நட்ட நடுரோட்டில் காதலி மீது தாக்குதல்.. கொந்தளித்த தெலுங்கு நடிகர்.. ரியல் ஹீரோவாக மாறிய தருணம்!
காதலியை அவதூறாக பேசிய இளைஞருக்கு அறிவுரை வழங்கிய நடிகர் நாக சவுர்யா
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாலையில் பெண்ணை தாக்கி அவதூறாக திட்டிய இளைஞரை நடிகர் நாக சவுர்யா தட்டி கேட்டதும் அவரை அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சவுர்யா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த Cricket Girls and Beer எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த அனுஷா ஷெட்டிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்தின்போது எடுத்த வீடியோ வைரலானது.

புதிய படம்
இவர் நடித்த பலான அப்பாயி, பலான அம்மாயி எனும் திரைப்படம் வரும் மார்ச் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் நாக சவுர்யா நிஜ ஹீரோவாக மாறி செய்த சம்பவம் வைரலாகி வருகிறது. அவருக்கு பாராட்டுகளும் குவிகின்றன. நாக சவுர்யா ஹைதராபாத்தில் தனது காரில் எங்கோ சென்று கொண்டிருந்தார்.

இளைஞர்
அப்போது அந்த வழியே ஒரு இளைஞர், அவருடைய காதலியை கடுமையாக தாக்கி, கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இத்தனைக்கும் அந்த பிஸியான சாலையில் ஒருவரும் அவர்களை தடுக்கவில்லை.

காரில் சென்ற நாக சவுர்யா
அந்த வழியாக காரில் சென்ற நாக சவுர்யா இவர்களது சண்டையை பார்த்துவிட்டார். இத்தனை பேர் பார்க்கிறார்களே என்கிற தயக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் அந்த இளைஞர் தொடர்ந்து அந்த பெண்ணை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். உடனே காரை விட்டு இறங்கிய நாக சவுர்யா விர்ரென அந்த இளைஞரிடம் சென்றார்.

மன்னிப்பு கேள்
அவரிடம் சாலையில் அந்த பெண்ணை ஏன் அடிக்கிறாய், அவரிடம் மன்னிப்பு கேள் என கோபத்துடன் அந்த இளைஞரிடம் நாக சவுர்யா சொல்கிறார். உடனே நாக சவுர்யாவை பார்த்த பொதுமக்கள் அப்பகுதியில் கூடுகிறார்கள். ஆனாலும் நாக சவுர்யா விடுவதாக தெரியவில்லை. மன்னிப்பு கேள் என கோபமாக சொல்கிறார்.

தட்டி கேட்ட நாக சவுர்யா
நாக சவுர்யா அந்த இளைஞரை தட்டி கேட்டவுடன் அந்த பெண் இனியும் சர்ச்சை வேண்டாம் என்பதால் தனது காதலனை தடுத்து நிறுத்தி வேறு பக்கம் அழைத்து செல்கிறார்கள். எனினும் ஒரு வழியாக மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நாக சவுர்யா படத்தில் மட்டும் இல்லாமல் நிஜ ஹீரோவாக செயல்பட்டத்திற்கு பலர் பாராட்டுகளை கூறி வருகிறார்கள். அது போல் இன்னும் சிலரோ நாக சவுர்யாவின் புதிய பட ரிலீஸுக்கு ப்ரோமோஷன் வீடியோவாக இதை வேண்டுமென்றே அரங்கேற்றிய திரைப்படக் குழுவினரின் தந்திர யுத்தியாக இருக்கலாம் என்றார்கள். எது எப்படியோ சாலையில் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக துணை நின்ற நாக சவுர்யாவை பலர் பாராட்டினர்.

தந்தை கைது
நடிகர் நாக சவுர்யாவின் தந்தை சிவலிங்க பிரசாத் தயாரிப்பாளராக உள்ளார். இவர் ஹைதராபாத் அருகே உள்ள மஞ்சிரேவு பகுதியில் ஒரு பண்ணை வீட்டை படப்பிடிப்புக்காக குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அந்த வீட்டை படப்பிடிப்புக்கு பயன்படுத்தாமல் சூதாட்டம் நடத்த பயன்படுத்தியாக தெரிகிறது. இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிவலிங்க பிரசாத் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications