நயன்தாரா, சினேகாவின் செம ஸ்கெட்ச்.. தமன்னா, சமந்தாவின் ரூட்.. பிசினஸில் கலக்கும் நடிகைகள்: பிரபலம்
சென்னை: நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் நடிப்பு தொழிலோடு சேர்த்து, சொந்தமாக வியாபாரங்களையும் செய்து வருகிறார்கள். ஒரு சிலர், தங்களது சினிமா சம்பாத்தியத்தை முதலீடு செய்து சொந்த தொழில் செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். ஒரு சிலர் சினிமாவிலிருந்தே வெளியேறி முழுமையாக தொழில் செய்து பிரபலமாகியுள்ளனர். இதுகுறித்துதான், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
நடிகர் விஜய் தன்னுடைய சொந்த பிராண்டான "மகா" என்ற ஆடை பிராண்டை கொண்டுள்ளார். அதேபோல, நடிகர் ஜீவா தனது நண்பர் அஜய் குமாருடன் சேர்ந்து ஒரு ஓட்டலை நடத்தி வருகிறார்... பிரசாந்த் ஒரு பர்மா நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்றெல்லாம் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் செய்திகள் கசிந்துள்ளன.

100 கோடி சம்பளம்
இந்நிலையில், AG Modern cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நடிகைகளை பொறுத்தவரையில், திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு மார்க்கெட் போய்விடும். அதேபோல, நடிகைகளுக்கு படங்கள் வசூல் அடையாமல் போனால், படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும் மார்க்கெட் போய்விடும்..
ஆனால், ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் போன்றோர் பல வருடங்களாக சினிமாவில் உள்ளார்கள்.. அத்துடன், அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்கள். எனினும் பல நடிகர்கள், நடிகைகள, சினிமாவை நம்பாமல், சினிமாவில் வரும் வருமானத்தை வைத்து, சைடு பிசினஸ்களை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
நடிகைளின் பிசினஸ்கள்
தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற நேரத்தில், நடிகைகளுக்கு பணம் கொட்டி தீர்க்கும். இதையடுத்து, பிசினஸ்களில் இறங்கிவிடுகிறார்கள.. அந்தவகையில், காஜல் & காஜல் என்ற அழகுசாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால்.. இது அவருக்கு மாத மாதம், சில கோடிகளை வருமானமாக அள்ளித் தந்து கொண்டிருக்கிறது. இந்த பிசினஸுக்கு அவரது கணவரும் உதவி கொண்டிருக்கிறார்.
சினேகா சில்க் என்ற பெயரில் மாம்பலத்தில் மிகப்பெரிய பட்டு ஜவுளி கடையை நடத்தி கொண்டிருக்கிறார் நடிகை சினேகா.. ஹோம்லி கேர்ள் என்ற பெயரை பெற்றுள்ளவர் சினேகா.. அவர் ஏராளமான புடவைகளை அணிந்து சோஷியல் மீடியாவில் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் பெண்கள், சினேகா கட்டிக்கொண்டிருக்கும் புடவை போலவே வேண்டும் என்று கேட்கிறார்கள். சினேகாலயா என்ற பெயரில் அந்த பட்டு புடவைகள் பெண்களை கவர்ந்து வருகின்றன.
நடிகை இனியா
அனுரா ஆர்ட் ஸ்டுடியோ என்ற ஆடை வடிவமைப்பு கடையை நடிகை இனியா துவங்கியிருக்கிறார்.. பெண்களை கவரும் அனைத்து வகையான உடைகள், இங்கு விற்பனைக்கு இனியா..
சருமத்துக்கான கிரீம்களையும், பெண்களுக்கான உள்ளாடைகளையும் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருக்கிறார் நயன்தாரா.. அதுமட்டுமல்லாமல் மாதவிலக்கு சமயத்தில் அணிய வேண்டிய உடைகள் பற்றியும், தன்னுடைய தயாரிப்புகளில் உள்ளடக்கியிருக்கிறார். அதேபோல, லிப் பாம் எனப்படும் உதட்டு சாயம் தயாரித்து விற்பனை செய்கிறார் நயன்தாரா.
நடிகர்கள் பிசினஸ்
நடிகை அபர்ணா ஆடையகம் ஒன்றை திறந்து நடத்தி வருகிறார்.. அதேபோல, உணவு பாக்கெட்டுகளை விறபனை செய்யும் தொழிலை செய்து வருகிறார் சமந்தா.. Nourish You என்ற பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், பானங்கள் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஈ-காமர்ஸ் தளமான SustainKart போன்ற பிராண்டுகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகிறார்.
நடிகை சிம்ரன் கிழக்கு கடற்கரை சாலையில் "சிம்ரன் ஓட்டல்" என்ற ரெஸ்ட்டாரண்டை நடத்தி வருகிறார்" என்றெல்லாம் சொல்லியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், சினிமாவில் சம்பாதித்த பணத்தில் பிசினஸ் செய்து வரும் நடிகர்கள் யார் யார் என்பதை பற்றியும் அந்த வீடியோவில் விரிவாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications