Nayagi: தர லோக்கலாக இறங்கி குத்திய தக்ஷனா... அடேங்கப்பா என்னா ஆட்டம்
சென்னை: நாயகி சீரியலில் நடிக்கும் தக்ஷனாவின் தம்பிதான் நம்ம செம்பருத்தி சீரியலில் பார்வதி தம்பியாக வருபவராம். அவர் போட்டுள்ள ஒரு குத்து வீடியோ வைரலாகியுள்ளது.
இப்ப இருக்கிற சூழ்நிலையில திரைப்பட ரசிகர்களுக்கு நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே சின்னத்திரை நாடக நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதை விட பெரிய சுவாரஸ்யம் என்னன்னா.. திண்ணையில் உட்கார்ந்து அன்னினிக்கு வர்ற சீரியலைப் பத்தி சுவாரஸ்யமா அரட்டை அடிப்பது முன்னாடியை விட இப்போ ரொம்பவே அதிகம். அப்படி ஒரு ஈடுபாடு சீரியல்கள் மீது இருக்கு முன்பை விட.

க்யூட்டான மேகலா
அந்த வகையில் தான் செம்பருத்தி சீரியல், நாயகி சீரியல் இருக்கிறது. இந்த இரண்டு சீரியல்களும் டாப்ல தான் இருக்கின்றன. இதுல என்னன்னா இந்த இரண்டு சீரியல்களிலும் அக்காளும் தம்பியும் நடித்திருக்கிறார்கள். அது வேற யாரும் இல்லங்க.. நாயகி சீரியலில் அம்பிகாவின் மகளாக நடித்திருக்கும் தக்ஷனாவின் தம்பிதான் செம்பருத்தி சீரியலில் பார்வதியின் தம்பியாம்.

சுட்டித்தனத்தில் தக்ஷனாவின் வெறித்தனம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த சீரியலில் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக போய்கிட்டு இருக்கு.

அம்பிகாவின் அழகு மகள்
இதுல அம்பிகாவின் மகள் மேகலாவாக நடித்திருக்கிறார் தக்ஷனா. இவர் ஒரு செம க்யூட்டான பொண்ணு.. ரொம்ப துறுதுறுப்பு. ஆட்டம் பாட்டம்னு இறங்கிட்டா அவரைப் பிடிக்கவே முடியாதுங்க. அவர் போட்டுள்ள டிக்டாக் வீடியோக்களைப் பார்த்தாலே தெரியும். அவர் மட்டுமல்லாமல், அவரது தம்பியும் இணைந்து டப்ஸ்மாஷ் வீடியோக்களை எடுத்து குவித்து வருகிறார்கள்.

டாப் டக்கர் டான்ஸ்
இணையதளத்தில் இப்ப இருக்குற ட்ரெண்டு நடிகர் நடிகைகள் போட்டோ ஷாட் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்களை பதிவிடுவது தான். அதேபோலதான் தக்ஷனாவும் பதிவிட்டிருக்கிறார். அவருடைய வீடியோக்களில் டான்ஸ் வெறித்தனமாக இருக்கிறது. அடேங்கப்பா என்னா ஆட்டம்.. இவருடைய டான்ஸை பார்த்து ரசிகர்கள் நீங்க டான்ஸ் ஸ்கூல் ஓபன் பண்ணலாம் அவ்வளவு அழகா இருக்குன்னு கமெண்ட் பண்ணி இருக்காங்க.

குத்துக்கு செம ஆட்டம்
ரசிகர்களே இறங்கி வந்து பாராட்டிட்டாங்களே.. தக்ஷனாவால் சும்மா இருக்க முடியுமா.. அவரும் அதை விட தர லோக்கலாக இறங்கி குத்தியிருக்கிறார் பாட்டுக்களிலும், டான்ஸ்களிலும். "உனக்கென பிறந்தவ ரெக்க கட்டி பறந்தவ இவதான் "என்ற பாட்டுக்கு செமையா ஆடி அது வைரலாகி விட்டது. அவரது வீட்டு மொட்டை மாடியே அதிர்ந்து போயிருக்கும். அப்படி ஒரு ஆட்டம். சேலை கட்டிக் கொண்டு செமத்தியான டான்ஸ் போட்டுள்ளார்.

கலக்கல் தம்பி
இவரது தம்பியும் லேசுபட்டவர் இல்லையாம். செம்பருத்தி சீரியலில் பார்வதியின் தம்பியாக பார்வதி காதலுக்கு தூது சொல்பவராக நடித்திருப்பவர் தான் இவரின் உண்மையான தம்பியாம். பெயர் சஞ்சய். ரசிகர்கள் இருவரின் நடிப்பையும் பாராட்டியிருக்கிறார்கள். தக்ஷனாவின் தம்பி வெள்ளித்திரையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

முதலில் தெய்வ மகள்
தக்ஷனா தெய்வமகள் சீரியல் மூலமாகத்தான் அறிமுகமானார். அந்த சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து தான் நாயகி சீரியலிலும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறதாம். இவருக்கு பாசிட்டிவ் கேரக்டரை விட வில்லி கேரக்டரில் நடிக்க தான் ரொம்ப ஆசையாம். அதற்கேற்ற படிதான் இவரது பாடி லாங்குவேஜும் அம்சமாக இருக்கிறது. அந்த வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் ஒரே டான்ஸ் அமர்க்களம்தான்.. நீங்க ஆடுங்கம்மா.. நாங்க பார்க்கிறோம்னு ரசிகர்களும் ஆசையாக காத்திருக்கிறார்களாம்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications