உனக்காக அதை விட்டேன்.. இதை விட்டேன்.. அந்தக் கதையெல்லாம் இங்க வேணாம் மகனே!
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சிக்கு லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் அழகிகள் வந்திருந்தனர்.
இமான் அண்ணாச்சி இந்த நிகழ்ச்சியை ரொம்ப நல்லா நடத்திட்டு வர்றார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக சன் டிவியில் கலக்கிய நட்சத்திரா, இந்த சீரியலில் பாக்கிய லட்சுமியா நடிக்கறார்.

அவர் பேசும்போது, லவ்வுல உனக்காக இதை விட்டேன், அதை விட்டேன் என்ற கிவ் அன்ட் டேக் பாலிசி இருக்க கூடாது. அப்படி இருந்தா.. ஐயையோ.. இவன் நமக்காக இதை விட்டிருக்கானே, இவனுக்காக நாம ஏதாவது செய்யணும்னு உறுத்திக்கிட்டே இருக்கும்.
உதாரணத்துக்கு இப்போ சிகரெட் பிடிக்கறான்னு வச்சுக்கிட்டா, சிகரெட் பிடிக்காத.. எனக்காக விட்டுடுன்னு சொல்லி அவன் விடக் கூடாது. அவனா, உடலுக்கு இது தீங்குன்னு விடணும். காலம்பூரா உனக்காக இதை நான் விட்டேன்னு அவன் சொன்னா நல்லாருக்காதுன்னு சொன்னார்.

காதல் திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. திருமணம்னு சொன்னா அது அந்த ரெண்டு பேரோட போற விஷயம் இல்லை.ரெண்டு குடும்பம் தொடர்பான விஷயம்.. முதலில் இரு குடும்பங்களுக்கும் பிடித்து போக வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று நல்ல விஷயம் பேசினார்.
பிரியாணி சாப்பிட ரொம்ப பிடிக்கும். ஸ்டார் ஹோட்டேல்ஸ்ல பஃபே சிஸ்டம்ல நல்ல அயிட்டம்ஸ் இருந்தா எல்லாமே சாப்பிடணும், அதுக்கு ஏத்தமாதிரி எதை எதை எவ்வளவு சாபபிடணும்னு முதலில் பார்த்துட்டுத்தான் சாப்பிட ஆரம்பிப்பேன்னு சொன்னார்.
கடைசியில ஐஸ்கிக்ரீம்,ஸ்வீட் என்ன இருக்குன்னு பார்த்துப்பேன். அது ரொம்ப நல்லா இருந்தா அதுக்கு ஏத்த மாதிரி, இந்த அளவுகளை குறைச்சு சாப்பிடுவேன்னு சொன்னார்.
ஒருமுறை ஸ்டார் ஹோட்டலில் இப்படித்தான் எங்க வீட்ல எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் செட் செய்து வந்து குடுத்தேன். இவ்ளோ நல்லாருக்கேன்னு எல்லாரும் சாப்பிட்டாங்க. அண்ணன் என் கூட வந்து எப்படித்தான் இந்த ஐஸ்கிரீமை செட் பன்றேன்னு பார்க்கறேன்னு கூட வந்தான்.
ஐஸ்க்ரீம் ஸ்கூப் கழுவ ஒரு லிக்விட் வச்சிருந்தாங்க. அதுவும் ஐஸ்க்ரீம் செட் செய்யத்தான்னு நினைச்சு அதையும் எல்லாருக்கும் ஊத்தி குடுத்துட்டேன்.. அன்னிக்கு குடும்பமே சிரிச்சோம்னு சொன்னார் நட்சத்திரா
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications