நாயகி சீரியலும் மாறிப் போயிருச்சே... நட்சத்திராவை கொண்டு வந்துட்டாங்க.. கூடவே கிருஷ்ணாவும்!
சென்னை: பெரிய பெரிய சீரியல்களில் நடிகர் நடிகைகளுக்குப் பஞ்சம் வந்ததால் பல சீரியல்களை நிறுத்தி விட்டனர். சில வற்றில் நடிகர் நடிகைகளை மாற்றி விட்டனர். நாயகி சீரியலிலும் அதிரடி மாற்றமாம்.
கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளையே கதி கலங்க வைத்துவிட்டது. மக்களின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நார்மல் லைஃப் எல்லோருக்கும் தலைகீழாக மாறிவிட்டது.
அது சினிமா, டிவியையும் விட்டுவைக்கவில்லை. அழகா போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையும் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பல சீரியல்கள் குழம்பிப் போய்க் கிடக்கின்றன. அந்த வகையில்தான் நாயகி சீரியலில் நடித்தவர்களின் வாழ்க்கையும் மாறிவிட்டது.

முடித்து வைக்கப்பட்ட சீரியல்கள்
இந்த லாக்டவுன் காரணமாக பல சீரியல்கள் முடித்து வைக்கப்பட்டது. சிலவற்றில் இரண்டாம் பாகம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் புதுப்பொலிவோடு படப்பிடிப்பு தொடங்கி வெளியிடப் போகிறார்கள். நாயகி சீரியலில் இதுவரை நடித்து வந்த சிலரை இப்ப ப்ரோமோ வில் காணவில்லை. அதற்கு பதிலாக வேறு சிலர் வந்து இருக்கிறார்கள்.

திரு - ஆனந்தி
இது ரசிகர்களுக்கு பெரிய ஷாக் ஆக தான் இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் இருக்கிறது. நல்ல ரேட்டிங் இருக்கும் இந்த சீரியலுக்கு இப்போ ரசிகர்களிடம் ஆர்வமும் அதிகமாக இருக்கிறது. அதில் திரு, ஆனந்தி யாக நடித்த கேரக்டர்கள் இருவரையும் காணவில்லை இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.

ஆனந்தியாக நடித்த வித்தியா
இது மட்டுமல்ல நாயகி சீரியலில் ஆனந்தியாக நடித்துவந்த வித்தியா ஒரு நடிகை மட்டும் அல்ல, ஆராய்ச்சி விஞ்ஞானி அப்புறம் ஒரு டாக்டரும் கூட. இருந்தாலும் அவருக்கு மாடலிங்கில் ரொம்ப ஆர்வம் இருந்ததால் டாக்டர் தொழிலை விட்டுவிட்டு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தார். பரதநாட்டியம் முறையாக கற்றிருக்கிறார். அவர் சைவம் பசங்க 2 தடம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

நட்சத்திரா நாகேஷ்
இந்த சீரியலில் அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரியதாக இருந்தது மக்களின் மனதில் அவர் ஆனந்தியாக குடிகொண்டு விட்டார். இருந்தாலும் இப்போ இவர் சீரியலில் காணவில்லை. இந்த சீரியலில் புதியதாக நட்சத்திரா நாகேஷ் மற்றும் கிருஷ்ணா வந்திருக்கிறார்கள். இதில் நட்சத்திர நாகேஷ் தொகுப்பாளராக இருந்து சீரியல்களில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அழகிய தொகுப்பாளர்
சன் டிவியில் சன் சிங்கர் மற்றும் சன் குடும்பம் விருதுகள் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் போன்ற விருதுகளும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அது மட்டும் இல்ல சில படங்களிலும் சின்ன ரோலில் நடித்திருக்கிறார். வாயை மூடி பேசவும் மற்றும் சில படங்களிலும் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு குஷ்பூ சுந்தரின் தொலைக்காட்சி சீரியல் லட்சுமி ஸ்டோர் பாக்கியலட்சுமி ஆக அறிமுகமானார்.

ரொம்ப விரும்பத்தக்க பெண்
இந்த சீரியலுக்காக 2018 ஆம் ஆண்டில் சென்னை டைம் நான்காவது தொலைக்காட்சியில் விரும்பத்தக்க பெண் என்று பட்டியல் இடப்பட்டிருக்கிறது. அவரோடு இணைந்து கிருஷ்ணாவும் அறிமுகமாகியிருக்கிறார். இவர் தெய்வமகள் சீரியல் பிரகாஷ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரொம்பவும் பிரபலமானவர். இவரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இதே சன்டிவியில் தான் இவரும் கொடிகட்டி பறந்தார்.

கிருஷ்ணா வந்தாச்சு
கிருஷ்ணா முதலில் திரைப்படங்களில் தோன்றியிருக்கிறார். அதன்பிறகுதான் சீரியலுக்கு வந்திருக்கிறார். அனந்தபுரத்து வீடு என்னும் திரைப்படத்தில் ஜீவா கேரக்டரில் வில்லன் கேரக்டர் பண்ணி இருப்பார். இது ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது. அதற்குப் பிறகு தெய்வமகள் சீரியலிலும் சிதம்பர ரகசியம் என்னும் சீரியலிலும் இப்போ சன் டிவியில் ரன் சீரியலிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

இருவருக்கும் என்ன வேலை
ஆனால் இப்போ இவர்கள் இருவரும் இந்த சீரியலில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் குழம்பித்தான் போயிருக்கிறார்கள் இவர்களை ரசிகர்கள் வரவேற்றாலும் என்ன கேரக்டர் என்பது தெரியாமல் காத்திருக்கிறார்கள். இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகிறதோ.. சீரியல் உலகில் பல புதுப் புது மாற்றங்களை காண ரசிகர்களும் ரெடியாதான் இருக்காங்க மக்கா!
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications