ஹனிமூன் எங்கே தெரியுமா? அதைவிடுங்க, மருமகளுக்கு நெப்போலியன் தந்த தங்கம், சொத்து பாருங்க.. இது நிஜமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் படுஜோராக நடந்து முடிந்துள்ள நிலையில், புதுமண தம்பதிகள் ஹனிமூன் எங்கே செல்ல போகிறார்கள்? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.. அத்துடன், மணமகள் அக்‌ஷயாவுக்கு நெப்போலியன் தந்துள்ள சொத்துக்கள் பற்றியும் பயில்வான் கூறியிருக்கும் கருத்துக்கள், இணையத்தை வட்டமடித்து வருகின்றன.

Paper Weight Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில் சொன்னதாவது: "நெப்போலியன் மகனுக்கு 2ம் திருமணம் நடக்க போகிறது. இதை சொன்னதே நடிகர் நெப்போலியன்தான்..

television napoleon dhanush

திருமணம்: "ஜப்பானில் நடந்தது எங்களது சந்தோஷத்துக்காக.. தனுஷூம், அக்‌ஷயாவும் அமெரிக்காவில்தான் வாழ போறாங்க.. அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை தேவை.. இதற்கு சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய வேண்டும். இந்த திருமணம் அமெரிக்காவின் ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்காகத்தான், 2வது திருமணம் நடைபெற உள்ளது.. இந்த திருமணத்தை நான் நடத்தி வைக்க போகிறேன்" என்று நெப்போலியன் சொன்னார்.

புதுமண தமபதிகள் தேனிலவுக்கு சிங்கப்பூர் செல்கிறார்களாம்.. 14ம் தேதி (இன்று) புது மண தம்பதிகள் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளனர்.. அங்கு 4 நாட்கள் இருக்கிறார்கள்.. இந்த நேரத்தில் சென்னை வரும் நெப்போலியன், தன்னுடைய நண்பர்களை பார்க்க உள்ளார். ஒரேநேரத்தில் அரசியல்வாதி, அப்பா, கணவன் என 3 பொறுப்புகளையும் திறன்பட வகித்து, அனைவரின் ஆதரவையும் பெற்று வருகிறார்..

உடலுறவு: திருமண ஆசை வந்துவிட்டாலே, தனுஷூக்கு உடலுறவில் விருப்பம் இருக்கிறது என்று பொருள். இதை மருத்துவர்களும் சொன்னார்கள்.. ஆனால், அக்‌ஷயா கருத்தரிக்கும்போது, அந்த வாரிசுக்கு, தனுஷூக்கிருக்கும் தசைபிடிப்பு நோய் வர வாய்ப்புள்ளது, ஆனால், அது உடனே தெரியவர வாய்ப்பில்லை, 4 வருடம் கழித்துதான் தெரியவரும் என்கிறார்கள்.

ஏற்கனவே தனுஷ் அனுபவித்த இன்னலை அவரது வாரிசும் அனுபவிக்க வேண்டுமா? குழந்தை பெற்றுக்கொள்வது உசிதமல்ல. ஒருவேளை நயன்தாரா மாதிரி குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். தனுஷின் விந்தை வைத்து கருத்தரிக்க முடியாது. வேறொருவரின் விந்தணுக்களை வைத்துதான் அக்‌ஷயா கருத்தரிக்க முடியும். இந்த முறைப்படி குழந்தை பெற்றுக் கொள்ள போகிறார்களா? அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள போகிறார்களா? அல்லது தத்தெடுக்க போகிறார்களா? என்பதெல்லாம் அக்‌ஷயா, தனுஷின் விருப்பமாகும்.

சொத்துக்கள்: அதேபோல, ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. மணமகள் அக்‌ஷயா பெயரில் 200 கோடி சொத்தினை நெப்போலியன் எழுதி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.. 100 பவுனுக்கு மேல் நகைகள், தங்கக்கட்டிகளாகவும் நெப்போலியன் தந்திருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது..

இவைகளையெல்லாம் அக்‌ஷயாவுக்கு தந்தால் என்ன? தனுஷூக்கு தந்தால் என்ன? அக்‌ஷயா தரப்படும் சொத்தில், தனுஷூக்கும் பங்கு இருக்கத்தானே செய்கிறது. ஆனால், ஒரு தமிழன் அமெரிக்காவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால், அது நமக்கெல்லாம் பெருமை" என்று பூரித்து சொல்கிறார் பயில்வான்.

தொடர்ந்து அந்த பேட்டியில் பயில்வான் பேசும்போது, "சினிமாவிலும், அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் நெப்போலியன்.. எம்எல்ஏ, எம்பி, மத்திய இணை அமைச்சர் பதவியை வகித்தவர்.. அமெரிக்கா சென்று தன்னுடைய வியாபாரத்தை பிரிவுபடுத்தினார். பிறகு பிஜேபியில் சேர்ந்தார்.. ஆனால், உடனே பிஜேபியிலிருந்தும் விலகிவிட்டார். எனினும், தொட்ட இடம் பொன்னாகும் என்பதை நிரூபித்தவர் நெப்போலியன்" என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+