Naam Iruvar namakku Iruvar Serial: அன்பு மட்டும்தான் ஜெயிக்கும்னு சொல்றாங்களே... பிக்பாஸ் டயலாக்கா?
சென்னை: தேவி, தாமரைக்கு சொல்றா.. இந்த உலகத்தில் அன்பு மட்டும்தான் ஜெயிக்கும்னு. இது உண்மையா?
பிக்பாஸ் சீசன் 3 கோப்பையை வென்ற முகேன் அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பார் அன்பு ஒன்றே அனாதை என்று.
ஆனால், அது இல்லை என்று நிரூபித்தது நமது மக்கள். வாக்குகளை அள்ளி அள்ளி போட்டு முகேனை தங்களது அன்பால் கோப்பையை ஜெயிக்க வைத்தவர்கள்.

விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனும் அரவிந்தும் இரட்டைப் பிறவிகள். மாயனின் மனைவி தேவி, அரவிந்தின் மனைவி தாமரை. தாமரை குழப்பத்தில் இருக்கிறாள்,கோயிலில் தாமரையை சந்திக்கும் தேவி, அன்பு எத்தனை மகத்துவம் வாய்ந்தது என்று புத்திமதி சொல்கிறாள்.

தாமரைதான் அன்பு
தாமரைக்கு அன்பைத் தவிர வேறு எதையும் காட்டத் தெரியாது. இவளை மாமியாருக்கு பிடிக்கலை.ஆனால், புருஷனுக்கு பிடிக்கும். அம்மா தாமரையை ஏத்துக்க மாட்டேன் என்று விஷம் குடித்துவிட தாமரையை கைவிடுகிறான் அரவிந்த். இப்போது வீட்டுக்கு வந்துவிட்ட தாமரை பெரும் குழப்பத்தில் இருக்கிறாள்.

இந்த நேரத்தில்
இந்த நேரத்தில்தான் கோயிலுக்கு வந்து இருக்கும் தாமரையின் மனதை தெளிவாக்குகிறாள் தேவி. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் தாமரை. வாழ்க்கையில் எவ்ளோ விஷயம் இருக்கு.அது எல்லாமே ஒரே ஒரு விஷயத்துக்கு முன்னாடி தோத்துப் போயிரும். அதுதான் அன்பு.

சுயத்தை இழக்காதே
என் வாழ்க்கையில் இருந்து அதை நான் கத்துகிட்டேன். என்னோட அன்பை எல்லாரும் பலவீனம்னு நினைச்சாங்க.நினைக்கிறவங்க நினைச்சுட்டு போகட்டும். அதுக்காக உன்னோட சுயத்தை இழந்துட கூடாது. கடைசியில் அன்பு மட்டும்தான் ஜெயிக்கும் என்று சொல்கிறாள்.


Click it and Unblock the Notifications
