naam iruvar namakku iruvar: முத்தம் தர சொன்னா.. வெறும் எஃபெக்டை குடுத்துட்டு போறாங்க.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தான் சொல்லும் ஆங்கில வார்த்தையை சரியா எழுதினா முத்தம் தரேன்னு மாயனிடம் சொல்றா தேவி.

மாயனும் சரியா எழுதறேன்னு நாலு ஆங்கில வார்த்தைகளை ஒண்ணுக்கு கீழ் ஒண்ணுன்னு எழுதினாலும், எல்லாமே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.இப்படி பாடம் எடுப்பது பல எபிசோடுகளாக நீண்டுகொண்டே இருக்குது.

தேவி பேரை மட்டும் மாயன் சரியா எழுதிடறான். சரியாய் எழுதினத்துக்கு குடுக்கறதை குடுங்கன்னு கேட்கிறான் மாயன். தேவி குடுத்தாளா?

நல்லாத்தான் ஓட்றாய்ங்க

நல்லாத்தான் ஓட்றாய்ங்க

தேவி மாயனுக்கு ஆங்கிலம் படிக்க கத்து குடுக்கறதும்..மாயனாரோ கமல் மாதிரி சிணுங்கறதும்.. மீண்டும் தேவி ராதா மாதிரி கண்டிப்பு காண்பிக்கறதும்.. ஏற்கனவே ஓட்டின சீனுதான்.. இருந்தாலும் ஒன்ஸ்மோர் கேட்கறாய்ங்க..அதனால விதம் விதமா கற்பனை செய்து, ஆனால் கான்செப்ட் என்னவோ ஒண்ணு தாங்க. அதையே வச்சு நல்லா ஓட்றாய்ங்க.

பிழை இல்லாமல்

பிழை இல்லாமல்

தேங்க்ஸ், புல்லட், மேரேஜ், தேவி ஸ்டேடியம் இப்படி எல்லாம் எழுத சொல்றா தேவி. மாயனும் எழுதறான். சரியாய் எழுதிட்டா சீனு முடிஞ்சு போகுமே.. தேங்க்ஸ்னு எழுதறதுக்கு பதில் டேங்க்ஸ்ன்னு எழுதறான்.. புல்லட் தப்பா எழுதறான். மேரேஜுல ஆரை காணோம். இப்படி தப்பு தப்பா எழுதியவன் தேவி ஸ்டேடியம்னு எழுதறதில் தேவியை சரியா எழுதிட்டான்.

முத்தம் வேணுமே

முத்தம் வேணுமே

இப்போ சீன் படி பார்க்கறவங்களுக்கு ஒரு இது வேணாமா.. பாதி சரியாய் எழுதி இருக்கேன். உங்க பேரை தேவின்னு சரியாத்தானே எழுதி இருக்கேன். அதுக்கு ஏத்த மாதிரி எங்கியோ ஒரு இடத்துல குடுக்க வேண்டியதை குடுத்துடுங்களேன்னு கெஞ்சறான்.அப்படியா சொல்றேன்னு கிட்டே வர்றா தேவி. அவனின் சட்டையை பிடிச்சு இழுக்கிறான்.

எழுதினத்துக்கு தக்க முத்தம்

எழுதினத்துக்கு தக்க முத்தம்

ஏங்க எழுதினத்துக்கு தக்க முத்தம் தாங்கன்னு மறுபடி கேட்க, அவள் அருகே வருகிறாள், இவன் ஐயோ மொத்தமா தரப் போறிங்களான்னு சொல்லி உதட்டை துடைக்கிறான். கன்னத்தைத் துடைக்கிறான். அவளோ அவனது முகத்தைத் திருப்பி விட்டு கன்னத்தின் பக்கமாக வருகிறாள். ஓ.. கன்னத்துல தரப் போறீங்களான்னு இவன் கன்னத்தையும் துடைத்து, பார்த்து மெதுவா தாடி குத்தும்னு சொல்றான்.

சத்தம் மட்டும்தான்

சத்தம் மட்டும்தான்

அவள் காதுகிட்டே வந்து சத்தமாக வெறும் முத்த சத்தத்தை மட்டும் கொடுத்துவிட்டு இவ்ளோதான்னு போறா. என்னங்க முத்தம் குடுக்க சொன்னா, வெறும் எஃபெக்டை மட்டும் குடுத்துட்டு போறீங்கன்னு சொல்றான் மாயன். அதாவது தேவர் மகன் படத்துல வர்ற மாதிரி வெறும் காத்துதாங்க வந்துச்சு.. கூட கொஞ்சம் சத்தமும் சேர்ந்து வத்துச்சு.. அதுவும் சரித்தான்... மொத்தமா குடுத்துட்டா நாளைக்கு எப்படி ரீல் ஓட்டறதாம்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+