ஆஹா.. வொர்க் அவுட் ஆகுது.. நந்தினிக்கு ரெட்டைப் புள்ளை பொறக்கப் போவது உறுதிங்கோ!
சென்னை: கலர்ஸ் டிவியின் திருமணம் சீரியலில் கட்டாய கல்யாணம், பரிகாரம் செய்ததும் கொஞ்சம் கொஞ்சமா வொர்க் அவுட் ஆயிட்டு வருதுங்க... நந்தினி மனசு மாறிக்கிட்டே வருது.
சந்தோஷ்தான் பாவம் எதையும் புரிஞ்சுக்கத் தெரியாம அதே மன நிலையில் இருக்கான். கட்டாய கல்யாணம், நம்மைப் பிடிக்காம எப்படி ஜனனி நம்ம கூட வாழ்வான்னே இன்னும் கலக்கத்துல இருக்கான்.
ஒரே வீட்டுல இருக்கும்போதும், ஒரு மனிதனின் முகம் தவிர இன்னொரு பக்கமான மனதை பார்க்கும் போதும் , ஒரு பெண்ணின் மனம் இளகாமல் எப்படி இருக்கும்?.,

காதலாய் மாறும்
வெளியில் கணவன் மனைவி போல நடிக்க ஆரம்பிச்சாச்சு. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தைப் பார்த்துமாச்சு. இங்கதான் ஒரு பொண்ணா ஜனனி நிக்கறா. இந்த சூழ்நிலையில் எப்போதும் இளகும் பெண் மனம் இப்போதும் இளகி வருது. நடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கணவன் மீது காதலாகி கசிந்து வருகிறது ஜனனிக்கு.

ஒர்க் அவுட்
இரண்டாவது தாலி கட்டிக்கணும், குளத்துல முங்கி எழுந்திரிக்கணும்... மாலைகள் இரண்டும் குளத்து நீரில் இணைந்தால் தம்பதி ஒற்றுமை நிலவும், இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று அருள் வாக்கு சொல்ல, இப்படி பரிகாரம் செயதது வொர்க் அவுட் ஆவது போல அண்மைய காட்சிகள் திருமணம் சீரியலில் வருது.

சந்தோஷ் உருக்கம்
சந்தோஷ் படுக்கை அறையில் உட்கார்ந்து இருக்கான், காபி கொண்டு வருகிறாள் ஜனனி. என்னங்க, நாம டைவர்ஸுக்கு அப்ளை பண்ணலாமா, பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கறீங்க... எவ்ளோ நாளைக்குத்தான் நான் உங்களுக்கு இப்படி கஷ்டத்தை குடுக்க முடியும். எங்க அப்பா, அம்மாவை சந்தோஷப்படுத்த உங்களையும் சேர்ந்து நடிக்க வச்சு கஷ்டப்படுத்தறேன்னு சந்தோஷ் உருகறான்.

வேலையைப் பாருங்க.
ஜனனி, மனசை குழப்பிக்காம நிம்மதியா இருங்க, போய் ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்கன்னு சொல்லிட்டு, எல்லாம் சரியாகிரும்னு மைண்ட் வாய்ஸ்ல சொல்றா. இங்கதான் பெண்களோட சாமர்த்தியம், ஆண்களோடு அசட்டுத்தனத்தை டைரக்டர் காமிக்கறார்.

காதல் பீறிடுகிறது
சந்தோஷின் சட்டையை எடுத்து கையில் வைத்து முகர்ந்து பார்த்து, என் கூட இந்த சட்ட இருப்பது போல, அவரும் என் கூடவே கடைசி வரைக்கும் இருக்கணும்னு காதலால் கசிந்து உருகுகிறாள். சட்டையை தான் போட்டு கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறாள். பின்னர் சட்டையை தனது வார்ட்ரோபில் வைத்துக் கொள்கிறாள்.
பரிகாரம் வொர்க் அவுட் ஆயிருச்சுங்கோ... ரெட்டைப் புள்ளை பொறக்கப் போவது உறுதிதானுங்கோ...
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications