மெரினா பீச்சில் கணவருடன் மைனா நந்தினி செய்த செயல்.. வீடியோவுக்கு குவியும் பாராட்டும் விமர்சனமும்!
நடிகை மைனா நந்தினியின் வாழ்க்கையில் நடந்த நல்ல காரியத்திற்காக அவர் செய்த செயல்.
சென்னை: வாழ்க்கையில் தனக்கு நல்லது நிகழ்ந்ததால் மகிழ்ச்சி அடைந்த சீரியல் நடிகையும் ஆங்கருமான மைனா நந்தினி, கடற்கரைக்கு சென்று அங்கு என்ன செய்தார் தெரியுமா?
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சரவணன்- மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. இந்த சீரியலில் அவருடைய கேரக்டர் பெயர் மைனா. இந்த கதாபாத்திரம் நன்றாக ஹிட்டடித்தது. அதனால் அவருடைய பெயர் மைனா நந்தினி என்றே ஆகிவிட்டது.
இவர் விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் ஒரு கெஸ்ட்டாக வந்தார். அது போல் விஜய் டிவியில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

கில்லாடி ரங்கா
இவர் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, பெட்ரோமாக்ஸ், அரண்மனை 3, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்தவர். அங்குள்ள மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தார். பின்னர் பிபிஏ பட்டம் பெற்றார். இதையடுத்து டை் கில்லர் எனும் தொலைகாட்சி தொடரில் நடிக்க முடிவு செய்தார்.

வெண்ணிலா கபடி குழு
இவர் வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தில் நடித்துள்ளார். கலக்க போவது யாரு நிகழ்ச்சியை பார்த்த பாண்டிராஜ், மைனா நந்தினிக்கு வம்சம் படத்தில் வாய்ப்பை கொடுத்தார். அதில் சரசு கேரக்டரில் நடித்துள்ளார். அமுதா ஒரு ஆச்சரியக்குறி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனை கிளி, சின்னதம்பி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சர்தார்
சர்தார் படத்திலும் ஒரு ரோல் செய்துள்ளார். இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் 6 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஸ்வரமை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 3
2015 இல் நடந்த கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 2016 இல் நடந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 1 இல் 4ஆவது ரன்னர் அப்பாக வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3ஆவது ரன்னர் அப் ஆவார். இவர் தற்போது யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஏராளமான பாலோயர்ஸ்கள் உள்ளனர்.

லூட்டி
இவரும் கணவர் யோகேஸ்வரமும் சேர்ந்து அடிக்கும் லூட்டியை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 7.5 மில்லியன் பாலோயர்ஸ்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது யூடியூப் சேனலுக்கு 1 மில்லியன் பாலோயர்ஸ்கள் வந்துவிட்டனர். இதனால் மைனா நந்தினி மகிழ்ச்சியில் உள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நந்தினி சப்ஸ்கிரைபர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

1 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்
இந்த நிலையில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மைனா நந்தினி தனது கணவர் யோகேஸ்வரனுடன் கடற்கரைக்கு சென்றார். அங்கு ஏழை எளியவர்களுக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் வழங்கினார். இது குறித்த வீடியோவை இன்ஸ்டாவில் போட்ட மைனா, புடிச்ச விஷயத்த யோசிக்காம செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டுகளும் விமர்சனங்களும்
இதை ரசிகர்கள் பலர் பாராட்டியுள்ளார்கள். சிலர் வழக்கம் போல் வம்பிழுத்துள்ளார்கள். ஏன் வீடியோ எடுக்கிறீர்கள். உங்களுக்கு புடிச்ச விஷயத்த யாருக்கும் சொல்லாமலும் செய்யலாமே என கேட்டுள்ளனர். எனினும் ஏழைகளின் ஒரு வேளை பசியையாற்றிய உங்களுக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications