Nayagi serial: பரபர வசனங்கள்.. விறுவிறுவென மாறி வரும் நாயகி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாமலை படத்தில் பெரும் சவால் விடுவார். மாட்டுப் பண்ணை வைத்து பால் பொருள் தயாரிப்புக்கள் செய்து கிடு கிடுவென்று பணக்காரர் ஆகிவிடுவார்.
இதற்குப் பிறகான படங்கள் பல வகைகளில் இந்த படத்தையே விறு விறு காட்சிகளுக்கு பின்பற்றி படம் எடுத்து வந்தனர். ஒரே நாளில் அண்ணாமலை மாதிரி பணக்காரர் ஆக சொல்றியான்னு கூட பல படங்களில் காமெடி வசனங்கள் வந்ததுண்டு.
இது போன்ற காட்சிகளை கிண்டல் கேலி செய்தால் கூட, கடின உழைப்பு என்பதை காட்சிகளில் விவரித்து கூற முடியுமா என்ன?

சீரியல்களில் எப்போதும்
சீரியல்கள் முடியும் தறுவாயில் கொஞ்சம் குளறுபடிகளை செய்துவிடுகின்றன. விகடன் டெலிவிஸ்டாஸின் தெய்வமகள் சீரியல் கிளைமேக்ஸ் இப்படித்தான் சொதப்பலில் முடிந்தது. இவ்வளவு ஏன், ராதிகாவின் சித்தி சீரியல் கூட கிளைமேக்ஸ் சொதப்பல்தான். இப்போது அந்த வரிசைக்கு நாயகியும் வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனந்தி தொழிலதிபர்
நாயகி சீரியல் ஆனந்தி மிகப்பெரிய தொழிலதிபர் ஆகிய சூழலை அண்ணாமலை படம் போலத்தான் காண்பித்தார்கள். இப்போது நம்பர் ஒன் கம்பெனியாக ஆனந்தி உணவுத் தயாரிப்பு கம்பெனி பிரபலம் அடைந்து இருக்கிறது. கலிவரதனின் கம்பெனி டவுனாகி விட்டது. இப்போது, ஆனந்தியின் அப்பாவிடம் கலிவரதன் ஏமாற்றிய வாங்கிய வீடே தனக்கு வாங்க வேண்டும் என்று ஆனந்தியின் அம்மா ஆசைப்படுகிறார்கள்.

இதுவும் நடக்கும்
சினிமா, சீரியல்களில்தான் எதுவும் நடக்கும்.அது போல ஆனந்தியின் அம்மா ஆசைப்பட்ட அந்த வீட்டை வாங்கித் தருவதாக திரு கூறுகிறான். ஆனால், இதில் அப்பா எப்படி உங்க சொத்தை ஏமாற்றி வாங்கினாரோ, அப்படியே நாமும் அவர் சொத்தை ஏமாற்றி வாங்க வேண்டும் என்று திரு திட்டம் போடுவதை காண்பித்து இருக்கிறார்கள்.

ரேட்டிங் நாயகி
நாயகி சீரியல் ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இனி அடுத்து வரும் சீரியல்களில் ஆனந்தி, அனன்யா குழந்தைகள் சிறுவர் சிறுமிகளாகி மோதிக் கொள்வது போல ப்ரோமோ காண்பித்து வருகிறார்கள். இதனால், சீரியல் முடியும் தறுவாயில் இருக்கிறதோ என்று எண்ணம் வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications