Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கப்பலில் நெப்போலியன்.. உசுரே தனுஷ் தான்.. மருமகள் அக்‌ஷயாவின் 2வது முறை திருமணம்.. காரணம் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் நெப்போலியன் அமெரிக்காவிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு, முக்கிய பிரபலங்களை அழைத்து சமீபத்தில் விருந்து வைத்திருந்தார். அது தொடர்பாக வெளியாகியிருந்த போட்டோவில், மருமகள் அக்‌ஷயா எங்கே? என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.. இதையடுத்து, நெப்போலியன் மற்றொரு திருமண வீடியோவை வெளியிட்டிருந்தார்.. இதுகுறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்திருக்கிறார்.

Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "முதன்முதலில் தங்களது மகனுக்கு இப்படியொரு பிரச்சனை இருப்பது தெரிந்ததுமே, நெப்போலியன் தம்பதியினர் இடிந்து போய்விட்டார்கள்..

Television Napoleon actor napoleon

இதற்காக எங்கெங்கோ சிகிச்சைக்காக சென்றார்கள்.. மகனின் நோயை குணப்படுத்தவும் முயன்றார்கள்,.. தன்னுடைய உயிரை கொடுத்து மகனை, இயல்பாக கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைத்தார். இதற்காக தன்னுடைய நடிப்பு தொழிலையும் கைவிட்டார்.. மத்திய இணை அமைச்சர் பதவியையும் கைவிட்டார்,.

தமிழ்நாட்டிலிருந்த தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு, மகன் தனுஷை அழைத்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார். தனுஷூக்காக தன்னுடைய வீட்டை டிசைன் செய்திருக்கிறார் நெப்போலியன்.. படிக்கட்டுகள், பாத்ரூம் முதல் அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளார்.

நெப்போலியன் - தனுஷ்

அனைத்து தகப்பனுக்கும் உரிய ஆசைதான் நெப்போலியனுக்கும் வந்து, தனுஷூக்கு திருமணம் செய்ய முடிவெடுததார்.. பல இடங்களில பெண் தேடியபிறகு, அக்‌ஷயா என்ற பெண் கிடைத்தார்.. நல்ல உள்ளம் படைத்த பெண் அக்‌ஷயா..

தனுஷூம், அக்‌ஷயாவும் முதலில் இருவரும் பேசிப்பழகுங்கள்.. உங்களுக்குள் அனைத்து கருத்துக்களும் ஒத்துப்போனால் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்றார்.. அதற்கு பிறகுதான் தனுஷ், அக்‌ஷயா இருவரும் பல நாட்கள் போனிலேயே பேசி பழகினார்கள்.. 3 மாதங்களுக்கு பிறகுதான் தனுஷை திருமணம் செய்ய அக்‌ஷயாவிடம் சம்மதமா? என்று கேட்டார்.. அதேபோல தனுஷின் சம்மதத்தையும் கேட்டு, இறுதியில் இருவருக்கும் ஜப்பானில் திருமணத்தை செய்து வைத்தார்.

ஜப்பானில் ஏன் திருமணம்

தமிழ்நாட்டை சேர்ந்த நெப்போலியன் அமெரிக்காவில் வசித்து வரும்போது, ஜப்பானில் இந்த திருமணத்தை செய்தது ஏன் தெரியுமா? தனுஷூக்கு ஜப்பான் மிகவும் பிடிக்குமாம்.. ரம்மியமான சூழல் என்றாலே தனுஷுக்கு பிடிக்கும் என்பதால், ஜப்பானிலேயே திருமணத்தை செய்துவிடலாம் என்று தனுஷ் சொல்லியிருக்கிறார்..

மகனின் ஆசைப்படியே ஜப்பானில் ஆடம்பரமாக நடத்தினார் நெப்போலியன்...பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு சென்றார்கள்..

அதேபோல அமெரிக்காவிலிருந்து, ஜப்பான் செல்வதற்கு தனுஷால் ஃபிளைட்டில் செல்ல முடியாது.. அதனால, கப்பலை ஏற்பாடு செய்தார் நெப்போலியன்.. மாதக்கணக்கில் டிராவல் செய்த நெப்போலியன் குடும்பத்தினர், இந்த திருமணத்தை சிறப்பாக நடத்தினார்கள்..

பெற்றோரை சந்திக்க வந்த அக்‌ஷயா

அக்‌ஷயா - தனுஷ் இருவருமே மாதக்கணக்கில் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையை நடத்தினார்கள்.. திருமணத்துக்கு பிறகு, தமிழகத்திலுள்ள தன்னுடைய பெற்றோரை அக்‌ஷயா சந்திக்க வரவேயில்லை.. எனவே, தன் அப்பா, அம்மாவை பார்ப்பதற்காக சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்..

இந்த நேரத்தில் தனுஷூக்கு கோபி, சுதாகரை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.. ஏனெனில் பரிதாபங்கள் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கக்கூடியவர் தனுஷ்.. கோபி, சுதாகர் இருவரும் நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா வந்திருப்பது நெப்போலியனுக்கும் தெரிந்திருக்கிறது.. அதனால் நெப்போலியன் கோபி சுதாகரை நேரடியாகவே சென்று சந்தித்து, தனுஷை பற்றி சொல்லி வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்..

பரிதாபங்கள் கோபி - சுதாகர்

உடனே கோபி, சுதாகர் இருவருமே தனுஷை பார்க்க நெப்போலியன் வீட்டுக்கு வந்தார்கள்.. இவர்களுக்கு பெரிய விருந்தும் நெப்போலியன் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும நெப்போலியன் ஷேர் செய்திருந்தார்..

அதில் அக்‌ஷயா இல்லாததை பார்த்த நெட்டிசன்கள், "அக்‌ஷயா எங்கே?" என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.. தன்னுடைய தாய், தகப்பனை பார்ப்பதற்காக அக்‌ஷயா தமிழ்நாட்டிற்கு வந்திருந்தது தெரியாமல், கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் வைத்து, தாறுமாறான கட்டுக்கதைகளை இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டனர்.

அமெரிக்க பிரஜையான அக்‌ஷயா

ஆனால், தனுஷ், அக்‌ஷயா தம்பதி சிறப்பாகவே சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.. அமெரிக்கா பிரஜையாக அக்‌ஷயா மாற வேண்டுமானால், அமெரிக்க முறைப்படி திருமணத்தை செய்ய வேண்டும்.

அதனால்தான், கடந்த வாரம் மீண்டும் ஒருமுறை திருமணம் நடத்தப்பட்டுள்ளது.. இந்த போட்டோ, வீடியோக்களையும் நெப்போலியன் போஸ்ட் செய்திருந்தார்.. இப்போது நெப்போலியன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.. இந்த சந்தோஷம் அவர்களுக்கு எப்போதுமே கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+