எனது வருங்கால மனைவி யார் தெரியுமா?.. உண்மையை கூறிய நாஞ்சில் விஜயன்.. திருமணம் எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தனது வருங்கால மனைவி யார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது எது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் தனது பேச்சு, காமெடி, உடல்மொழி போன்றவற்றால் பலரை சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன். இவர் பெரும்பாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பெண் வேடம் ஏற்று நடிப்பார். மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

Nanjil Vijayan says about her fiancee

இவர் லாக்டவுன் நேரத்தில் யூடியூப் சேனலை தொடங்கினார். அந்த சேனலுக்கு யூடியூபர் சூர்யா தேவியை பேட்டி எடுத்த போது வனிதா விஜயகுமார்- பீட்டர் பால் திருமணம் குறித்து தகாத வார்த்தைகளால் பேசியிருந்தார்.

இதையடுத்து வனிதா விஜயகுமார் சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார். மேலும் சூர்யா தேவி கஞ்சா வியாபாரி என்றும் நாஞ்சில் விஜயனுடன் அந்த பெண் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் வனிதா விஜயகுமார். இதையடுத்து சூர்யாதேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் இருவருக்கும் இடையே அடிதடி வரை போனது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு சூர்யாதேவியை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் 2022 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸார் நாஞ்சில் விஜயனை கைது செய்தனர். அண்மையில் கூட ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் நாஞ்சில் விஜயன் சிக்கினார். பிரபல நடிகை ஒருவருடன் சேர்ந்து 1500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை பிளாக்கில் 6000, 7000 என பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தன.

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. குடும்பத்தினர் மத்தியில் மிகவும் எளிமையாக நாஞ்சில் விஜயனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளித் திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாஞ்சில் விஜயன். இவர் திருமணம் செய்ய போவது நண்பர்கள் மூலம் அறிமுகமான பெண்தானாம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+