க" என்றார்.
கொஞ்ச நாள்: அதற்கு "நான் என்னுடைய கம்போசிங்கில் வந்ததைதான் தந்திருக்கிறேன்" என்றேன். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், "இல்லையே, கொஞ்ச நாள் பொறு தலைவா பாட்டு இருக்கே? இது வேறொருவர் மியூசிக் செய்ததுதானே?" என்றார். அதற்கு பிறகுதான் அது என்னுடைய பாட்டு என்று விளக்கினேன்.
இப்படி சில பாடல்களை நான்தான் மியூசிக் செய்தேன் என்று நிறைய பேருக்கு தெரியாமலேயே போய்விட்டது.. தேவா-ன்னா கானா, தேவா-ன்னா குத்து பாடல்.. இப்படியே நினைச்சிட்டு இருந்துருக்காங்க.. 35 வருஷம் இப்படியே ஓடிருச்சு..
லைவ் இன் கான்செர்ட்: சமீப நாட்களாகத்தான், லைவ் இன் கான்செர்ட் செய்யும்போதுதான், இது தேவா பாட்டு என்று எல்லாருக்கும் தெரியவருது.. எப்போதுமே காலத்துக்கும் அழியாதது மெலோடிதான்.. எந்த பாட்டும் வந்துட்டு உடனே போயிடும். ஆனால், மெலடி மட்டும் வந்துட்டு போயிடுச்சு என்று சொல்லவே முடியாது.. காலத்துக்கும் பெயர் சொல்லும். ஆனால், அதில் எனக்கு பெயர் கிடைக்காதது வருத்தம்தான்..
அதேபோல, வேற யாரோ ஒருத்தர் கானா கம்போஸ் செய்தால், அது தேவா பாட்டு என்று மாற்றி சொல்கிறார்கள். தூதுவளை அரைச்சு பாட்டை டவுன்பஸ் பாட்டு என்றே அன்று சொல்வார்கள்.. அதைவைத்து மீம்ஸ்கூட வந்தது. அதெல்லாம் எனக்கு சந்தோஷம்தான். இப்போது என்னுடைய பழைய பாட்டுக்களும் டிரெண்டாகுது..
மேகம் கருக்குது: பெயரளவுக்கு கம்போஸ் செய்துவிட்ட பாடல்கூட சிலசமயம் ஹிட் ஆகிவிடும். உதாரணத்துக்கு குஷி படத்தில் "மேகம் கருக்குது" பாட்டு கம்போஸ் செய்தேன்.. ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை.. சிம்பிள் கம்போசிங்காக இருந்தது..
எப்போதுமே நாம ஒரு பாட்டை கம்போஸ் செய்தால், மற்ற மியூசிக் டைரக்டர்களும் போனை போட்டு பாராட்டணும். எப்படி இவ்வளவு கஷ்டமான கம்போசிங் செய்தீர்கள் என்று கேட்கணும்.. ஆனால், மேகம் கருக்குது பாடல், சாதாரணமாக இருந்தது. அதனால் வேற ட்யூன் போட்டு தருவதாக சொன்னேன். உடனே எஸ்.ஜே. சூர்யா, இந்த பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும் என்றார்..
கணிப்புகள்: என் கிட்டாரிஸ்ட் குமார் என்பவரிடம், இதுக்காக எஸ்.ஜே.சூர்யா பெட் கட்டினார்.. கடைசியில் அந்த பாட்டு ஹிட் ஆகி, என் அசிஸ்டெண்ட்டுக்கு கார் வாங்கி தந்தார்.. இன்னொரு பாட்டுக்கும் இப்படித்தான் பெட் கட்டி, பைக் வாங்கி தந்தார். இப்படி எங்களுடைய கணிப்புகளும் சில சமயம் தவறாகிவிடும். அந்த அளவுக்கு பாடலின் பல்ஸ் தெரிந்தவர்கள் எஸ்ஜே சூர்யா, வசந்த், சுரேஷ் கிருஷ்ணா போன்றவர்கள்" என்றார் தேவா.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications