அழகிய மைனா.. குழந்தை பெத்த கையோடு சிக்கென்று மாறிய நந்தினி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்துவதில் எல்லா கதாநாயகிகளும் போட்டி போடுவது போல, தற்போது தான் அழகான குழந்தையைப் பெற்றெடுத்த மைனா நந்தினியும் ஆர்வமாக இருக்கிறாராம்.

இதுவரையிலும் இவர் பல போட்டோ ஷூட்டை நடத்தி வந்தாலும் குழந்தை பிறந்த உடனே இவர் புதுப்புதுக் குர்த்தியோடு கொடுத்திருக்கும் . போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி பரவி வருகிறது.

இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருக்கும் போது சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்து பிரபலமானதைத் தொடர்ந்து இவரை அனைவரும் மைனா என்றுதான் அழைத்து வருகிறார்கள்.

உற்சாகக் குவியல்

உற்சாகக் குவியல்

மைனா கேரக்டர் அந்த அளவிற்கு இந்த சீரியல் மூலமாக இவர் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார். அவருடைய பேச்சுக்களையும் நடிப்பையும் பலரும் ரசித்து வந்தனர். அதன்பிறகு இவர் அரண்மனை கிளி சீரியலிலும் நடித்துக்கொண்டிருந்தார். ஒரு உற்சாக குவியலாக காணப்படுவார் நந்தினி எப்போதுமே. அதைப் பார்க்கும்போது செம எனர்ஜியாக இருக்கும்.

ரசிகர்கள் ஜாஸ்தி

ரசிகர்கள் ஜாஸ்தி

சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய காமெடி நடிப்புக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. .ஆனாலும் இவருடைய வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து தான் அவருடைய ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர் முதல் கணவரின் தற்கொலைக்குப் பிறகு ஏகப்பட்ட கஷ்டங்கள். அதைத் தாண்டி வந்த அவர் 2வது திருமணத்தின் மூலம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்.

2வது திருமணத்தால் சந்தோஷம்

2வது திருமணத்தால் சந்தோஷம்

அவருக்கு இடையில் பெரும் ஆறுதலாக இருந்தவை இந்த சீரியல்கள் தான். அப்படி நடித்தபோதுதான் நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த யோகேஷ் என்பவரை காதலித்து மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இவருடைய இரண்டாவது திருமணத்தை பல ரசிகர்கள் ஆதரித்தாலும் சிலர் தப்பு தப்பாக பேசிக்கொண்டுதான் வந்தனர் .ஆனாலும் இவர் அந்தக் நெகட்டிவ் கமெண்டுகளை கண்டுகொள்ளவில்லை. இவரது கணவரும் இவரை ரொம்ப பாசமாக பார்த்துக் கொண்டார்.

ஆண் குழந்தைக்கு தாய்

ஆண் குழந்தைக்கு தாய்

இவர்களது சந்தோஷத்திற்கு அடையாளமாக சமீபத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் நந்தினி. குழந்தை பிறக்கும் முன்பு ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதை அவர்களுடைய குழந்தை பிறந்த அன்று வெளியிட்டு தனக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார்கள். இது பெரும் வைரலாக பரவியது. பெரிய வயிறோடு அப்போது போட்டோ போட்ட நந்தினி, இப்போது பிரசவத்திற்குப் பின்னர் ஸ்லிம்மாகி, அந்த போட்டோவை போட்டிருக்கிறார்.

ஸ்லிம் ப்யூட்டி

ஸ்லிம் ப்யூட்டி

குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படி ஒரு போட்டோ ஷூட் தேவையா என்று பல ரசிகர்கள் செல்லமாக கேட்டுக் கொண்டுள்ளனர். அதேசமயம், பரவாயில்லையே படு வேகமாக க்யூட்டாகி விட்டீர்களே என்று பாராட்டவும் செய்துள்ளனர். விதவிதமான புதுக் குர்த்திகளுடன் இவர் போட்டுள்ள போட்டோக்கள் வைரலாகியுள்ளன.

காட்டுங்க நந்தினி

காட்டுங்க நந்தினி

எல்லாம் சரி, எங்க குட்டிப் பையனைக் காட்டவே இல்லை என்று பலரும் செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் இன்னமும் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடவில்லை. இது நந்தினியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருக்கிறது. ஆனாலும் இவர் தினமும் கலக்கலாக போஸ் கொடுத்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். நடக்கட்டும் நடக்கட்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+