சின்னவரை குனிய வச்சு முதுகில் ஏறிய முத்துச்செல்வி.. சேலத்தில் கலகலப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நட்சத்திர கொண்டாட்டம் நிகழ்ச்சி அடிக்கடி தமிழ்நாட்டின் மதுரை, திருச்சி இப்படி பல ஊர்களில் நடந்து வருது.

இந்த முறை சேலத்தில் இந்த கொண்டாட்டம் நடந்தது. சன் டிவியின் கண்மணி, நாயகி, கல்யாண பரிசு, ரோஜா,நிலா,லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல்களின் நட்சத்திரங்கள் கலந்துக்கிட்டாங்க.

சேலம் மக்கள் இந்த டிவி நட்சத்திரங்களை பார்க்க வெயில்னு கூட பார்க்காம மகளிர் கல்லூரி கிரவுண்டில் கூடிட்டாங்க.

குடும்பத்தின் நிலா

குடும்பத்தின் நிலா

நிலா குடும்பத்தின் நிலாவை சிறுமிகள் வெள்ளை உடை அணிந்து ஏஞ்சல் மாதிரி கூட்டமா வந்து நிலா நிலா ஓடி வான்னு பாட்டு பாடி வரவேற்றாங்க. சன் டிவியின் காமெடியன்கள் இருவர் வந்து அவ்வப்போது கலகலப்பு செய்தார்கள்.

மிக அமைதி

மிக அமைதி

கண்மணி சீரியல் சஞ்சீவ் வந்திருந்தார்..அமைதியா பேசினார்.கூட்டத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார். டான்ஸ் ஆடிட்டு, மாங்காய் பறிக்கற கேம் ஒன்றை விளையாடினார்.

முதுகில் முத்துச்செல்வி

முதுகில் முத்துச்செல்வி

சீரியலில் மாங்காய் பறிக்கற போதுதான் முத்துசெல்வியை பார்த்தீங்க. இப்போ இந்த மாங்காயை முத்துசெல்வி பறிக்கணும்...சின்னவர் உதவணும்னு டாஸ்க் வைக்கறாங்க.உடனே முத்துச்செல்வி சின்னவரை குனிய சொல்ல... உண்மையில் சஞ்சய் பதில் பேசாம குனிஞ்சுட்டார். அவர் முதுகில் ஏறி முத்துசெல்வி மாங்காய் பறிச்சது.. முகம் சுளிக்க வச்சுருச்சு.

ரியாலிட்டி வேற

ரியாலிட்டி வேற

சீரியல் வேற.. ரியாலிட்டி வேறன்னு முத்துசெல்விக்கு தெரியாம போனது வருத்தம்தான். சஞ்சீவ் பட்டு சட்டை போட்டு இருந்தார். உண்மையில் முத்துசெல்வியின் இந்த செயல் முகம் சுளிக்க வச்சுருச்சு.தஞ்சாவூர் பொண்ணுன்னு சொல்லிக்குது.. நம்ம தமிழ் பொண்ணு இப்படியா?

முத்துசெல்விக்கு கதையிலும் கேரக்டர் சரியில்லை...நிஜத்திலும்....என்னத்த சொல்ல

சாக்லேட் பாய்

சாக்லேட் பாய்

ரோஜா சீரியலின் அர்ஜுன் மேடை ஏறினாலே போதும்.. அந்த கல்லூரிப் பொண்ணுங்க கத்தின கத்து இருக்கே... ரெண்டு நாளைக்கு தொண்டை கட்டிக்கும். அர்ஜுன் நல்ல பர்சனாலிட்டி.. பொண்ணுங்களுக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு .

நமக்கு கர்வம்தான்

நமக்கு கர்வம்தான்

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசறார். காமிரா மேன்,டைரக்டர் இவங்கதான் எனக்கு தமிழ் டீச் பண்றாங்கன்னு சொன்னார். எங்கிருந்து வந்தாலும் தமிழ் பேசினால்தான் அடுத்தடுத்து வாய்ப்பு வரும்னு அவங்களும் தமிழ் கத்துக்கறாங்க.இது நமக்கு கர்வம்தானே

பதனி விருது

பதனி விருது

நிகழ்சசியின் முடிவில் ரீ ஆக்ஷன் ராணி, மேக்கப் ராணி விருதுகளும்...பதனி பதனி விருதுகளும் வழங்கப்பட்டன. பதனி பதனி விருது என்ன தெரியுமா...ஒருத்தரை பத்தி ஒருத்தர் கிட்ட போட்டு கொடுக்கறது.

கிருஷ் பாடகர்

கிருஷ் பாடகர்

நிகழ்ச்சிக்கு பாடகர் கிருஷ் வந்து ஒரு சில பாடல்கள் பாடினார். லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ரவி , பாக்கியலட்சுமியிடம் மேடையில் பிரபோஸ் பண்ணிட்டார்... சும்மாதான்...ஆனா,போற போக்கைப் பார்த்தா நிஜமாவே பிரபோஸ் பண்ணி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+