ஆசையா இருந்தா ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துருங்களேன்.. எதுக்கு இப்படி அழுகுணி ஆட்டம்!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரொம்ப நல்லாருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடிச்ச செந்தில் இதுல இரட்டை வேஷத்துல நடிச்சுருக்கார்.
ஒருத்தர் டாக்டர், ஒருத்தர்தான் மாயன்.. ரவுடி, பொறுக்கின்னு தன்னை சொல்லிக்கிட்டு இருப்பவன். ரெண்டு பேருல மாயனைத்தான் பெத்தவங்க வளர்க்கறாங்க. டாக்டர் வேற குடும்பத்துல வளர்றார்.
பெத்த அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போக, இவர்தான் ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கார். இரட்டை வேஷத்துல நல்ல வித்தியாசம் காமிச்சு நடிச்சுருக்கார் செந்தில்.அதனாலதான் இவர் சீரியலை குடும்ப பொண்ணுங்க விரும்பி பார்க்கறாங்க போலும்.

கல்யாணம்
மாயன் விருப்பம் இல்லாத சொந்தகார பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்க நேருது. டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணி இருந்தாலும், மாயன் மனைவி மேல உயிரா இருக்கான். லண்டனில் படிச்சுட்டு வந்த மச்சானும் மாயனை அவமானப் படுத்தறான்.

மச்சான்
லண்டனிலிருந்து வந்திருக்க மச்சான், மாயன் மனைவி, அம்மா,அப்பா எல்லாரும் மச்சினியின் கல்யாணம் பத்தி பேசிகிட்டு இருக்க, உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதான்னு கேட்கறான் மச்சான். புரியுமே.. ஒரு தடவை சொல்லு புரிஞ்சுக்கறேன்...அந்த புள்ள படிச்சு கலெகட்ராகணும்னு கனவுல இருக்கு. நீ என்னமோ சின்ன புள்ளைக்கு கல்யாணம்னு பேசறே.. நீ லண்டன்லதான் படிச்சியா.. உள்ளூர்காரன் மாதிரி பேசுறேன்னு சொல்றான்.

சொன்னேன்
அன்னிக்கே சொன்னேன், எங்க குடும்ப விஷயம் பேசிகிட்டு இருக்கோம். நீ தலையிடாதன்னு. இன்னிக்கு வந்து மூக்கை நுழைக்கறேன்னு சொல்றான். நானும் இந்த குடும்பம்தானேன்னு சொல்றான். அவங்க என் அப்பா, இவ என் அக்கா, அது என் அம்மா.. உன்னை என்னன்னு சொல்றதுன்னு கேட்கறான் மச்சான்.

எப்படி
அக்கா புருஷனை நீங்க எப்படி கூப்பிடணும்னு நினைக்கறீங்களோ அப்டி கூப்பிடுங்க. இல்ல மாமான்னு கூப்பிடுங்கன்னு சொல்றான் மாயன். நீ எங்க குடும்பமா இல்லையான்னு ரெண்டு மாசத்துல டிவோர்ஸ் கேஸ் கோர்ட்டுக்கு வருதுல்ல அப்ப தெரியும்.அதுவரைக்கும் நீ எங்க குடும்பம் இல்லை.. வெளியில போன்னு சொல்லிடறான்.

சிகரெட்
மாயன் வெளியில நின்னு சிகரெட் புடிச்சுகிட்டு இருந்தவன், மனைவி வருவதை பார்த்துட்டு, கீழ போட்டுடறான். இது என்ன புது பழக்கம்னு கேட்கறா.. புது பழக்கம் இல்லையே.. பழைய பழக்கம்தான்னு சொல்றான்.இல்லை என்னை பார்த்ததும் கீழ போட்டுட்டியேடான்னு சொல்றா.

தெரியும்ங்க
நான் பொறுக்கிதான்.. ரவுடிதான்.. ஆனா, குடும்பம்னா என்னன்னு எனக்கும் தெரியும்ங்க..குடும்பத்துக்கு மரியாதையை தரணும்னு எனக்கும் தெரியும்ங்கன்னு சொல்றான். அப்போ குடும்பத்துல குடிச்சுட்டு குப்புறப் படுத்து கெடக்கலாமான்னு கேட்கறா..

கு.முன் இல்லைங்க..
அது கு.பின் அப்டீன்னு மாயன் சொல்ல, அது என்ன கு.பின் அப்படீன்னு கேட்கறா. குடும்பத்துக்கு முன்னால குடிக்கறதில்லைங்க. குடிச்சுட்டு வரோம்.. குடிச்ச பின்னால குப்புறப் படுக்கறது, வாந்தி எடுக்கறது எல்லாம் நடக்குது.. அதுக்கு என்ன செய்யன்னு சொல்றான். அவ சிரிக்கறா.

இன்னிக்கும் பேசலை..
அன்னிக்கு மச்சான் என்னை குடும்பத்தோட சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட கூடாதுன்னு சொன்னான்.அப்பவும் நீங்க இவர் என் குடும்பம்தான்னு சொல்லலை. அப்புறம் ஃபேக்டரியில நடந்த பிரச்சனையிலும் சொல்லலை. அதுக்கு கூட நான் கவலைப் படலீங்க...இன்னிக்கு அவன் என்னை எங்க குடும்பம் இல்லேன்னு சொல்றான்.. நீங்க பேசாம இருந்தீங்க பாருங்க..அதுதான் வலிக்குதுன்னு சொல்லிட்டு போறான். இவ ஃபீல் பண்ணி பார்த்து நிக்கறா.
ஆசை இருந்தா புருஷன் பொண்டாட்டி ஒண்ணு சேர்ந்துருங்களேன்.. எதுக்கு இப்படி அழுகுணி ஆட்டம்னுதான் தெரியலை...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications