விஷால் பேச்சால் என் படம் நின்னு போச்சு.. எல்லாத்தையும் விற்று.. இது தான் முடிவு.. லிவிங்ஸ்டன் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளித் திரையில் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முன்னணி கேரக்டர்களும் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் லிவிங்ஸ்டன் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

தன்னை இப்போது யாரும் நடிக்க கூப்பிடவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை அதில் பதிவு செய்திருக்கிறார்.

My film stopped because of Vishal speech Actor Livingston Emotional

அதேபோல நடிகர் விஷால் தெரிந்து பேசினாரோ தெரியாமல் பேசினாரோ ஆனால் அவர் பேசிய வார்த்தையால் தன்னுடைய படம் பாதியிலே நின்று போய்விட்டது என்ற வருத்தத்தையும் பகிர்ந்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

நடிகர் லிவிங்ஸ்டன் ஆரம்பத்திலிருந்து ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜிடம் இடம் உதவியாளராக இருந்து அவரிடம் இருந்து சினிமாவை கற்றுக்கொண்டு இயக்குனராக வேண்டும் என்ற ஒரு சில திரைப்படங்களையும் இயக்கி இருந்தார். ஆனால் அதில் அவர் எடுத்த முயற்சி எல்லாம் ஆரம்பத்தில் தோல்வியிலேயே முடிந்தது. அந்த நேரத்தில்தான் அவருக்கு நடிகராக வெற்றி கிடைத்தது.

போல நடிகர் லிவிங்ஸ்டன் வாழ்க்கையில் இயக்குனராக பிரபலத்தை கொடுத்தது பாக்யராஜ் என்றால் அவரை நடிகராக மாற்றி வாழ்க்கையை கொடுத்தது விஜயகாந்த் தானாம். அது குறித்து அவரே ஒரு பேட்டியில் பேசியிருந்தார். விஜயகாந்த் மூலமாகத்தான் பூந்தோட்ட காவல்காரன் என்று திரைப்படத்தில் லிவிங்ஸ்டன் நடிகராக அறிமுகமானார்.

ஆனால் அதைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும், காமெடியான கேரக்டரிலும் பலருடைய மனதை கவர்ந்தவர். இப்போது அதிகமாக சினிமாவில் இவர் நடிக்கவில்லை என்றாலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். கண்ணான கண்ணே, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நினைத்தாலே இனிக்கும் போன்ற சீரியல்களிலும் அதுபோல இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் போன்ற சீரியல்களிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் சமீப காலமாக நீங்க சினிமாவில் காணவில்லையே என்று கேட்ட கேள்விக்கு எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கல. அதனாலதான் என்னை பார்க்க முடியல என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது சினிமா இப்பதெல்லாம் முன்ன மாதிரி இல்லாமல் இப்போ கார்ப்பரேட் கம்பெனி போல மாறிவிட்டது. இப்போது பேன் இந்தியா என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த காலகட்டத்திலேயே பாக்கியராஜ் படம் பேன் இந்தியா படமாக தான் வந்தது. அது மட்டும் நல்ல கதைகள் இருந்தால் அதற்கு பாராட்டு கண்டிப்பாக கிடைக்கும். நான் இப்போது ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

அதன் பட்ஜெட்டே ஒன்றரை கோடி தான். ஆனால் இப்போ தம்பி விஷால் கொஞ்ச நாளைக்கு முன்னாடி யாரும் சின்ன பட்ஜெட்டில் படம் பண்ணாதீங்க. அப்படி படம் பண்ற பணத்தை ரியல் எஸ்டேட்டில் போட்டீங்கன்னா நல்ல லாபம் எடுக்கலாம். ஏற்கனவே நிறைய படங்கள் பெண்டிங்கில் கிடக்கிறது என்று சொன்னார்.

அவர் தெரிஞ்சி சொன்னாரோ தெரியாம சொன்னாரோ அவர் அப்படி சொன்னதால என்னால படம் பண்ண முடியாம இப்ப பாதியிலேயே நிற்கிறது. நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து தான் இந்த படத்துக்கான பணத்தை ரெடி செய்திருந்தோம். ஆனால் இவர் சொன்ன வார்த்தையை கேட்டு இப்போது பலரும் போன் பண்ணி விசாரிக்கிறார்கள். யாருமே படத்தை தொடங்குவதற்கு தயாராக இல்லை.

அதுபோல இப்போ நம்ம தமிழ் ரசிகர்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. அதனால ஒரு நல்ல படம் வியாபாரம் ஆகாமல் ஓடாமல் இருந்ததில்லை. அது போல் ஒரு குப்பையான படம் நன்றாக ஓடி சரித்திரமும் கிடையாது. அதற்கு ஒரு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் பெயரை சொல்லி, அந்த படம் ஓடவில்லையா? அந்த படம் வல்கரான படம்தான்.

வல்கராக இருந்தா என்ன? அதுதான் இப்போ ரசிகர்களுக்கு பிடிக்குது. நானும் அடுத்ததா ஒரு வல்கரான படத்தை தான் எடுக்க போறேன். ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதுதான் எனக்கு பிரம்மாண்டம். படம் வெளிவந்த பிறகு பாருங்கள் யாருமே இந்த கதையை எடுக்க தயங்குவார்கள் ஆனால் இதை நம்பி நான் கதை எடுக்க போறேன்.

அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் நான் 15000 ரூபா சம்பளம் வாங்கும் போதும் கஷ்டப்பட்டு தான் இருந்தேன் இப்போ சம்பத் லட்சத்தில் சம்பளம் வாங்கினாலும் கஷ்டப்பட்டு தான் இருக்கேன். வாய்ப்புகளும் பெரிய அளவில் வரவில்லை ஒன்னு ரெண்டு சீரியல் வாய்ப்புகள் வருகிறது. அதற்கு மட்டும் போயிட்டு வருகிறேன்.

இப்போது நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். வாடகை கொடுக்க சில நேரங்களில் காசு இல்லாமல் மனைவியின் நகைகளை கூட வைத்து வாடகை கட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும் நம்ம மீதும் நம்ம திறமையின் மீது இருக்கும் நம்பிக்கையால் தான் அடுத்து ஏதாவது செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் லிவிங்ஸ்டன் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+