எனக்கு கிருஷ்தான் வேணும்... அவன்தான் ரொம்ப ரொமான்டிக்.. கிறங்கி நெளியும் நாகினி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் நாகினி மூன்றாவது பாகம் ஒளிபரப்பாகிட்டு வருது. பாம்புகள் வசிக்கற ஊருங்க இது.

அதாவது பாதி உடல் மனித உருவமா இருக்கு,. கீழ் பாதி உடல் பாம்பு இருக்கு. அதை ஏதாவது ஆபத்து காலங்களில் மட்டுமே இந்த உருவத்தை பயன்படுத்திக்கறாங்க இச்சாதாரி நாகினிகள்.

இந்த இச்சாதாரி நாகினிகலில் ஒருவருக்கு நாகராணி மகுடம் சூட்டிவிட்டால் அவர்தான் ராணி.ஏற்கனவே நாகமணியை வச்சுக்கிட்டு இருக்கும் மீனாவுக்கு இந்த மகுடத்தை சூட்டியாகி விட்டது.

மாஹீர்

மாஹீர்

வீட்டை நாகமணிக்காக எதிரிகள் எரித்ததில் மீனாவின் கணவன் மாஹீர் செத்துட்டான்னு மீனா நினைச்சுக்கறா.ஆனா, எதிரிங்க மாஹீரை உயிரோடு காப்பாத்தி, அவன் மாஹீர் இல்லை, கிருஷ்ணு சொல்லி, ஆபத்திலிருந்து மீனாவை காப்பாத்த நாடகமாடறாங்க கிருஷ் உட்பட.

என் மாஹீர்

என் மாஹீர்

என் மாஹி நெருப்புல சாகலை...கிருஷ்தான் என் மாஹீர்னு மீனா சொல்றா. அப்பறம் ஏன் நம்ம எதிரிங்க பக்கம் அவன் போயி, அவளை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சு இருக்கான்னு விஷாகா கேட்கறா.அவங்க அவனை அப்படி ஆட்டுவிக்கறாங்கன்னு சொல்றா மீனா.

கட்டிக்கொண்டு

கட்டிக்கொண்டு

மாஹீர் தனது மனைவி மீனா கஷ்டப்படுவதை சகிக்க முடியாமல் மீனாவிடம் வந்து, நான்தான் மாஹீர்.. அவங்க நம்மகிட்ட இருக்க நாகமணியை எப்படியாவது அடையணும்னு இப்படி நாடகமாடறாங்க.. அதனால நானும் நடிக்கறேன்னு சொல்லிட்டு, மீனாவை கட்டிக்க கொள்கிறான்.

ரொமான்டிக்

ரொமான்டிக்

சிறிது நேரம் அமைதியாக மாஹீரின் பிடியில் இருந்த மீனா, தெரியும் மாஹீர் என் மாஹீரை எனக்குத் தெரியாதான்னு சொல்லி சிரிக்கறா. ஆமாம், என்னை விட்டுட்டு கிருஷை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னியே ஏன்னு கேட்கறேன் மாஹீர்.ஆமா, எனக்கு மாஹீரை விட கிருஷ்த்தான் பிடிச்சிருந்ததுன்னு சொல்றா. அவன்தான் ரொமான்டிக்.. துரு துறுன்னு பேசறான்னு சொல்றா.

கிருஷ்

கிருஷ்

அந்நியன் போல இருந்த மாஹீர், அப்படியே ரெமோ போல மாறினான் காதல் வார்த்தைகள் பேசினான்.கிருஷ் இதைப்போல காதில் விரல் நுழைத்தானா, கழுத்தை முகர்ந்தானா, முடியை கோதினானா..கழுத்துல முத்தம் குடுத்தானா, இறுக்கி கட்டிப் பிடிச்சானான்னு கேட்டுகிட்டே காதல் சில்மிஷம் செய்யறான் மாஹீர்.

ஹூம் பாம்பு உலகம் செம கற்பனைடா சாமி...பாம்பு பார்க்கலாம்னு குழந்தைங்க பார்த்தா பாம்பு ரொமான்ஸை பார்க்க வைக்கிறோமோ அது பாவம் இல்லையா மகா ஜனங்களே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+