Nayagi Serial: நாயகி திடீர் என திட்டமிடாமல் பயணிக்கிறதே...!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரேட்டிங்கில் முதலிடம் என்கிறார்கள். ஆனால், கதை என்னவோ திடீர் என திட்டமிடாமல் பயணிப்பது போல இருக்கிறது.
அனன்யா குழந்தை அகிலனை வைத்து திருவை அடைய கேவலமான நாடகத்தை எல்லாம் போடுகிறாள்.
குழந்தையை விட்டு வேறு எந்த நாடகத்தை வேண்டுமானாலும் போடு...அப்படி இருந்தால் மட்டும் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் தொடரும் என்று சொல்கிறாள் ஆனந்தி.

அணு வர்றாளா
அப்போதுதான் கலிவரதன் வந்து அணு இன்னிக்கு அமெரிக்காவில் இருந்து வர்றான்னு சொல்லிட்டு போறார். ஓ.. இன்னிக்கு அணு வர்றாளான்னு கேட்டுக்கொள்ளும் அனன்யா.. அப்படின்னா அணுவை வச்சு கேம் விளையாட வேண்டியதுதான்னு சொல்றா.

அணுவுக்கு காதலன்
உடனே அணுவுக்கு ஒரு காதலன் முளைக்கிறான்..அவங்க குடும்பமே அனன்யா சொல்படி ஆடறாங்க.. அணுவுடன் அவள் காதலன் அனன்யா சொல்படி தப்பு செய்துடறான் . அணு இப்போ முழுகாம இருக்காளாம். இதை ஃபிளாஷ்பேக்கில் கூட ஒரு காட்சியிலும் காண்பிக்கவில்லை.

எடுத்தோம் கவிழ்த்தோம்னு..
ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ள ஒரு சீரியலை எடுக்கிறோம்.. அதன் கதையை காட்சி அமைப்பை கோர்வையாக கொண்டு செல்ல வேண்டும் என்கிற பொறுப்பு இல்லாமல் இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம் என்று கதையை கொண்டு போகலாமா?

விகடன்
விகடன் டெலிவிஸ்ட்டாஸுக்கு என்று மாஸான ஒரு பெயர் உள்ளது. நாயகி கடந்த சில வாரங்களாகவே தேவை இல்லாத வேண்டாத காட்சிகள் வசனங்க்கள் என்று அனன்யா ஆனந்தி தொடர்பான காட்சிகளில் சென்று கொண்டு இருக்கிறது.இதைத் தவிர்த்து கதையை கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications