Nayagi Serial: என்னவோ புதுசா சீன் கிரியேட் பண்ணா மாதிரி.. என்னா ஒரு வில்லத்தனம்!
Recommended Video
சென்னை: பள்ளியில் காப்பி அடிப்பது என்பதும், கலைத் துறையில் காப்பி அடிப்பது என்பதும் இன்று சர்வ சகஜமாகி இருக்கிறது. இதுக் குறித்து யாரும் வெட்கம் கொள்வதில்லை, அச்சம் கொள்வதில்லை.
முன்பெல்லாம், ஆங்கில படங்களின் காட்சிகளைத் திருடிவிட்டு, தாங்களே எடுத்தது போல, தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வார்கள். இப்போது, தமிழ்ப் படங்கள் ஸ்க்ரிப்டை திருடி தன்னுடையது என்று படமாக்கி வழக்கை சந்தித்து எப்படியோ தீர்வு கண்டுவிடுகிறார்கள்.
அண்மை காலமாக ஆங்கிலப் படமோ, அல்லது வேறு மொழி படமோ, இல்லை பழைய தமிழ் படமோ அதை அப்படியே தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு, இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

சன் டிவி நாயகி சீரியல்
சன் டிவியின் நாயகி சீரியலில் ஆனந்தியும், திருவும் சேர்ந்து சாக்லேட் கம்பெனி துவங்குகிறார்கள். கம்பெனியே ஆரம்பிக்கவில்லை, நாளைதான் திறப்பு விழா என்றால், அதற்குள் யூனியன் அமைக்க சொல்லி, எதிரியான அதுவும் திருவின் அப்பா கலிவரதனே சொல்லித் தருகிறார்.

லீடர் யூனியன்
யூனியன் லீடர், இரவோடு இரவாக மற்ற லேபர்ஸை அழைத்து, நாளைக்கு நாம் ஸ்ட்ரைக் பண்ணலாம் என்று, சொல்லித் தருகிறான். இதை வேறு ஒரு தொழிலாளி திருவிடம் சொல்லிவிட, இதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யப் போகிறேன் என்று கிளம்பும் போதே நம்மாட்கள் கணித்து இருப்பார்கள்.

கம்பெனி திறப்பு
ரிப்பன் கட் செய்து திறக்கப் போகையில் யூனியன் லீடர் பேசின சம்பளம் பத்தாது. அதைவிட இரட்டிப்பாக வேண்டும் என்று கேட்டு, ரிப்பனை கட் செய்யவிடாமல் தடுக்கிறான். இருந்தும் கம்பெனி நடக்கும் என்று தில்லாக திருவும், ஆனந்தியும் சொல்கிறார்கள்.

மனைவிகள் தொழிலாளிகள்
சரி , நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.. ஆனால், கம்பெனி நடக்கும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, கேட்டைத் திறந்தால், ஸ்ட்ரைக் செய்த தொழிலாளர்களின் மனைவிகள் புருஷன்களைத் திட்டுகிறார்கள். இத்தனை நாள் வேலை இல்லாமல் எப்படி கஷ்டப்பட்டோம். இவ்வளவு சலுகை, சம்பளம் என்று தர்றாங்க. எதுக்குய்யா ஸ்ட்ரைக் பண்ணனும். உனக்கு முடியலேன்னா சொல்லு, நாங்க வேலை பார்த்து, சம்பாதிச்சு உனக்கும் சோறு போடறோம்னு சொல்றாங்க.
இந்த சீன் எந்த படத்திலும், எந்த சீரியலிலும் பார்க்காத மாதிரி தெரியுது இல்லே...என்னா ஒரு வில்லத்தனம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications