நதியா நதியா நைஸ் நதியா.. சின்னத்திரையில் .. அப்படியே இருக்காரே அழகு 'ரோஜா'வாக!
சென்னை: சன்டிவியின் ரோஜா சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகுதுன்னு அறிவிச்சதில் இருந்து ஒரே எதிர்பார்ப்பு. ஆச்சு திங்கள் கிழமையும் வந்துச்சு.
இவ்ளோ எதிர்பார்ப்புக்கும் காரணமாயிருந்தது ரோஜா சீரியலில் நதியா வரப்போறாங்கன்ற விளம்பரம்தான்.
வழக்கத்துக்கு மாறாக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இரவு 9 மணிக்கு ரோஜா சீரியல் பார்க்க மிக ஆவலா உட்கார்ந்திருந்தாங்க. நதியா காரில் தொப்பியால் முகத்தை மறைத்தபடி என்ட்ரி குடுத்தவங்க பின்னர் தொப்பியை கழட்டினாங்க.

பையனுக்கு அட்வைஸ்
காரில் எதிர்பாராம விழறாங்க ஒரு அம்மா, அந்தம்மாவிடம் நதியா விசாரிக்க காரைவிட்டு இறங்க, அதற்குள் அம்மாவின் பிள்ளை வந்து அம்மா பணம் கட்டிட்டேன்மா... போயிரும்மான்னு சொல்றான். அம்மா முதியோர் இல்லத்துக்கு போக மாட்டேன்னு சொல்றாங்க. இந்த இடத்துல நதியா அவருக்கு சின்ன அட்வைஸ் சொல்ல அவன் திருந்தி அம்மாவை தன்னுடன் அழைச்சுக்கிட்டு போறான்.

ரோஜா ஆஸ்ரமம்
நதியா நதியாவாவே நடிச்சுருக்காங்க. அவங்களோட பிறந்த நாளை எப்போதும் ரோஜா வளர்ந்த ஆஷ்ரமத்துலதான் கொண்டாடுறது வழக்கமாம்.. அதுக்காக வந்தவங்க வழியில அனுவை பார்க்கறாங்க... பிரியா பிரியான்னு கூப்பிட, கிட்ட வந்த அனு நதியா மேடம் நீங்களா... என்ன திடீர்னு கேட்கறா.உனக்கு தெரியாதா.. வருஷ வருஷம் என் பொறந்த நாளுக்கு ஆஷ்ரமத்துக்கு வந்துருவேன்னு நதியா சொல்றாங்க..

முடியாது மேடம்
ஆஷ்ரமத்துக்கு போக முடியாது மேடம்.. அது கேஸ்ல இருக்குன்னு அனு சொல்றா.. அதோட என் அப்பா அம்மா யாருன்னு தெரிஞ்சிருச்சு மேடம். என் பேரு பிரியா இல்லை, அனுன்னு சொல்றா. சரி ரோஜா எங்கேன்னு கேட்கறாங்க நதியா. அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சு மேடம்.. என் மாமா அர்ஜுனைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதுவும் ஒரு வருஷ கான்டராக்ட்லன்னு சொல்லி உசுப்பேத்தறா அனு

ரோஜாவை பார்க்கணும்
கான்டராக்ட் கல்யாணமா... தப்பாச்சே... உடனே புறப்பட்டு ரோஜாவை பார்க்கணும்னு சொல்றாங்க நதியா . நதியா மேடத்தை வச்சு ரோஜாவை வீட்டை விட்டு துரத்திடணும்னு அனு கணக்கு நினைக்கறா.

கல்பனா
ரோஜாவின் வீட்டுக்கு நதியா செல்ல, நதியாவோட பெரிய ஃபேன் ரோஜாவின் மாமியார் கல்பனா. நதியாவை கண்டதும் இவரின் நடிப்பு அபாரம். இவங்க என் மருமக, நான் அவங்க மாமியார்னு வடிவுக்கரசியைப் பார்த்து மாற்றி அறிமுகம் செய்வது, அதே போல கணவனை, இவர் என் வைஃப்.. நான் அவங்க ஹஸ்பெண்ட்னு கமல் மாதிரி மாத்திமாத்தி படபடப்பா சொல்லி சிரிக்கறதுன்னு நடிப்புல ஸ்கோர் பண்ணி இருக்காங்க.

சைக்கிள் நதியாதான்
நதியா ஸ்பெஷல்னு எதுவும் ஆரம்ப எபிசோட்ல இல்லை... சப்புன்னு சைக்கிள் நதியாவாத்தான் முடிஞ்சுது... போக போக பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications