Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முட்டிப்போட்டு அழுதாரே ராதா ரவி.. சந்தோஷம் இல்லை.. மிஷ்கின் சினிமா விட்டு போனால் நஷ்டமில்லை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன் என பிரபல டைரக்டர் மிஷ்கின் கூறியிருந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. எதற்காக மிஷ்கின் இவ்வாறு சொன்னார்? என்று சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, மிஷ்கின் சினிமாவை விட்டு விலகுவது குறித்து, பேட்டி ஒன்றில் கருத்து கூறியிருக்கிறார்.

2 தினங்களுக்கு முன்பு மிஷ்கின் ஒரு விழாவில் பேசும்போது, "என்னை பட விழாக்களுக்கு அழைக்கிறார்கள், என்னை தயவு செஞ்சு அழைக்காதீங்க... அப்படி கூப்பிட்டால் ஒரு 5 லட்சம் கொடுங்க, அதை வைத்து என் மகளை படிக்க வைப்பேன்..

Television Mysskin Radha ravi

பிசாசு-2', 'டிரெயின்' படங்களுக்கு பிறகு மிஷ்கின் இருந்த இடமே தெரியாமல் போய்விடுவார் என்று பேசுகிறார்கள். சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நானும் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது. இப்போது அதிக போட்டி இருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்டத்தான் நான் சினிமாவில் தங்கியிருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

சினிமா ஒரு கடல்

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "மிஷ்கினை மாட்டிவிட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.. இதற்காகவே அவரை மேடைக்கு கொண்டு வந்து சர்ச்சையாக பேச வைக்கிறார்கள்..

ராதாரவி, மன்சூர்அலிகான், மிஷ்கின் போன்றோர் யதார்த்தவாதிகள்.. தங்களுக்கு தோன்றுவதை யோசிக்காமல் அப்படி அப்படியே பேசிவிடுவார்கள்..

மிஷ்கின் நிஜமாகவே ஒரு அறிவாளி.. சிலசமயம் அந்த அறிவு முதிர்ச்சியாகிவிட்டதால், அதீதமாக பேசி கொண்டேயிருப்பார்.. இதற்காகவே சிலர் அவரை மேடையேற்றி சர்ச்சையாக பேச வைத்தார்.. மிஷ்கினும் ஒருமுறை தான் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்.

காயங்கள், வலிகள்

தற்போது எடுத்துவரும் 2 படங்களை முடித்துவிட்டு, சினிமாவிலிருந்து விலகி விடலாம் என்றிருப்பதாக கூறி வருகிறார். மிஷ்கின் இல்லாவிட்டால் என்னாகும் சினிமா? இன்னொரு மிஷ்கின் இங்கு வரத்தான் செய்வார்கள்.. உண்மையிலேயே மிஷ்கினுக்கு என்ன காயங்கள் கிடைத்துள்ளது என்று தெரியவில்லை..

தனக்கு ஏற்பட்ட வலிகள் காரணமாக இப்படி சொல்லலாம்.. ஆனால், யார் போனாலும் வந்தாலும் சினிமா என்பது எப்போதுமே அழியாது.. எனினும் சினிமாவின் வரலாற்றை சொல்லும்போது, மிஷ்கின் பெயரையும் கண்டிப்பாக சொல்லும். பிபாசையே நல்ல பிசாசாக காட்டியவர் என்று புதுமைப்படுத்தி பேசும்.. ஆனால், தன்னை மிஷ்கின் வாழ வைக்கும் என்று சினிமா நம்பியிருப்பதிலலை..

ராதாரவி நடிப்பு அருமை

சினிமா என்பது கடல்.. இந்த கடலில் காணாமல் போனவர்கள் ஏராளமானோர்.. சினிமாவை விட்டு மிஷ்கின் விலக நினைப்பதாக சொல்கிறார்.. எதற்காக இப்படியொரு முடிவு எடுக்கிறார் தெரியவில்லை. ஆனால், டைரக்‌ஷன் செய்வதைவிட்டுவிட்டு, மிஷ்கின் நடிக்க போகலாம்.. காரணம், மிஷ்கின் மிகச்சிறந்த நடிகர்.. டிராகன் படத்தை அவருக்காகவே 2 முறை பார்த்தேன்.. அந்த ரோலை மிகச்சிறப்பாக செய்திருந்தார்..

எப்பவுமே ராதாரவியை வில்லனாகவே பார்த்துவிட்டு, பிசாசு படத்தில் பார்க்கும்போது, அசந்துவிட்டேன்.. எப்பேர்ப்பட்ட நடிப்பு அது.. அவரது அன்றைய அமரன் படத்தை பார்த்துவிட்டு பயந்துபோனவன் நான்.. அப்படிப்பட்ட ராதாரவியின் நடிப்பு பிசாசு படத்தில் வேறு மாதிரியாக இருந்தது.. இந்த படத்துக்கு ராதாரவிக்கு அவார்டு தராமல் இருப்பது வேதனையானது..

முதல்முதலாக நல்ல பிசாசு

ஒருகாலத்தில் எல்லாருமே பயந்து பார்த்த வில்லனான ராதாரவியை பார்த்து அனைவருமே பரிதாபடும் அளவுக்கு நடிப்பை கொண்டுவந்தவர் மிஷ்கின்.. பிசாசு என்றாலே எல்லாருமே பார்த்து பயந்துபோகும்போது, நல்ல பிசாசுவை முதல்முதலாக காட்டியவர் மிஷ்கின்..

ஒரு நல்ல கலைஞன் என்பதற்கு இதெல்லாம்தான் உதாரணம். எனவே மிஷ்கின் இருந்தால் சினிமாவுக்கு நல்லது... சினிமாவை விட்டு விலகினால் சினிமாவுக்கு இழப்பும் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+