முத்துச்செல்வி தட்டி பறிச்சுக்கிட்டா... சவுந்தர்யா விட்டுக் குடுத்துட்டா!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் இப்போதுதான் அதோட சொந்த கதைக்கே வந்திருக்குன்னு சொல்லலாம்.
இதுவரைக்கும் நாட்டாமை, எஜமான், தேவர் மகன்னு கலந்து கட்டி அடிச்சு உட்டுக்கிட்டு இருந்தாங்க. முத்துசெல்வியை கண்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுல கதை சூடு பிடிக்கும், கதை தன் சொந்த பாதையில பயணிக்கும்னு நம்பிக்கை வந்திருக்குதுங்க.

ஆமா, இந்த கண்ணனனைத்தான் அதான் சின்னவரை சின்னத்தம்பி மாதிரி காமிச்சிருக்கீங்க. முத்து செல்விக்கு ஒண்ணும் தெரியாதா.. அப்போ பணக்கார ஒருத்தன் கிடைச்சா நல்லதுன்னு காத்திருந்த மாதிரியில்ல இருக்கு.
சின்னவரு அக்கா பொண்ணு சவுந்தர்யாவை கட்டிக்க போறாருன்னு ஊரே முத்து செல்விகிட்ட சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். சவுந்தர்யாவே எனக்கும், என் மாமாவுக்கும் நடக்க போற கல்யாணத்துக்கு நீதான் வேலை செய்யணும்னு சொன்னது முத்துச்செல்வி மண்டையில ஏறாத மாதிரியா கதை அமைப்பீங்க.

சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு சீரியல் எடுக்க கூடாதுங்க..அதுல நாலு பேருக்கு நல்ல விஷயமும் கத்துக்கற மாதிரி கதை, கதாபாத்திரங்கள் இருக்கணும். பஞ்சம் பொழைக்க வந்த சிறுக்கிதானேன்னு வாயாடியா இருக்கற எந்த கிராமத்து பொண்ணும், பெரிய நாட்டாமைன்னு சொல்ல கூடிய சின்னவரு கூட விளையாடறது.. டிராக்டர் ஓட்டறதுன்னு வச்சுக்க மாட்டாங்க.

முதலில் சந்தையில் போயி சின்னவரு கூட நின்னு போட்டோ எடுப்பாங்களா.. எல்லாமே இடிக்குது. சவுந்தர்யா மாமா மேல வச்சுருக்கற ஆசை தெரிஞ்சும், அவ வாழ்க்கையை தட்டிப் பறிச்சுக்கிட்டா முத்துச்செல்வி. விட்டுக் குடுத்துட்டு அமைதியா மனசுக்குள்ள அழுது காலத்தை கழிக்கறா சவுந்தர்யா.
உப்பு சப்பு இல்லையாம் சோத்துல.. கதையும்.. கருத்தும் இல்லையாம் கண்மணி சீரியல்ல..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications