நவ்யாவை விட அவங்கம்மா எவ்வளவு அழகு.. பிறந்த நாளாம்.. வாழ்த்துங்க!
பெங்களூர்: என்னதான் சொல்லுங்க.. அம்மான்னாலே ஷ்பெஷல்தாங்க.. அதுவும் பெண்களுக்கு அம்மாதான் உலகமே. அப்படிப்பட்ட அம்மாவுக்கு பர்த்டே வாழ்த்து சொல்லியுள்ளார் நம்ம நவ்யா ஸ்வாமி.
பர்த்டே என்றால் வாழ்த்து சொல்வதுதானே.. இதில் என்னங்க விசேஷம் என்று கேட்கறீங்களா.இருக்குங்க. நவ்யாவுக்கு இப்போது கொரோனா பாசிட்டிவ். அதனால் தனிமைப்படுத்தப்பட்டிருக்காங்க. இதை அவரே வீடியோ போட்டும் கூறினார்.
நவ்யாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவரது குடும்பத்தினர் கவலை கொண்டு விட்டனர். ஏன் நவ்யாவே கூட முதலில் கலங்கித்தான் போய் விட்டாராம். ஆனால் பிறகு மனதை தேற்றிக் கொண்டு விட்டார்.

வீட்டில் தனிமையில்
தற்போது தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் நவ்யா ஸ்வாமி. தனது வீடியோவிலும் கூட அவர் தனக்க ஒன்றும் இல்லை. நன்றாக இருக்கிறேன். காய்ச்சல்தான் இருக்கிறது. நம்பிக்கையோடு இருக்கிறேன். நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று தைரியமாகவே கூறியிருந்தார். அதன்படியே அவர் தைரியாமாகவும் இருக்கிறார்.

அம்மாவுக்குப் பர்த்டே
இந்த நிலையில்தான் நவ்யாவின் தாயாருக்குப் பிறந்த நாள். தனது அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அழகான ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார் நவ்யா. நவ்யாதான் அழகு என்றால் அவரது அம்மா அப்படியே அப்சரஸ் மாதிரியே இருக்கிறார். அம்மாவுக்கு இப்ப வாழ்த்துகள் குவியுதுங்க. அம்மாவும் மகளும் அந்தப் புகைப்படத்தில் அத்தனை அழகாக, அம்சமாக இருக்கிறர்கள்.

சந்தோஷமா இருங்கம்மா
நவ்யா போட்டுள்ள அந்தப் பதிவில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.. நான் எங்கிருக்கிறோனே அங்கே நீங்களும் இருக்கீங்க. எப்போதும் உங்க புன்னகை போலவே உங்க வாழ்க்கையும் அழகாக இருக்கட்டும் என்று கூறி அழகாக வாழ்த்தியுள்ளார் தன்னைப் பெற்ற தாயை.. இதை விட வேற என்னங்க வேண்டும் ஒருவருக்கு. அந்த அம்மாவின் மனசு நிச்சயம் குளிர்ந்து போயிருக்கும்தானே.

வாணி ராணி பிரபலம்
ராதிகாவின் அருமையான மெகா சீரியல்களில் ஒன்று வாணி ராணி. அதில் ராதிகாவின் இளைய மருமகளாக வந்தவர்தான் நம்ம நவ்யாங்க. அத்தனை அழகான கதாபாத்திரம் நவ்யாவுக்கு. மூத்த மருமகளாக வந்த நீலிமா ராணி ஒருபக்கம் முறுக்கிக் கொண்டே நிற்பார். ஆனால் அவரிடம் பாந்தமாக பேசி அக்கா என்று வாஞ்சை காட்டி அவருடன் சமரசமாகப் போகும் சாந்த சொரூபி பாத்திரம் நவ்யாவுக்கு. நன்றாகவே செய்திருப்பார்.

நல்ல நடிப்பு
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே. அப்படித்தான் மூத்தாருடன் அனுசரித்துப் போய் ஒரு கட்டத்தில் டென்ஷனாகி எகிற ஆரம்பித்து விடுவார். ஆனாலும் கூட குடும்பத்தின் அமைதி கருதி பின்னால் மீண்டும் இறங்கி வருவார். ரொம்ப அருமையான நடிப்பு நவ்யாவுடையது. அந்த சீரியலில் அவருக்கு நல்ல அடையாளமும் கிடைத்தது. தெலுங்கிலும் சில சீரியல்களைச் செய்தார் நவ்யா. இப்போது நவ்யா விரைவில் நலம் பெற வாழ்த்துவோம். கூடவே அவருடைய அம்மாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லலாம் சரிங்களா.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications