Naam Iruvar Namakku Iruvar Serial: கபாலி காலா வரதுக்குள்ள ஆட்டத்தை முடிச்சுக்கலாமாப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மாயன்தான் சூப்பர்னா,தேவி டபுள் சூப்பருங்க. தேவி ரவுடி ரெங்கம்மாவா நல்லாவே ஃபார்மாகி இருக்காங்க.

மாயன் சொல்லி குடுத்து ரவுடியான மாதிரியே தெரியலை..தன் இஷ்டத்துக்கு யாரைப் பார்த்தாலும் பளார் பளார் அடிதான்,உதைதான், மிதிதான்.

கெத்தான ரவுடி கூட துண்டை காணோம், துணியைக் காணோம்னு தலை தெறிச்சு ஓடறாங்க. ஒரு பெரிய டான் பேச்சு வார்த்தைக்குன்னு வர, அவன் வாயில் வெங்கயத்தை வச்சு,ஜீப்பை காலால் ஒரே தள்ளு ஜீப் ஓடுது.

ஜூனியர் ஆர்டிஸ்ட்டா

ஜூனியர் ஆர்டிஸ்ட்டா

என்னடா இவ்ளோக் கூட்டம் வந்து நிக்கறாங்க., ஆள் பத்தலைன்னு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வர சொல்லிட்டியான்னு, ரவுடி ரெங்கம்மாவாக நடிக்கும் தேவி, காரின் கீழ் ஒரு காலை தொங்கப் போட்டு, ஒரு காலை காரின் முன் பக்கம் வச்சு ஸ்டைலாக நின்று பேச, இல்லேங்க அவங்க எல்லாம் தமிழ் நாட்டில் அங்கங்கே இருந்து வந்திருக்கும் டான்னு சொல்றான் ரைட்டு.

டண்டனுக்கு டான்

டண்டனுக்கு டான்

இப்போ என்ன வேணுமாம் அவங்களுக்குனு தேவி கேட்க, இல்லேங்க உங்களைப் பத்தி கேள்விப்பட்டோம் .ஒரே நாளில் ஒரு டானை அடிச்சு,உதைச்சு,மிதிச்சு,வெங்காயத்தை வாயில் வச்சு ஓட ஓட விரட்டிட்டீங்க. இப்போது நாட்டில் டான்கள் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சு போச்சு.நமக்குன்னு ஒரு டிவி சேனல் ஆரம்பிக்கணும். அதில் நாயகன்,பாட்ஷா படம் மாதிரி மட்டும் போட்டு, டான்களை உருவாக்கணும். இந்த கோரிக்கையை வைக்கத்தான் வந்தோமுங்கன்னு சொல்றாங்க எல்லாரும்.

பார்க்கலாம் செய்யறேன்

பார்க்கலாம் செய்யறேன்

சரி யோசிச்சு பார்த்துட்டு கண்டிப்பா செயயறேன். வேற என்ன வேணும் உங்களுக்குன்னு கேட்கிறாள் தேவி.அடுத்த வாரம் என் பொண்ணோட கல்யாணம் நடக்குதுங்க.அதுக்கு நீங்கதான் தலைமை தாங்கணும்னு என் பொண்ணு விருப்பப்படுது. கண்டிப்பா என் பொண்ணோட ஆசையை நிறைவேத்தி வைக்கணும்மான்னு ஒருத்தன் பத்திரிகையை நீட்டறான்.

பையன் என்ன

பையன் என்ன

சார்..அதெல்லாம் இருக்கட்டும்.மாப்பிள்ளை பையன் என்ன பண்றான்னு கேட்க, இப்போதான் அவன் டிரெயினிங்கில் இருக்கான்னு மாமனார் சொல்றார். என்னது இப்போதான் டிரெயினிங்கா?பொண்ணை காப்பாத்துவானான்னு கேட்க, என்ன டிரெயிங்ன்னு கேட்கிறான் ரைட்டு.

எல்லாம் நம்ம டான் டிரெயினிங்தான்னு சொல்ல, தேவி, மாயன், ரைட்டு மூவரும் மயங்காத குறை.மாப்பிள்ளே..கபாலி,காலாஎல்லாம்நம்மை தேடி வரதுக்குள்ள, நாம ஜூட் விட்டுடலாம் மாப்பிள்ளைன்னு சொல்றான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+