எம்மாடியோவ் கப்பிலிருந்து டாய்லெட் "கப்" வரை எல்லாமே தங்கமா.. மைனா நந்தினி- யோகியின் தங்க வேட்டை
சென்னை: துபாயில் ஒரு ஹோட்டலில் தங்க வேட்டை நடத்திய மைனா நந்தினி- யோகி. டாய்லெட்டு கூட தங்கத்தில் இருக்கே!
விஜய் தொலைகாட்சியில் சரவணன மீனாட்சி என்ற தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தினி. இதன் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதிலுருந்து இவர் மைனா நந்தினி என அழைக்கப்படுகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இவரது கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொணடார்.
இந்த நிலையில் பல்வேறு சீரியல்களில் நடித்த இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம்தான் விவேக்கின கடைசி படமாகும்.

மைனா நந்தினி
இந்த நிலையில் மைனா நந்தினி தன்னுடன் பணியாற்றிய யோகேஸ்வரன் என்ற சீரியல் நடிகரை காதலித்து இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது துருவன் என்ற மகன் உள்ளார். மைனா நந்தினி ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என பிசியாக நடித்து வருகிறார்.

பிரியங்கா பிக்பாஸ்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கி வந்த பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அந்த நிகழ்ச்சியை மைனாவே தற்போதும் தொகுத்து வழங்குகிறார். மேலும் இவர் கலக்க போவது யார் நிகழ்ச்சியிலும் ஜட்ஜாக இருந்தார். இவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

சினிமா சீரியல்
இப்படி சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என பிசியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். இவர் தனது கணவர் யோகேஸ்வரனுடன் இணைந்து மைனா விங்க்ஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் இவர் அடிக்கும் லூட்டி இருக்கே... அப்பப்பா!

காமெடி
கணவர் குறித்தும், குழந்தை குறித்தும் இவர் காமெடியாக பேசி போடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அது போல் குடும்பத்துடனோ அல்லது பணி நிமித்தமாகவோ எங்காவது வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அதை வீடியோவாக எடுத்து போட்டு விடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் மைனாவும் யோகியும் துபாய் சென்றார்கள்.

துபாய் டூர் விலாக்
இங்கு நடந்த கலாட்டாக்களை எல்லாம் dubai tour vlogs என பெயரிட்டு பதிவிட்டுள்ளார்கள். அந்த வகையில் தங்கத்தினாலான செவன் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை சுற்றி பார்க்க சென்ற இவர்கள் அது குறித்த வீடியோவை போட்டுள்ளார்கள். இந்த 7 ஸ்டார் ஹோட்டலின் டாய்லெட்டு கூட தங்கத்தால் இருக்குமாம்.

தங்க டாய்லெட்டு
அந்த வீடியோவில் டாய்லெட்டு என ஹோட்டலில் உள்ள தங்கத்தினாலான அத்தனை இடத்தையும் சுற்றி பார்க்கும் மைனா அங்கிருந்த கோப்பையின் மூடியை எடுத்து இது எனக்கு ஒன்று கிடைத்தால் போதுமே என்கிறார் மைனா. அப்போது அங்கிருந்த ஹோட்டல் ஊழியர், அதை அந்த இடத்தில் வைக்குமாறு கூறுகிறார். இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவிற்கு ரூ 50 லட்சமாம். இப்படியாக அந்த ஹோட்டலில் இவர்கள் நடத்திய தங்க வேட்டை வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications