நாஞ்சில் விஜயன் மனைவி என் பிரண்டு தான்.. விடிய விடிய டார்ச்சர்! போன் பண்ணி மிரட்டுறாங்க! திருநங்கை ஓபன்
சென்னை: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, திருநங்கை வி.ஜே வைஷு பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வைஷு, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

யார் இந்த நாஞ்சில் விஜயன்
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நாஞ்சில் விஜயன். பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அரசியல் தலைவர்களை மிமிக்ரி செய்தது, ராப் பாடகர் ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு எனப் பலமுறை இவர் சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
வைஷுவின் கண்ணீர் பேட்டி
வைஷு தனது பேட்டியில், நாஞ்சில் விஜயனுக்கும் தனக்கும் இடையிலான உறவு குறித்து பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் நண்பர்களாகப் பழகி வந்ததாகவும், 2018ஆம் ஆண்டு தனது குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளின் போது நாஞ்சில் விஜயன் ஆறுதலாக இருந்ததால், அவர் மீது காதல் ஏற்பட்டதாகவும் வைஷு தெரிவித்துள்ளார். தனது காதலை முதலில் அவரிடம் தெரிவித்ததாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம்
ஆறு ஆண்டுகளுக்கு மேல் இருவரும் காதலர்களாகப் பழகி வந்தனர். நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டபோது, தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், அவர் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் அனுமதி அளித்ததாக வைஷு கூறினார். நாஞ்சில் விஜயன் திருமணத்திற்குப் பிறகும் இருவரும் கணவன் மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறி இருக்கிறார்.
ஏமாற்றம்
நாஞ்சில் விஜயனுக்குக் குழந்தை பிறந்த பிறகு, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் தன்னை ஒதுக்க ஆரம்பித்துவிட்டதாக வைஷு குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து, தன்னைத் தவிர்த்து விட்டதாகவும் அவர் கண்ணீருடன் கூறினார். "நான் திருநங்கை என்பது இப்போதுதான் அவருக்குத் தெரிந்ததா? நாங்கள் பல நாட்கள் ஒரே அறையில் கணவன் மனைவி போல வாழ்ந்தோம். அப்போது நான் திருநங்கை என்பது அவருக்குத் தெரியவில்லையா?" என்று வைஷு மனம் குமுறினார். மேலும், "நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்" என்றும் குற்றம் சாட்டினார்.
மிரட்டல்
நாஞ்சில் விஜயனின் மாமியார் தனக்குத் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகவும், "எனக்கு ஸ்டாலின் தெரியும், ஆட்களை வைத்து உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டியதாகவும் வைஷு தெரிவித்துள்ளார். தான் பெரிய அளவில் எதுவும் கேட்கவில்லை என்றும், திருமணத்திற்குப் பிறகு எப்படி வாழ்ந்தாரோ அப்படி வாழ்ந்தால் போதும் என்றும் வைஷு தனது பேட்டியில் கதறி அழுதுள்ளார்.
அதோடு வைஷு மேலும் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதாவது நாஞ்சில் விஜயனின் மனைவி என்னுடைய பிரண்டு தான். என் மூலமாகத்தான் அவர் நாஞ்சில் விஜயனுக்கு அறிமுகமானார். அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே நாஞ்சில் விஜயன் மனைவிக்கு எனக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் இருக்கும் உறவு எல்லாம் தெரியும். தெரிந்துதான் அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு நாஞ்சில் விஜயன் என்னுடன் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் எனக்கும் அவருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. நான் அவரிடம் இப்போது பேசமாட்டேன் ஆனாலும் நாஞ்சில் விஜயன் மனைவி பேச்சை மீறி என்னுடன் பேசிக் கொண்டுதான் இருந்தார்.
நியூ இயர் அன்று கூட நாங்கள் இருவரும் தான் பாண்டிச்சேரியில் ஒன்றாக இருந்தோம். இரவு முழுக்க அவர் என்னுடன் தான் இருந்தார். அவர் என்னை தூங்க கூட விடவில்லை என்று விஜே வைஷு குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இதற்கிடையில் நேற்று இரவு நாஞ்சில் விஜயன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் மாதம்பட்டி ரங்கராஜனை போலவே "ஓய் பொண்டாட்டி நான் ஷூட்டிங் வந்துட்டேன், நீ குழந்தையை பார்த்துக்கோ கவனமாய் இரு. யார் என்ன சொன்னாலும் அதை நம்பாத. உனக்கு நான், எனக்கு நீ" என்று பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது .
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications