டேய்.. போதும்டா உன் நடிப்பெல்லாம். .. ஆப்பிள் வாங்கிட்டு வந்திருக்கியே.. யார் காசுல வாங்கினே!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்தில் இரு வேஷங்களில் நடிக்கறார். மாயன் வேஷத்துல மதுரை பாஷை பேசி நடிப்பில் அசத்தறார்.
இன்னொருத்தர் மும்பையில் வளர்ந்தவர், டாக்டர் வேற.. இவரும் நடிப்பில் வித்தியாசம் காமிக்கறார். இருவரும் இரட்டையர்களானாலும் டாக்டர் வேற அப்பா அம்மாகிட்ட வளர்ந்தவர்.

சொந்த ஊரில் பொண்ணை கட்டிக்கிட்டு, அங்க இருக்க நேரிடும்போது அப்பாவான குஸ்தி வாத்தியாருக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. 4 மாதம் மட்டும்தான் உயிருடன் இருப்பார்னு ஒரு நிலை.
யாரிடமும் இந்த உண்மையை சொல்லாத டாக்டர் பிள்ளை, அப்பாவை கவனிச்சுக்க வீட்டோடு வளர்த்த அப்பா, அம்மா, பொண்டாட்டியோட வந்துடறார். மாயனை அப்பாவுக்கு பிடிக்காது. ஒன்னுக்கும் துப்பு இல்லாம திரியறான்னு..
பாசக்கார மாயன் அப்பாவை தன் மனைவியுடன் பார்க்க வர்றான்.. வழக்கம் போல அப்பா மாயனை உருப்படாதவன், விளங்காதவன்னு திட்டறார். பிள்ளைக்கு ரத்த பாசமாச்சே... மாயன்.. நீ என்னை என்ன வேணா திட்டு.. ஆனா, திட்டறதுக்கு நீ நல்லா கம்பீரமா எப்பவும் போல குஸ்தி வாத்தியாரா இருக்கணும்னு சொல்றான்.
நீ எவ்வளவோ சொன்னே.. உன் பேச்சை கேட்காம ஊதாரி பயலா போயிட்டேன்.. கம்பீரமா நீ நடந்து பார்த்து பழகிட்டேன். திடீர்னு உடம்பு சரியில்லேன்னு சொன்னாங்க.. அப்படியே ஆடிப் போச்சு மனசுன்னு கண்ணீர் விடறான்..

டேய்..டேய்.. போதும்டா உன் நடிப்பெல்லாம். இந்த ஆப்பிள் பழம் வாங்கிட்டு வந்திருக்கியே.. யார் காசுல வாங்கினேன்னு கேட்கறார். உங்க வீடு, எங்க வீடுன்னு இல்லை மாமா.. எங்க வீட்டுலேர்ந்து வாங்கிட்டு வந்தோம்னு மாயன் பொண்டாட்டி சொல்றா...
தோ பாரும்மா...உன்கிட்ட கேட்கலை.. உனக்கு வித்தியாசம் தெரியாம இருக்கலாம். இவன் சம்பாதிச்சு ஒரு கடலை உருண்டை வாங்கித் தர துப்பு இருக்கா? இவனை எப்படி என் புள்ளைன்னு சொல்றது? ஏதாவது சாதிச்சுட்டு வர சொல்லு, இவனுக்கு நான்தான் அப்பான்னு ஊரைக் கூட்டி சொல்றேன்னு சொல்றார்.
இந்த இடத்தில் மாயன் பார்ப்பவர் கண்கள் கலங்கும்படி ரத்த பாசத்தை உணர்த்தி நடிச்சுருக்கார். குடும்பத்துல இதுவும் முக்கியம்தானே...
அப்போதான் வீட்டுக்கு போனவுடனே மாயனின் மனைவி சொல்றா.. இத பாரு மாயன்.. இனிமே டபுள் கலர் லுங்கியில் ஜிங்குச்சான்னு ஊர் சுத்தாம என்ன பண்ணலாம்னு யோசின்னு சொல்றா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications