கன்னத்தில் ஆசையாத் தொட்டு.. முத்தத்தைக் கொட்ட.. வெட்கப்பட்ட நட்சத்திரா!
சென்னை: மேட்சிங் மேட்சிங்காக கொண்டாட்டத்தை தொடங்கிய நட்சத்திரா நாகேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆனாலும் இதுவரைக்கும் குடும்ப குத்து விளக்காக இருந்த இவர் தற்போது காதல் கணவருடன் முத்தக்காட்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை வயிறு எரிய வைத்திருக்கிறார்.
நட்சத்திர நாகேஷ் முதல்முறையாக 2014இல் வானவில் என்னும் நிகழ்ச்சியை தந்தி டிவியில் தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார் . அதன் பிறகு சன் டிவியில் காலடி எடுத்து வைத்தவர் .

பாட்டுப் பாடி
சன் சிங்கர் என்னும் நிகழ்ச்சி மூலமாக பாடகர்களையும் பாட்டு ரசிகர்களையும் பரவசப்படுத்தி தன்னுடைய சிரிப்பான பேச்சால் தனக்கே உரிய தனி தமிழ் உச்சரிப்பு திறனுடன் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருந்தார் .சன் டிவியில் தொகுப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவராக இவர் வலம் வந்து கொண்டிருந்தார்.

அழகிய தொகுப்பாளினி
தொகுப்பாளர்களில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தவர் என்று சொன்னதும் டக்கென்று ஞாபகத்திற்கு வருபவர் இவர் தான் .அந்த அளவிற்கு தமிழ் உச்சரிப்பாலும் அழகாலும் அனைவரின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருந்தவர். அதன்பிறகுதான் வாணி ராணி என்னும் சீரியலில் ருத்ரா கேரக்டரில் முதல் முதலில் சீரியல்களில் நடிக்க காலடி எடுத்து வைத்தார் .

வாய் மட்டுமல்ல நடிப்பும் சூப்பர்
இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்த குஷ்பூ இவருக்கு பேச மட்டுமல்ல நடிக்கவும் நன்றாகவே தெரிகிறது என்று தான் தனது லட்சுமி ஸ்டோர் என்னும் சீரியலில் இவருக்கு பாக்கியலட்சுமி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார் .அதிலும் தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் பாக்கியலட்சுமி ஆக இடத்தை பிடித்து விட்டார்.

லட்சுமி ஸ்டோர்ஸ் காதல்
லட்சுமி ஸ்டோர் சீரியல் மூலமாக காதல் பண்ணும் இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கும் இந்த சீரியலில் நடிகருக்கும் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி காரணமாக பலர் தங்களுடைய ஸ்டேட்டஸ் சாங்களிலும் இவர்களுடைய போட்டோஸ்கள் தான் இடம்பெற்றன. இந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்த இவர் இந்த சீரியல் சீக்கிரத்தில் முடிக்கப்பட்டதும் இவரை காணாது இவருடைய ரசிகர்கள் தவித்து வந்தனர்.

விருது விழாக்களில் கலக்கல்
அதன் பிறகும் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் இவர் சீரியலில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மீண்டும் நாயகி சீரியலில் இவருக்கு வாய்ப்பு வந்தது. கோரானா லாக் டவுன் காலத்திற்கு முன்பாக நாயகி சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இந்த லாக்டோன் காரணமாக இதில் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த நடிகைகள் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதால் புதிய அத்தியாயத்துடன் இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டது.

திருப்புமுனை சீரியல்
அதில் இவர் இந்த சீரியலின் கதாநாயகியாக அறிமுகமானார் .இந்த சீரியலில் நடித்த தெய்வமகள் பிரகாஷ்க்கும் மீண்டும் ஒரு திருப்புமுனையாக இந்த சீரியல் வலம் வந்தது. ஆனாலும் இதுவும் சீக்கிரத்தில் முடிக்கப்பட்டால் தற்போது இனி திருமணத்தில் தனது கவனத்தைச் செலுத்துவோம் என்று இவர் முடிவு எடுத்துவிட்டார். இவருக்கும் ராகவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நிச்சயதார்த்தத்திற்கு திரைப்படத்துறையினர் முதல் பெரும் ரசிகர்களும் உறவினர்களும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

திருமணம்
நிச்சயதார்த்தத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிட்டு வரும் இவர். நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் தனது வருங்கால கணவருடன் போட்டோஷூட் எடுத்து வருகிறார் .இதுவரைக்கும் குடும்ப குத்து விளக்காக இருந்த இவர் தற்போது அரை டவுசரும் போட்டுக்கிட்டு கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

போட்டோ கலக்கல்
இந்த போட்டோவை பார்த்ததும் அதிர்ச்சியான இவருடைய ரசிகர்கள் என்ன ஆச்சு திடீர்னு இப்படி இறங்கி விட்டீர்களே என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். அதுவுமில்லாமல் தற்போது லேட்டஸ்டாக இவரது எங்கேஜ்மென்ட் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். இதனை பார்த்து பல பேர் வயிறு எரிந்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள் சிலர் வாழ்த்துகளையும் கூறி வருகிறார்கள்.

மேட்ச்சிங் மேட்ச்சிங்
இவரும் இவருடைய வருங்கால கணவரும் மேட்சிங் மேட்சிங் உடையோடு கையில் மெகந்தி வைத்துக்கொண்டு இவர் மெஹந்தி வைத்த கையை அவரிடம் காட்ட அவர் கன்னத்தில் ஆசையாய் முத்தத்தை கொட்ட அதை அப்படியே போட்டோ எடுத்த போட்டோகிராபர் .பலபேர் பார்ப்பதற்காக தற்போது நக்ஷத்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .அதற்கு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார் .அதில் கிளிக் செய்து முதல் நிகழ்வு எங்கள் கொண்டாட்டத்தை தொடங்கியது.

சந்தோஷம்
நிச்சயதார்த்தத்தை நடத்த எங்கள் குடும்பங்கள் முடிவு செய்த சில வாரங்களுக்கு பிறகு எங்களுடைய நண்பர்களுடன் நாங்கள் பாட்டு சிரிப்பு என சந்தோஷமாக கொண்டாடி கொண்டிருந்தோம் அதற்கு ஆதரவாக இருந்த எங்களுடைய சிறந்த நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த அவருடைய நண்பர்களும் திரைப்பட துறையினரும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை வழங்கி வருகிறார்கள்
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications