Nam Iruvar Namakku Iruvar serial: அட இது நம்ம விஜய் டிவி குடும்ப சீரியல்கள் பிராபர்டி..
சென்னை: விஜய் டிவியின் அத்தனை சீரியல்களிலும் திறந்த வெளி ஜீப் தவறாமல் இடம் பெறுவதை கவனிச்சு பாருங்க. ஆனால், இதுவும் நல்லாத்தான் இருக்கு.
தேன்மொழி பிஏ, சுந்தரி நீயும் சுந்தரன் நானும்,நம் இருவர் நமக்கு இருவர் இப்படி பல சீரியல்களின் பிராபர்ட்டியாக இந்த ஜீப் இருக்கிறது.
பழைய படங்களில் திறந்த வெளி கார், திறந்த வெளி ஜீப் என்று பார்த்ததை விஜய் டிவி சீரியலில் பார்க்கையில் நன்றாக இருக்கிறது.

நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி ரவுடி கெட்டப் போட வேண்டுமென்று மாயனிடம் ஆசையாக கேட்பாள். அப்போது அவளை தூக்கி செருகிய புடவை, நீண்ட தலைமுடி, தலை நிறைய பூ, வெற்றிலை பாக்கில் சிவந்த உதடுகள் என்று ரவுடி கெட்டப்பில் அழைத்து செல்ல இந்த ஜீப்தான் உதவியது.

சுந்தரன் நானும்
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் வேலுவுக்கு சொந்தமான ஜீப் இது.அதில்தான் அரசியல்வாதியான அவன் எப்போதும் வலம் வருவான். அவனது நண்பர்கள் இந்த ஜீப் எங்கு இருந்தாலும் நம்ம அண்ணன் இங்குதான் இருக்கிறார் என்று கண்டு பிடித்து விடுவார்கள். இப்படித்தான் தமிழ்ச்செல்வியுடன் கடைக்கு வந்திருந்த போது நண்பரிகளிடம் மாட்டிக்கொண்டு ஒளிந்துக் கொள்ளும்போது ஜீப் காட்டிக் கொடுக்கிறது.

தேன்மொழி பிஏ சீரியல்
தேன்மொழி பிஏ சீரியலில் நாயகன் அருள்வேலின் சொந்த ஜீப்பும் இதுதான்.இதில் அவன் வந்தால் தேன்மொழி கல்லுப்பட்டி ஹீரோ கல்லுப்பட்டி ஹீரோ என்று சொல்லி வாய் பிளந்து நிற்பாள். நம்ம ஹீரோ சார் வண்டி வருது.. விலகு விலகு என்று தானும் விலகி மற்றவர்களையும் விலக வைப்பாள்.

ஷூட்டிங் வசதி
இப்படி திறந்த வெளி ஜீப்பில் யாரையாவது பயணிக்க வைத்து ஷூட் செய்வது என்பது மிக எளிது.காமிரா ஆங்கிள் வைக்க நல்ல வசதியாகவும் இது இருக்கும். விஜய் டிவியின் பெரும்பாலுமான சீரியல்கள் கிராமத்தில் நடக்கும் கதையாக இருப்பதால் இந்த ஜீப் கதைக்கு ஒட்டியதாகவும் இருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications