Naam iruvar namakku iruvar serial: ஒரு ஓரமா படுத்துக்கறேங்க... மீசை எல்லாம் முறுக்கிபுட்டேன்!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனும், அரவிந்தும் இரட்டை பிள்ளைகள். இதில் மாயன் படிக்காத குறும்புக்கார பையன்.
படித்த தேவியை ஏமாற்றி தம்பி டாக்டர் அரவிந்த் மாதிரி நடிச்சு கல்யாணம் செய்துக்கறான். இதனால், மாயனை தேவிக்கு பிடிக்காமல் போகிறது. கோர்ட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
மாயனை தேவிக்கு பிடிக்கும்.. அவனை வீட்டார் நிர்பந்தம் காரணமாக ஏத்துக்க மறுக்கிறாள். ஆனால் ,விவாகரத்து கிடைத்தால் மட்டுமே இந்த வீட்டை விட்டு போவேன் என்று மாயன் பிடிவாதமாக தேவி வீட்டில் இருக்கான்.

காணோம் ஃபேனை
திடீரென்று ஹாலில் படுக்கும் மாயன் அண்ணாந்து பார்க்க ஃபேனில் ரெக்கையை காணோம். மாயன் பாட்டிகிட்டே கேட்க, இந்த வேலையை யாரு செய்வா.. நீ சொட்டப்பான்னு திட்டுவியே அவன்தான் இந்த மாதிரி லூசுத்தனமா செய்வான்னு சொல்றாங்க. எதுக்கு இப்படி செய்தே சொட்டப்புன்னு மாயன் கேட்க, டேய் வெட்டிப் பய உனக்கு எதுக்குடா ஃபேன்? சும்மா படுத்து கிடன்னு சொல்றார்.

சீப்பை ஒளிச்சு
என்ன சொட்டப்பு நீ ஃபேனை கழட்டிட்டா எங்களுக்கு படுக்க இடமே கிடைக்காதான்னு மாயன் சொல்ல, ,அவன் இப்படித்தான் லூசுப் பய .சீப்பை ஒளிச்சு வச்சுக்கிட்டா கல்யாணம் நின்னு போயிரும்னு நினைச்சுக்குவான்னு சிரிச்சுகிட்டே சொல்றாங்க பாட்டி. யோவ்..சொட்டப்பு இப்போப் பாரு தேவி ரூம்ல போயி படுக்க போறேன்னு சொல்லிட்டு, போறான்.

போ போடா
போடா போ.. இதுக்கு தேவி சம்மதிக்கணுமேன்னு சித்தப்பா சொல்றார்.நாங்க போன் பண்ணி கேட்டுட்டோம்ல..ரூம்ல வந்து படுத்துக்க சொல்லிட்டாங்க தேவி.எண்ணிக்கோ இன்னும் பத்து மாசத்துல இந்த வீட்டில் உனக்கு பேரக் குழந்தை பெத்து தர்றோம்னு சொல்லிட்டு நக்கலா நடந்து போறான்.

அறையில் தேவி
தேவி அறைக் கதவைத் தட்ட, யாருன்னு கேட்கறா தேவி .நான்தாங்க மாயன்..உள்ள வரலாமான்னு கேட்கறான். என்னவோ புதுசா கேட்கறே.ன்னு சொல்றா. இல்லீங்க..ஹாலிலிருந்த ஃபேனை சித்தப்பு கழட்டிருச்சு.இன்னிக்கு உங்க ரூம்லஒ ரு ஓரமா படுத்துக்கறேன்னு கேட்கறான்.
தேவி யோசிக்க.. ஏங்க சித்தப்பாகிட்ட மீசை எல்லாம் முறுக்கிக்கிட்டு நீங்களே வந்து படுன்னு சொன்ன மாதிரி போன் பேசி நடிச்சுட்டு வந்திருக்கேன்ங்க.. பிளீசுங்கன்னு கெஞ்ச.. சிரிக்கிறாள் தேவி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications