Naam iruvar namakku iruvar serial: கெத்துதான் அதுக்குன்னு எது செய்தாலுமா....?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் கெத்துதான். அதுக்காக எது செய்தாலும் கெத்துன்னு ஏத்துக்க முடியுமா?
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மிர்ச்சி செந்தில் இரட்டை வேடத்தில் நன்றாகவே நடித்து வருகிறார். மாயன் ரவுடி, அரவிந்த் டாக்டர்.
மாயன் எது செய்தாலும் ரசிக்கும்படி, சிரிக்கும்படி இருக்கும். ஏன் அவனை பிடிக்காமல் கல்யாணம் செய்துகிட்ட தேவிக்கு கூட அவனது செயல்கள் மூலம் அவனை பிடிக்க ஆரம்பிச்சு அவனை காதலிக்கவும் செய்கிறாள்.

தேவியின் தம்பி
மாயனின் தங்கை ஆனந்தியும், தேவியின் தம்பி கார்த்திக்கும் காதலிக்கிறார்கள்.ஆனந்தி மாயனின் தங்கை என்று தெரிந்து கார்த்திக் கல்யாணம் செய்துக்க மறுக்கிறான். தேவியின் தங்கை தாமரைதான் எப்படியோ பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிடறா.

கார்த்திக் ஆனந்தி
கார்த்திக் ஆனந்தி நிச்சயதார்த்தம் மாயன் வீட்டில் நடக்குது. தேவி உட்பட அனைவரும் அங்கு குழுமி இருக்க, மாயனை காணலைன்னு பேசிக்கறாங்க. மாயன் வந்து இறங்கறான் பாருங்க..அது என்ன ஒரு டிரஸ்..80 களின் பட நாயகன் போல பேண்ட் போட்டு இருக்கிறார்.. அது நல்லாத்தாங்க இருக்குது.

சட்டை கோட்
சட்டை மேல கோட்டு ஒன்னு போட்டுக்கிட்டு வர்றான் பாருங்க.. பார்க்கக் கண்றாவியா இருக்குது. எல்லாரும் ஒரு மாதிரி பார்க்க, இவர் மட்டும் கெத்தா ஆட்டோவுக்கு காசு கொடுத்துட்டு வீட்டுக்குள்ளே வர்றார். கோமாளி மாதிரி மாயனை வீட்டார் பார்க்கறாங்க. நமக்கே அப்படித்தான் இருக்குது.

கெட்டப் மாயன்
மாயன் கெட்டப் எப்போதுமே நல்லா இருக்கும். இரண்டு கலர் வேட்டி, அதாவது உள்ளே ஒரு கலர், வெளியே ஒரு கலர்னு. அதே மாதிரி சட்டையும் இரண்டு கலர்.இரண்டு கூலிங் கிளாஸ் சட்டைக்கு ஒண்ணு, தனக்கு ஒண்ணுன்னு நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால்,இன்னிக்கு கண்றாவியா இருக்குது.
ஆனா, தேவி வந்து அவனை கூல் பண்ணி அவனோட செல்ஃபி எடுத்துக்கறதா ஒரு ப்ரோமோ வந்து இருக்கு. இன்று இரவு பாருங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications